Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Motorola Edge 30 Ultra Price in India: வெறும் 50,60-லாம் இல்ல...200 மெகாபிக்சல் கொண்ட முதல் ஸ்மார்ட்போன்...ஆனா விலை இவ்ளோ கம்மியா?

Priyanka Hochumin September 15, 2022 & 11:00 [IST]
Motorola Edge 30 Ultra Price in India: வெறும் 50,60-லாம் இல்ல...200 மெகாபிக்சல் கொண்ட முதல் ஸ்மார்ட்போன்...ஆனா விலை இவ்ளோ கம்மியா?Representative Image.

Motorola Edge 30 Ultra Price in India: மக்களே போனின் கேமரா மீது அதிக பிரியம் கொண்டவர்களுக்கு இது ஒரு நற்செய்தி. மோட்டோரோலா நிறுவனம் இரண்டு நாட்களுக்கு முன்பு Motorola Edge 30 Ultra மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. அறிமுகம் ஆவதற்கு முன்பே போனின் கேமரா மெகாபிக்சல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஏனெனில் இந்தியாவில் முதல் முறையாக 200 மெகாபிக்சல் கொண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் இதுவே ஆகும். அதுமட்டுமின்றி 125W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் இதில் இருக்கும் கூடுதல் ஸ்பெசாலிட்டியாகும்.

ஒரே வேரியண்ட் ஒரே விலை...

Motorola Edge 30 Ultra ஆனது 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ. 54,999/-க்கு விற்பனையாகிறது. இந்த டிவைஸ் வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி பிளிப்கார்ட் மூலம் விற்பனைக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. Interstellar Black மற்றும் Starlight White என்னும் இரண்டு கலர் ஆப்ஷன் மட்டுமே இருப்பதால் இதில் உங்களுக்கு பிடித்ததை வாங்கி கொள்ளுங்கள். அடுத்தது எப்பையும் போல தான், ஆக்சிஸ் பேங்க் மற்றும் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் ரூ. 3000/- தள்ளுபடி வழங்கப்படும்.

டிஸ்பிளே மட்டும் லேசு பட்டது இல்ல!

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா 6.7' இன்ச் முழு எச்டி+ pOLED டிஸ்பிளே மற்றும் 144Hz உடன் கூடிய  தெளிவுத்திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகவும் தெளிவான காட்சி அனுபவத்தை வழங்குவதால் நீங்கள் நீண்ட நேரம் தாராளமாக இதனை பயன்படுத்தலாம். மேலும் இது Snapdragon 8+ Gen 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

கேமரா சும்மா செமையா இருக்கு...

முன்பே கூறியது போல ரியர் கேமரா 200MP சாம்சங் HP1 பிரைமரி சென்சார் உடன், 50MP அல்ட்ராவைடு கேமரா மற்றும் 2x ஆப்டிகல் ஜூம் ஆதரவுடன் 12MP டெலிஃபோட்டோ ஷூட்டருடன் பொருத்தப்பட்டுள்ளது. முன்புறத்தில் 60MP செல்பி கேமரா உடன் பஞ்ச் ஹோல் கட்அவுட் வடிவமைப்பை பெற்றுள்ளது. மேலும் 8GB LPDDR5 ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவை கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான MyUX 4.0 இயங்குதளத்தில் இயக்குகிறது.

சூப்பர் பாஸ்ட் பேட்டரி...

இது 125W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன், 50W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 4610mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இன்னும் கூடுதலாக ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஒரு USB டைப்-சி போர்ட் இத்துடன் வருகிறது. இந்த தகவல் போதும் நீங்கள் ஒரு தெளிவான முடிவெடுக்க. போட்டோவிற்கு மட்டும் அல்லது உங்களுக்கு வெளிச்சம் அதிகம் கிடைக்கும் வகையில் இந்த போனை வாங்கி பயன் பெறுவீர்களாக.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்