Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Fire Boltt Smart Watch: 1.69 இன்ச் டிஸ்பிலே...5 கலர் வெரைட்டி...7 நாள் பேட்டரி ஃலைப்...60 ஸ்போர்ட்ஸ் மோடு அத்தனையும் எவ்ளோ?

Priyanka Hochumin May 23, 2022 & 18:15 [IST]
Fire Boltt Smart Watch: 1.69 இன்ச் டிஸ்பிலே...5 கலர் வெரைட்டி...7 நாள் பேட்டரி ஃலைப்...60 ஸ்போர்ட்ஸ் மோடு அத்தனையும் எவ்ளோ?Representative Image.

Fire Boltt Smart Watch: இதுவரை வந்த Fire Boltt ninja வாட்ச்களில் இதுவே மிகவும் லேட்டஸ்ட்டான மாடல். இந்த மாடல் இந்தியாவில் வெளியாகிவிட்டது, நீங்கள் வாங்க விரும்பினால் தாராளமாக வாங்கலாம். இதில் கூடுதலாக இருக்கும் சிறப்பம்சங்கள் என்னவென்றால் தண்ணீர் குடிப்பதற்கு ரிமைண்டர், மியூசிக் கண்ட்ரோல் போன்றவை இடம்பெற்றுள்ளது. இதனுடைய விலை மற்றும் விவரக்குறிப்புகளைத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

Fire Boltt Ninja 3 அம்சங்கள் | Fire Boltt Ninja 3 Specifications

1.69 இன்ச் டிஸ்பிலே கொண்டுள்ளது Fire Boltt Ninja 3 ஸ்மார்ட் வாட்ச் மற்றும் 240x280 பிக்சல்கள் தீர்மானம் கொண்டது. உங்களுக்கு பிடித்த வகையில் வாட்ச்சின் முகப்பை மாற்றிக்கொல்லும் வசதியும் இடம்பெற்றுள்ளது. நீங்கள் செல்லும் இடத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்தி கொள்ளுங்கள். மேலும் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெஸிஸ்டண்ட்டிற்கான மதிப்பீடான IP68-ஐ பெற்றுள்ளது. இதில் இருக்கும் மிக முக்கிய அம்சம் தான் இந்த ஸ்மார்ட் வாட்ச் அதிகமாக விற்பனைக்கு வழிவகுக்கிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Apple-ல் மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட்…! இனி அதிரப் போகுது….!

ஸ்போர்ட்ஸ் மோடு | Fire Boltt Ninja 3 Specifications

அது தான் சுமார் 60 வகையான ஸ்போர்ட்ஸ் மோடு அம்சமாகும். தற்போது பயனர்கள் தாங்கள் உடற்பயிற்சி செய்வதை கண்காணிக்கும் வகையில் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த ஸ்மார்ட் வாட்ச்சிலோ கிட்டத்தட்ட 60 வகையான ஸ்போர்ட்ஸ் விளையாடும் பொழுது கண்காணிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஈச்ச முழுக்க முழுக்க இளைஞர்களை குறிவைத்து உருவாக்கப் பட்டது, குறிப்பாக ஜெனெரேஷன் Z என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த Fire Boltt Ninja 3 ஸ்மார்ட் வாட்ச் கிட்டத்தட்ட 7 நாட்களுக்கு பேட்டரி ஆயுளை தருகிறது. மேலும் 25 நாட்களுக்கு காத்திருப்பு நேரத்தையும் (standby time) வழங்கும் என்று கூறப்படுகிறது.  

6.62 இன்ச் AMOLED டிஸ்பிலே...80W பாஸ்ட் சார்ஜிங்...பல அட்டகாசமான அம்சங்களுடன் வரப்போகிறது!

ரியல் டைம் ஹெல்த் மதிப்பீடு | Fire Boltt Ninja 3 Specifications

அது மட்டுமல்லாது உங்களின் உடல் உறுப்புகளையும், ஆரோக்கியத்தையும் கண்காணிக்கை சில அம்சங்கள் இந்த Fire Boltt Ninja 3 ஸ்மார்ட் வாட்ச்சில் இடம்பெற்றுள்ளது. ஒரு SpO2 டிராக்கர், டைனமிக் ஹார்ட் ரேட் டிராக்கர் மற்றும் தூக்க கண்காணிப்பு ஆகியவையாகும். கூடுதலாக, இந்த ஸ்மார்ட் வாட்ச் அணிதிருப்பவர் - தண்ணீர் குடிப்பது, இசை கட்டுப்பாடு, வானிலை அறிவிப்புகள், உட்காருவதை நினைவூட்டுவது மற்றும் கேமரா கட்டுப்பாடு ஆகியவை கண்காணித்துக்கொள்ளலாம். இந்த ஸ்மார்ட் வாட்ச் வாங்க உங்களை சமாதானப்படுத்த இந்த விவரங்கள் போதுமா? இல்லை இன்னும் வேண்டுமா?

14 இன்ச் டிஸ்பிலே...80 நிமிட சார்ஜ்...20 மணி நேரம் பிலே டைம்...அட்டகாசமான லான்ச்!

விலை | Fire Bollt Ninja 3 Price in India 

Fire Boltt Ninja 3 நீங்கள் வாங்க வேண்டும் என்று முடிவு செய்தால், நேராக அமேசான் சென்று வெறும் ரூ. 1,799/-க்கு வாங்கிகொள்ளலாம். மேலுக்கும் பிளாக், ப்ளூ, டார்க் ப்ளூ, ரோஸ் கோல்டு மற்றும் சில்வர் ஆகிய ஐந்து நிறங்களில் கிடைக்கும். உங்களுக்கு பிடித்த நிறத்தில் வாங்கி மனதார போட்டு பயன்பெறுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்