Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Xiaomi Pad 6 | இந்த விலைல இப்படி ஒரு டேப்லெட் வந்ததில்ல!

Abhinesh A.R Updated:
Xiaomi Pad 6 | இந்த விலைல இப்படி ஒரு டேப்லெட் வந்ததில்ல!Representative Image.

Xiaomi Pad 6 Specs: சியோமி இந்தியா நிறுவனம் புதிய கேட்ஜெட்டுகளை குறைந்த விலையில் அறிமுகம் செய்துவருகிறது. டெக் சந்தையில் தனக்கென ஒரு இடம் வைத்திருக்கும் இந்நிறுவனம், தனது புதிய டேப்லெட் கணினி மூலம் புதிய வரலாறை படைத்துள்ளது. சியோமி பேட் 6 பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள டேப்லெட், பல சிறப்பம்சங்களைக் கொண்டு குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முந்தைய பேட் 5 மாடல் டேப்லெட் சீனாவில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இந்தியாவில் புதிய பேட் 6 கொண்டுவரப்பட்டுள்ளது. இதனுடன் நிறுவனம் ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் இயர்பட்ஸ் ஹெட்போனையும் பயனர் பார்வைக்கு வைத்தது.

Xiaomi Pad 6 | இந்த விலைல இப்படி ஒரு டேப்லெட் வந்ததில்ல!Representative Image

சியோமி பேட் 6 அம்சங்கள்

திரை: Xiaomi Pad 6 ஆனது 2880 x 1800 பிக்சல்கள், 16:10 திரை விகிதம், 30/48/50/60/90/120/144hz மாறக்கூடிய ரெப்ரெஷ் ரேட், 240Hz தொடுதிறன் வீதம் உடன் 11” இன்ச் 2.8K டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. எச்டிஆர்10, டால்பி விஷன், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு போன்றவையும் இதில் அடங்கும்

சிப்செட்: அட்ரினோ 650 GPU உடன் 7 நானோ மீட்டரில் கட்டமைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 புராசஸர் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ரேம் / சேமிப்பு:  இதில் 8ஜிபி LPDDR5 ரேம், 256ஜிபி UFS 3.1 சேமிப்பகத்தைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: Xiaomi Pad 6 ஆனது Android 13 OS இல் நிறுவப்பட்ட MIUI 14 கொண்டு இயங்குகிறது.

கேமராக்கள்: இதில் f/2.2 PDAF உடன் கூடிய 13எம்பி பின்புற கேமராவைக் கொண்டுள்ளது. செல்ஃபிகள், வீடியோ அழைப்புகளுக்காக 8எம்பி லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

பேட்டரி: இரண்டு நாள்கள் தாங்கும் பேட்டரியை சியோமி பேட் 6 கொண்டுள்ளதாக நிறுவனம் கூறுகிறது. அதன்படி 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 8840mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

இணைப்பு: Wi-Fi 6, புளூடூத் 5.2, USB டைப்-சி 3.2 போன்ற இணைப்பு ஆதரவுகளும் உள்ளன.

Xiaomi Pad 6 | இந்த விலைல இப்படி ஒரு டேப்லெட் வந்ததில்ல!Representative Image

சியோமி பேட் 6 விலை மற்றும் இணைப்புக் கருவிகள்

- இந்தியாவில் Xiaomi Pad 6 விலை 6GB + 128GB மாடலுக்கு ரூ.26,999 ஆகவும், 8GB + 256GB மாடலுக்கு ரூ.28,999 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Mi.com, Amazon, Xiaomi ரீடெய்ல் ஸ்டோர்களில் இதை வாங்கலாம்.

- இந்த டேப்லெட்டின் விற்பனை ஜூன் 21ஆம் தேதி தொடங்கும்.

- ஐசிஐசிஐ வங்கி கார்டுகள் மூலம் வாங்கினால் ரூ.3,000 நேரடி தள்ளுபடி கிடைக்கிறது.

- இரண்டாம் தலைமுறை Xiaomi Smart Pen விலை ரூ. 5,999 ஆக உள்ளது. ஜூன் 21 முதல் இது விற்பனைக்கு வருகிறது.

- Xiaomi Pad 6 Smart Cover விலை ரூ.1,499 ஆகும். ஒரு பாதுகாப்பு கேஸாகவும், காந்த தன்மையுடன் கூடிய இணைப்பு கருவிகளை பயன்படுத்தும் வகையிலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

- Xiaomi Pad 6 Keyboard விலை ரூ. 4,999 ஆகும். இதன் விற்பனை ஜூன் 21 முதல் தொடங்குகிறது.

- Redmi Buds 4 Active இயர்பட்களின் விலை ரூ.1,199 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜூன் 20 முதல் இதனை பயனர்கள் வாங்கலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்