Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 72,488.99
-454.69sensex(-0.62%)
நிஃப்டி21,995.85
-152.05sensex(-0.69%)
USD
81.57
Exclusive

பல கோடி வருடங்கள் ஆனாலும்...மனிதர்கள் இந்த நிலையை...தொடவே முடியாது! அப்ப Avengers-லாம் பொய்யா?

Priyanka Hochumin October 22, 2022 & 21:00 [IST]
பல கோடி வருடங்கள் ஆனாலும்...மனிதர்கள் இந்த நிலையை...தொடவே முடியாது! அப்ப Avengers-லாம் பொய்யா?Representative Image.

பிரபஞ்சத்தில் வாழும் உயிரங்களின் நாகரிகத்தை கணக்கிட ரஷ்யன் வானியல் இயற்பியலாளர் (astrophysicist) நிகோலாய் கர்தாசேவ் என்பவர் 1964 ஆம் ஆண்டு கர்தாஷேவ் அளவுகோல் (kardasev scale) என்பதை உருவாக்கியுள்ளார். அதை வைத்து அவர் மூன்று வகையான நாகரீகங்களை கணக்கிடுகிறார். ஆனால் மற்ற இயற்பியலாளர் (physicist) அதை மறுக்கின்றனர். அதையும் தாண்டி உயிரங்களால் வளர்ச்சியடைய முடியும் என்று கூறுகின்றனர். அவர்கள் தெரிவிக்கும் கூற்றுப்படி பார்க்கையில், அடுத்து இருப்பது

பல கோடி வருடங்கள் ஆனாலும்...மனிதர்கள் இந்த நிலையை...தொடவே முடியாது! அப்ப Avengers-லாம் பொய்யா?Representative Image

Type 4 Civilization

இதனை Universal Civilization என்று கூறுவர். இந்த வளர்ச்சியை அடைந்தவர்கள் பிரபஞ்சத்தில் பயணிப்பதற்காக Warm hole-களை உருவாகும் திறனுடையவர்களாக இருப்பார்களாம். அந்த warm hole-ஐ உருவாக்க, அவர்கள் supernova வெடித்து வெளிப்படுத்தும் எனர்ஜிகளை பயன்படுத்தும் அளவிற்கு வளர்ச்சி அடைந்திருப்பார்களாம். ஒரு கேலக்சியில் 40 வருடத்திற்கு ஒரு முறை ஏதேனும் ஒரு supernova-வில் வெடுப்பு நிலை நடக்கும். எனவே, இந்த எனர்ஜியை பெறுவதற்காக Type 4 Civilization இல் இருப்பவர்கள் கேலக்சி டூ கேலக்சி செல்பவர்களாக இருப்பார்களாம். இந்த வளர்ச்சியை மனிதர்கள் அடைந்து விட்டால் எந்த ஒரு உயிரினத்தையும் நம்மால் உருவாக்க முடியும் என்று இயற்பியலாளர்கள் கூறுகின்றனர்.

பல கோடி வருடங்கள் ஆனாலும்...மனிதர்கள் இந்த நிலையை...தொடவே முடியாது! அப்ப Avengers-லாம் பொய்யா?Representative Image

Type 5 Civilization

இந்த நாகரீகத்தை Multiverse Civilization என்று கூறுவார்கள். இந்த நாகரிகத்தை அடைந்த உயிரினங்கள் நம்முடைய பிரபஞ்சத்தை போல இருக்கும் மற்ற பிரபஞ்சத்திற்கு இவர்களால் ஈஸியா போக முடியுமாம். அதற்கான எனர்ஜியை பெற white hole-கள் தேவைப்படும். இது black hole என்பதற்கு எதிரான ஒரு astronomical body. எப்படி என்றால்,  white hole தொடர்ந்து இறையையும், எனர்ஜியையும் வெளியிட்டுக் கொண்டே இருக்கும். இந்த  white hole, கேலக்சியை விட தோராயமாக 14 மில்லியன் மடங்கு எனர்ஜியை வெளிப்படுத்தும் என்று கணக்கிடுகின்றனர். 

பல கோடி வருடங்கள் ஆனாலும்...மனிதர்கள் இந்த நிலையை...தொடவே முடியாது! அப்ப Avengers-லாம் பொய்யா?Representative Image

Type 6 Civilization

இதனை Multi-Dimensional Civilization என்று சொல்வார்கள். நம்முடைய இந்த பிரபஞ்சம், ஒரு முப்பரிமாண உலகத்தை (three-dimensional world) சார்ந்தது. இந்த நாகரீகத்தில் வசிப்பவர்கள் - இந்த பரிமாணத்தில் இருந்து வேற பரிமாணத்திற்கு செல்லும் அளவிற்கு வளர்ச்சியை அடைந்து இருப்பார்களாம். இந்த வளர்ச்சியை மட்டும் நாம் அடைந்து விட்டோம் என்றால், டைம் ட்ராவல் போன்று காலத்தின் முன்னால், பின்னால் என்று எங்கையும் போக முடியும். இந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்து விட்டால் இந்த நாகரீகத்தில் வாழும் ஜீவா ராசிகளுக்கு மரணம் என்ற ஒன்று இருக்கவே இருக்காது.

மனிதர்களாகிய நாம் இந்த மூன்று Civilization நிலையை அடைவது என்பது 0.0000000001%-க்கும் குறைவு என்று இயற்பியலார்கள் கூறுகின்றனர். இதையெல்லாம் பார்க்கும் போது அப்படியே மார்வெல் avengers படத்தை பார்ப்பது போல இருக்கும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்