Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சில நாடுகளில் மட்டும் சூரியன் மறைவே இல்லையா!!!

Vaishnavi Subramani Updated:
சில நாடுகளில் மட்டும் சூரியன் மறைவே இல்லையா!!! Representative Image.

இந்த உலகில் பல வகையான நிகழ்வுகள் நடக்கிறது மற்றும் பல விநோதமான நிகழ்வுகள் உள்ளடக்கி உள்ளது. ஒருநாள் இரவு வரவில்லை என்றால் நமக்கு மிகவும் கவலையாக இருக்கும். ஆனால் இரவே வராமல் பகலாக இருந்தால் எப்படி இருக்கும் அப்படி இந்த பூமியில் இடம் உள்ளதா எனப் பலரும் யோசிப்பார்கள். அது உண்மையான ஒன்று சில நாடுகள் உள்ளது. அங்கு ஆறு மாதம் பகலாகவும் அடுத்த ஆறு மாதம் முழு இரவாகவும் இருக்கும். இந்த பதிவில் அப்படி உள்ள சில நாடுகளைப் பற்றிப் பார்க்கலாம்.

சில நாடுகளில் மட்டும் சூரியன் மறைவே இல்லையா!!! Representative Image

பூமியின் மாற்றம்

பூமி ஆனது 23.4 டிகிரி சாய்ந்து சுற்றுவதால் இந்த மாற்றம் ஏற்படுகிறது. இந்த பூமியானது சாய்ந்து சுற்றுவதால் கோடைக்காலத்தில் முழுவதுமாக பகலாகவும் மற்றும் பனிக்காலத்தில் முழுவதுமாக இரவாகவும் இருக்கும்.

கோடைக்காலத்தில் சூரியன் உதயம் மற்றும் மறைவு என்பது இல்லை மற்றும் பனிக்காலத்தில் நிலவு உதயம் மற்றும் மறைவு என்பது கிடையாது.

சூரியன் ஆனது காலையில் சாய்வாக ஒருபக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்குச் செல்லும். இதுபோல் ஆறு மாதம் பகல் மற்றும் இரவு என மாறும். இது பூமியின் வட  மற்றும் தென் துருவத்தில் உள்ள நாடுகளில் நடக்கும். எந்த நாடுகளில் நடக்கிறது எனப் பார்க்கலாம்.

சில நாடுகளில் மட்டும் சூரியன் மறைவே இல்லையா!!! Representative Image

இந்தியா

இங்குக் கோடைக்காலம் முழுவதும் சூரியன் உதயம் எப்பொழுதும் போல் இல்லாமல்  ஒரு மணிநேரத்திற்கு முன்பாகவே சூரிய உதயம் இருக்கும் அதே போல் மறைவு வெகுநேரம் கழித்து மறையும். பனிக்காலத்தில் இரவு நேரம் என்பது அதிகமாக இருக்கும்.

அந்த காலநிலை சிலரது உடல்  நிலையின் தன்மை மாறுபடும். அதனை சிலரால்  தாங்குவது என்பது மிகவும் கடினம். ஆறு மாதம் பகலாகவும் அடுத்த ஆறு மாதம் இரவாக இருக்கும் என்றால் அங்கு இருக்கும் மக்கள் வாழ்வில் ஏற்படும் பல வகையான சூழ்நிலைகள் மற்றும் கால நிலை மாற்றம் நேரம் கணிப்பு எனப் பல பிரச்சனைகளை எப்படிச் சரிசெய்வார்கள்.

சில நாடுகளில் மட்டும் சூரியன் மறைவே இல்லையா!!! Representative Image

பின்லாந்து

இந்த நாடு சுற்றுலா பயணிகள் அதிகளவில் பார்வையிடும் இடம் ஆக மாறி உள்ளது. இந்த நாட்டில் சூரிய வெளிச்சம் என்பது 73 நாட்கள் மட்டும் தான் இருக்கும். மற்ற நாட்களில் அனைத்தும் பனியாகதான் இருக்கும்.

இங்கு இருக்கும் மக்கள் அந்த சூழ்நிலை ஏற்றார் போல் மாறிவிட்டனர். சூரிய வெளிச்சம் பார்ப்பதற்கு அழகான காட்சியாக அமையும். அதனால் இங்குப் பல சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். இங்கு இருக்கிறது பல வீடுகளில் மாடி என எதுவும் இல்லாமல் கூறை போன்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது.

சில நாடுகளில் மட்டும் சூரியன் மறைவே இல்லையா!!! Representative Image

பனிக்காலத்தில் அதிகமாகப் பனிபொழிவினால் அதைச் சுத்தம் செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும். அதனால் இங்குப் பலரும் கூறை போன்ற அமைப்பில் மட்டும் வீடு கட்டுகிறார்கள். இந்த நாடு தீவுகள் மற்றும் அதிகளவில் ஏரிகளால் நிறைந்துள்ளது. இங்கு வேலை செய்யும் நேரத்தைக் அந்த சூழ்நிலைக்கு ஏற்ப காலை மற்றும் இரவு நேரங்களைக் கணக்கிடுவது வழக்கம்.

சில நாடுகளில் மட்டும் சூரியன் மறைவே இல்லையா!!! Representative Image

கனடா

இந்த நாடு பலரும் தெரிந்த நாடுகளில் ஒன்று. இந்த நாட்டில் பெரும்பான்மையான இடங்களில் பனிப்பொழிவு என்பது அதிகமாகவும் மற்றும் பல இடங்களில் பனிமுழுவதுமாக மூடி காணப்படும்.

