Mon ,Apr 22, 2024

சென்செக்ஸ் 73,648.62
560.29sensex(0.77%)
நிஃப்டி22,336.40
189.40sensex(0.86%)
USD
81.57
Exclusive

Itel A23S Specs in Tamil Nadu: இப்படி ஒரு போன் வரப்போகுதுன்னு எத்தனை பேத்துக்கு தெரியும்!

Priyanka Hochumin July 26, 2022 & 17:15 [IST]
Itel A23S Specs in Tamil Nadu: இப்படி ஒரு போன் வரப்போகுதுன்னு எத்தனை பேத்துக்கு தெரியும்!Representative Image.

Itel A23S Specs in Tamil Nadu: இந்தியாவைப் பொறுத்தவரை ஸ்மார்ட்போன் என்றாலே - ரெட்மி, சியோமி, ஒப்போ, போக்கோ என்ற பிராண்ட்களுக்குத் தான் மவுசு. ஆனால் இவர்களுக்கு போட்டியாக இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது Itel A23S என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன். இதனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை போன்ற முழு விவரங்களையும் பற்றி பார்க்கலாம்.

ஷ்கிரீன் சின்னது ஆனா பவர் அதிகம்

இந்த ஸ்மார்ட்போன் வெறும் 5 இன்ச் டிஸ்பிளே மற்றும் 480x854 பிக்சல் ரிசொல்யூஷனைக் கொண்டுள்ளது. மேலும் இது முன் கேமரா மற்றும் நேவிகேஷன் டச் பட்டன்களை வைப்பதற்காக ஷ்கிரீனின் மேல் மற்றும் கீழ் தடிமனான சமச்சீர் பெசல்களைக் (thick symmetrical bezels) கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் quad-core Unisoc SC9832E பிராஸசர் மூலம் இயக்கப்படுகிறது.

முன்னும் பின்னும் LED பிளாஷ் கேமரா...

நீங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு நச்சுன்னு போட்டோ எடுக்க, இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 2 மெகாபிக்சல் ரியர் கேமரா உடன் எல்இடி பிளாஷ் பொருத்தப்பட்டுள்ளது. அதே போல் செல்பீ மற்றும் வீடியோ கால் பேச முன்புறத்தில் எல்இடி ஃபிளாஷ் கொண்ட VGA எதிர்கொள்ளும் சென்சார் இடம்பெற்றுள்ளது. இதில் இருக்கும் குவாட் கோர் பிராஸசர் 2GB ரேம் மற்றும் 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டு வந்துள்ளது. ஸ்டோரேஜின் அளவை மைக்ரோ எஸ்டி கார்டு பயன்படுத்தி 32GB வரை நீடிக்க முடியும் வசதியுள்ளது.

24 மணி நேரம் வரை தாங்கும் பேட்டரி

இந்த புது ஸ்மார்ட்போன் 24 மணிநேரம் 4G டாக் டைம் வழங்கும் 3,020mAh பேட்டரியுடன் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் கிடைக்கும் கூடுதல் அம்சங்கள் ஸ்மார்ட் ஃபேஸ் அன்லாக், வாட்ஸ்அப் கால் ரெகார்டிங், மல்டி-லேங்குவேஜ் சப்போர்ட் மற்றும் பல இதில் கிடைக்கும். மேலும் இணைப்பு விருப்பங்களில் Wi-Fi மற்றும் Bluetooth v4.2 வயர்லெஸ் இணைப்பை ஆதரிக்கிறது மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜாக்கும் உள்ளது.

இதனை மொழியில் பயன்படுத்த முடியுமா?

Itel A23S அதிவேக இரட்டை 4G VoLTE இணைப்பு மற்றும் HD வீடியோ அழைப்புகளை ஆதரிக்கிறது. இது தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, தெலுங்கு, பஞ்சாபி, அஸ்ஸாமி, பெங்காலி, கன்னடம், மலையாளம், காஷ்மீரி, உருது, நேபாளி, மராத்தி மற்றும் ஒரியா உள்ளிட்ட 14 கூடுதல் இந்திய மொழிகளை ஆதரிக்கிறது. மேலும் பீக் மோட், கால் அலெர்ட் மற்றும் ஸ்டேட்டஸ் சேவ் போன்ற கூடுதல் விருப்பங்களும் இதில் காணப்படுகிறது.

விலைய கேட்ட நம்பவே மாட்டீங்க

இந்த ஸ்மார்ட்போன் ஓஷன் ப்ளூ, ஸ்கை சியான் மற்றும் ஸ்கை பிளாக் கலர் ஆகியாய் நிறங்களில் கிடைக்கும். இதனின் விலை வெறும் ரூ. 5,299/- மட்டுமே. இது கூடிய விரைவில் ஆன்லைன் மற்றும் ரீடைல் கடைகளில் கிடைக்கும்.

Itel A23S Specs in Tamil Nadu, itel a23s price, itel a23s pro, itel a23s specs and price in Nigeria, itel a23s pro specs, itel a23s firmware, itel a23s network unlock, itel a23s features,


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்