Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Mi Band 7 Launch Date in India: வெளியாகிவிட்டது Xiaomiயின் லேட்டஸ்ட் ஸ்மார்ட் பேண்ட்...அதுவும் இப்படி பட்ட அம்சங்களுடன்!

Priyanka Hochumin May 24, 2022 & 12:10 [IST]
Mi Band 7 Launch Date in India: வெளியாகிவிட்டது Xiaomiயின் லேட்டஸ்ட் ஸ்மார்ட் பேண்ட்...அதுவும் இப்படி பட்ட அம்சங்களுடன்!Representative Image.

Mi Band 7 Launch Date in India: Xiaomi நிறுவனத்தின் லேட்டஸ்ட் Mi Band 7 இன்று சீனாவில் வெளியாகியுள்ளது. Redmi Note 11T சீரிஸ் உடன் வெளியாகும் இந்த ஹெல்த் பேண்ட், தற்போது JD.com இல் நிறுவனத்தின் ஸ்டோர்ஃபிரண்டில் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். இந்த Mi Band 7 ஹெல்த் பேண்ட் ரெகுலர் மற்றும் NFC என இரண்டு வகைகளில் முன்பதிவு செய்துகொள்ள வழிவகுக்கிறது. இன்று மே 24 சீனாவில் Xiaomi நிறுவனம் வெளியிட்டதை தொடர்ந்து, ஸ்மார்ட் பேண்ட் இன் அம்சங்கள் பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது.

Xiaomi ஸ்மார்ட்ஃபோன் துறையின் மூத்த துணைத் தலைவரும் தலைவருமான Zeng Xuezhong Weibo, " Mi Band 7 ஒரு பெரிய ரன் அவே வடிவ டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது" என்று ஒரு போஸ்டில் தெரிவித்தார். மேலும் இந்த ஹெல்த் பேண்ட் NFC செயல்பாட்டைப் பெறும் மற்றும் 300க்கும் மேற்பட்ட பேருந்து அட்டைகளை உள்ளடக்கும் என்றும் Xuezhong கூறினார். இதுவரை வந்த பேண்ட்களில் இதுவே மிகவும் வலிமையான பேண்ட் ஆக திகழும் என்றும் அவர் கூறினார்.

Mi Band 7 அம்சங்கள் | Mi Band 7 Watch

Mi பேண்ட் 7 1.62-inch AMOLED டிஸ்பிலே மற்றும் 25 சதவீதம் லார்ஜ் வியூவிங் பகுதியை கொண்டுள்ளது. மேலும் ஜிபிஎஸ் ஆதரவு, எப்போதும் ஆன் டிஸ்ப்ளே மற்றும் 192x490 பிக்சல் டிஸ்ப்ளே போன்ற அம்சங்களையும் வரவிருக்கும் ஹெல்த் பேண்ட் கொண்டிருக்கும் என்று சமீபத்தில் வெளிவந்த அறிக்கை தெரிவித்துள்ளது. அதே போல் பிட்னெஸ் பேண்ட்கள் போல் M2129B1 மற்றும் M2130B1 எண்களைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதலாக, Mi பேண்ட் 7 பேட்டரி ஆயுளை நீட்டிப்பதற்காக பவர் சேவிங் மோடைப் பெறுவதாக கூறப்படுகிறது. மேலும் நீங்கள் பவர் சேவிங் மோடை பயன்படுத்தினால், வெறும் நீங்கள் நாடாகும் படிகளின் எண்ணிக்கை மற்றும் அடிப்படை உறக்கத் தகவல் மட்டுமே பதிவு செய்யும் என்று கூறப்படுகிறது. நீங்கள் இந்த வாட்ச்சை அணிந்துக் கொண்டு காலை 5 மணிக்கு அலாரம் வைத்து தூங்கலாம். ஒரு வேலை உங்களுக்கு லேசான தூக்கம் இருந்தால், 30 நிமிடங்களுக்கு முன்பே எழுப்புவதற்கு ஃபிட்னஸ் பேண்டில் ஸ்மார்ட் அலாரம் அம்சம் கொண்டிருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த பேண்ட்டின் விலை மற்றும் எப்பொழுது கிடைக்கும் (Mi Band 7 Release Date), எந்தெந்த நாடுகளில் கிடைக்கும் போன்ற விவரங்கள் இன்னும் நிறுவனம் வெளியிடவில்லை.

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்