உலகில் இரண்டாவது மிகப் பெரிய நாடு தான் இந்த கனடா. இங்குப் பனிப்பொழிவு பார்ப்பதற்கு அழகாகவும் மற்றும் அதில் பல பனிச்சறுக்கு விளையாட்டுக்கள் விளையாடுவது என்பது அதிகமாக உள்ளது.

இங்குப்  பல சுற்றுலாப் பயணிகள் வந்து விளையாடுவது மற்றும் பொழுதுபோக்குகளுக்குப் பல இடங்கள் உள்ளது. இங்கு பனிபொழியும் காட்சிகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதால் இதைப் பார்ப்பதற்குப் பல சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.

இந்த நாட்டில் 50 ஆண்டுகள் சூரியன் உதயம் மறைவு என எதுவும் இல்லாமல் முழுவதுமாக பகல் ஆகத் தான் இருக்கும். அப்பொழுதும் சுற்றுலாப் பயணிகள் வருகை இருக்கும் ஏனென்றால் அந்த கோடைக்காலத்தில் மக்கள் அரோரா வியூவிங், மலையேற்றம், ஹாட்ஸ்பிங்ஸ்,தொங்கு பாலம், இது போன்று பல உள்ளதால் வெயில்காலத்தில் இங்குச் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.

சில நாடுகளில் மட்டும் சூரியன் மறைவே இல்லையா!!! Representative Image

நார்வே

இந்த நாட்டிற்கு மற்றொரு பெயர் நள்ளிரவில் உதிக்கும் சூரியன் எனக் கூறுவார்கள். இந்த நாட்டில் ஒரு வருடத்திற்கு 76 நாட்கள் சூரியன் மறையாமல் இருக்கும்.

காலை மற்றும் இரவும் சூரிய வெளிச்சம் தான் இருக்கும். ஒரு நாள் முழுவதும் சுமார் 20 மணி நேரம் சூரியன் தாக்கம் நேரடியாக இருக்கும். இந்த நாட்டில் மே மாதம் துவங்கி ஜூலை மாதம் இறுதி வரை வெயில் காலம் ஆக இருக்கும். இந்த நாடு உலகின் ஆர்டிக் சைக்கிள் பகுதியில் உள்ளது.

சில நாடுகளில் மட்டும் சூரியன் மறைவே இல்லையா!!! Representative Image

சுவீடன்

இந்த நாட்டில் அதிகமாக பனிபொழுவு என்பது இல்லாமல் சாதாரணமான நிலையை விடச் சிறிதளவு அதிகமாகத் தான் இருக்கும்.  இந்த நாடு மற்ற நாடுகளை விட கடும் குளிராக இல்லாமல் மிகவும் இதமாக இருக்கும்.

இந்த நாட்டில் தினத்தோறும் சூரியன் 4.30 மணியளவில் உதயம் ஆகி நள்ளிரவில் தான் சூரியன் மறையும். இது மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை இருக்கும். அந்த காலநிலையில் மக்கள் கோல்ஃப் விளையாடுவது மற்றும் மீன் பிடிப்பது,தேசிய பூங்காக்களுக்கு செல்வது எனப் பல மிரளவைக்கும் விஷயங்களைச் செய்வார்கள்.

சில நாடுகளில் மட்டும் சூரியன் மறைவே இல்லையா!!! Representative Image

ஐஸ்லாந்து

இந்த ஐஸ்லாந்து ஐரோப்பா கண்டத்தில் உள்ள பிரிட்டனுக்கு அடுத்த படியாக உள்ள மிகப் பெரிய தீவாகும். இந்த நாட்டில் கோடைக்காலங்களில் சூரியன் மறைவைப் பார்க்க முடியாது. மே மாத  பாதியிலிருந்து ஜூலை மாதம் முடிவு வரை வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும்.

ஆனால் இந்த நாடு பனிக்காலத்தில் மிகவும் அழகான நாடாக இருக்கும். இந்த நாட்டில் வெயில்காலத்தில் சைக்கிளிங் மற்றும் குகைவாசம், வன விலங்கு மற்றும் தேசிய பூங்கா பார்வையிடுவதற்குச் செல்வது என அந்த நாட்டு மக்கள் செய்வார்கள்.

சில நாடுகளில் மட்டும் சூரியன் மறைவே இல்லையா!!! Representative Image

அலாஸ்கா

கனடாவிற்கு மேலே இருக்கும் இந்த அலாஸ்கா நாடு அமெரிக்காவின் மாகாணம் ஆகும். இந்த நாட்டில் சூரியன் மறைவு என்பது இல்லை. பனிபொழுவு என்பது மிகவும் அதிகமாக இருப்பதால் இது பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

 

சில நாடுகளில் மட்டும் சூரியன் மறைவே இல்லையா!!! Representative Image

இந்த நாட்டில் காலை  2மணிக்கு வரும் சூரிய ஒளியில் இந்த பனிமலைகள் அனைத்தும் மிளிரும். பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் இதைச் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து புகைப்படங்கள் எடுப்பது மற்றும் பனிச்சறுக்குக்கள் விளையாடுவது எனப் பல விளையாட்டுகள் சந்தோசமாக விளையாடுவார்கள். இந்த நாட்டில் மே மாத இறுதியில் ஆரம்பித்து ஜூலை முழுவதுமாக சூரியன் மறைவைப் பார்க்க முடியாது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்