Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Jio Phone 5G : மலிவு விலையில்... அருமையான குவாலிட்டி ஸ்மார்ட்போன் ! எவ்வளவு தெரியுமா..?

Manoj Krishnamoorthi Updated:
Jio Phone 5G : மலிவு விலையில்... அருமையான குவாலிட்டி ஸ்மார்ட்போன் ! எவ்வளவு தெரியுமா..?Representative Image.

இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஜியோ நிலையான இடத்தை தக்க வைத்துள்ளது. ஸ்மோர்ட் போன் நிறுவனங்கள் 4ஜி மாடல் தயாரிக்கும்போது தன் ஜியோ சிம்மை அறிமுகப்படுத்தி 4ஜி மார்க்கெட்டை தன் கைவசம் வைத்து கொண்டது. மிக குறைவான விலையில் மொபைல் மட்டும் 4ஜி டேட்டாவை கொடுத்து இந்தியாவில் தொலைத்தொடர்பு துறையில் மிகப்பெரிய அந்தஸ்தை பெற்று கொண்டது. 

ரிலையன்ஸ் ஜியோ தன் முதல் 5ஜி  ஸ்மார்ட்போனை 2022 ஆம் ஆண்டு லான்ச் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஜியோ போன் 5ஜி மிக குறைந்த விலையில் மார்க்கெட்டில் விற்பனை செய்ய உள்ள 5ஜி மொபைல் ஆகும்.  விற்பனைக்கு தயார் நிலையில் இருக்கும் ஜியோ போன் 5ஜி போனின் சிறப்புகள் பற்றி இங்கு பார்ப்போம். 

சிறப்பம்சங்கள் (Jio Phone 5g Specifications )

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கூகுள் நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன் 5ஜி மொபைல் போன்களை தயாரிக்க உள்ளதாக அறிவித்தது. 2022 ஆ ஆண்டு வெளியாக வேண்டிய இந்த போன் JIO LS1654QB5 என்னும் மாடல் எண் உடன் வெளிவந்தது.

ஜியோ நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 480+Soc சிப் மற்றும் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் கொண்டதாக இருக்கலாம். மற்ற ஸ்மார்ட்போன்கள் போல 5000 mAH பேட்டரி, நீண்ட நேர பேட்டரி பேக்அப் அளிக்கும். 13 mp, 2 mp இரண்டு பின்புற கேமரா மற்றும் 8 mp செல்பி கேமரா இந்த தொலைப்பேசிக்கு க்ளியரான பிச்சர் குவாலிட்டி அளிக்கிறது. ஜியோ போன் 5ஜி  6.5 inch hd + LCD 90Hz டிஸ்பலே அமைப்பில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், மற்ற முன்னணி நிறுவனம் 4ஜி, 5ஜி மொபைலில் இருக்கும் ஆப்சன் இருந்தாலும் ஜியோ குறைந்த விலையில் அளிக்கும் என்பதால் இதன் விலை 8,000- 15,000 ரூபாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்