Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nothing Phone 1: இவங்களோட தாங்க நத்திங் போன் 1 போட்டியிட போகுது! அது யாரு யாருன்னா?

Priyanka Hochumin July 12, 2022 & 11:30 [IST]
Nothing Phone 1: இவங்களோட தாங்க நத்திங் போன் 1 போட்டியிட போகுது! அது யாரு யாருன்னா?Representative Image.

Nothing Phone 1: பொதுவாக ஒரு புது ஸ்மார்ட்போன் சந்தைக்கு விற்பனைக்கு வருமானால், அதற்கு போட்டியாக ஒரு சில ஸ்மார்ட்போன்கள் இருக்கும். அதே போல் இன்று வெளியாகப்போகும் நத்திங் போன் 1 வருவதற்கு பல மாதங்களுக்கு முன்னரே மக்களின் எதிர்பார்ப்பை ஈன்றுள்ளது. அப்பொழுது இதற்கு போட்டியாக எத்தனை ஸ்மார்ட்போன்கள் இருக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

நத்திங் போனின் பிளஸ்

இந்த போனின் பின்புறத்தில் இருக்கும் LED லைட் அம்சம் தான் இதில் டாப். பயனருக்கு நோட்டிபிகேஷன் வரும் பொழுது ஒளிரும் என்று கூறப்படுகிறது. மேலும் போனின் முன் மற்றும் பின் பேனல் கொரில்லா கிளாஸால் பாதுகாக்கப்படுகிறது. கூடுதலாக, OnePlus இன் முன்னாள் இணை நிறுவனரான Carl Pei ஆல் நத்திங் போனை ஆதரிக்கப்படுவதால் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரூ. 27,000/- முதல் ரூ. 30,000/-க்குள் விற்பனைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களுக்கு ஏற்றார் போல் இருக்கும் Samsung, Motorola, iQoo மற்றும் Poco போன்ற ஸ்மார்ட்போன்களுடன் போட்டியிடப்போகிறது.

POCO F4 5G

இந்த போன் கிளாஸியான பேக் பேனலில் வந்துள்ளது. மேலும் 64W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, டைப்-சி சார்ஜிங் போர்ட் மற்றும் டூயல் சிம் ஆதரவுடன் வருகிறது. அதே போல் ஃபுல் HD டிஸ்ப்ளே கொண்டு வரும் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ. 28,000/-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நத்திங் போன் 1 போன்ற பட்ஜெட்டிற்கு நெருக்கமாக இது அமைந்துள்ளது.

Motorola Edge 30

நத்திங் போன் 1-க்கு ஏற்றார் போல் அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். இது OLED டிஸ்பிளே, மிகவும் சிறப்பான OIS இயக்கப்பட்ட பிரைமரி கேமரா அமைப்புடன் வருகிறது. மேலும் நத்திங் போலவே இதுவும் ஸ்னாப்டிராகன் 778+ சிப்செட் உடன் வருகிறது. மேலும் டிஸ்பிளே 144Hz ரெபிரெஷ்ஷிங் ரேட் மற்றும் 33W சார்ஜருடன் வருகிறது. இவற்றைக் கொண்டு இந்த மாடல் ஸ்மார்ட்போன் நத்திங்கிற்கு பொடியாக கருதப்படுகிறது.

Samsung Galaxy M52

இந்த ஸ்மார்ட்போன் ரூ. 25,000/-க்கு விற்கப்படுகிறது. மேலும் நத்திங் போல் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் கொண்டு இயக்கப்படுகிறது. நத்திங் போன் 1 ஸ்னாப்டிராகன் 778G+ சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. எனவே இந்த டிவைஸின் அம்சங்கள் நத்திங் ஸ்மார்ட்போனுக்கு நெருக்கமாக இருப்பதால் இதுவும் போட்டியாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

Vivo V23

சமீபத்தில் வெளியான ஸ்மார்ட்போன்களில் மக்களுக்கு பிடித்த சாதனமாக விவோ வி 23 ஸ்மார்ட்போன் திகழ்கிறது. இது போதுமே நத்திங் போனுடன் போட்டியிட. இது மட்டுமல்லாது, அசத்தலான கேமரா அமைப்பு, மக்களை ஈர்க்கும் வடிவமைப்பு மற்றும் விலை போன்ற அனைத்திலும் இது நத்திங் போனுக்கு போட்டியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

iQoo Neo 6

இப்படி ஒரு மாடல் ஸ்மார்ட்போன் இருக்கிறது என்று நிறைய பேத்துக்கு தெரியாது. இருப்பினும் கேமர்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் டாப் குவாலிட்டி அம்சங்களை கொண்டுள்ளது. அதாவது AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 870 SoC மற்றும் 80W பாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது. எனவே இங்கு குறிப்பிட்டுள்ள சாதனங்கள் இன்று இரவு 8.30 மணிக்கு வெளியாகும் நத்திங் போன் 1 உடன் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு வேலை நத்திங் போனை உங்களால் வாங்க முடியவில்லை என்றால் இங்கு பட்டியலிட்டுள்ள ஸ்மார்ட்போன்களில் எதை வாங்குவீர்கள் என்பதை கமெண்ட்டில் தெரிவியுங்கள். 

Nothing Phone 1 Launch Date in India, Nothing Phone 1 price in india, Nothing Phone 1 price in india flipkart, Nothing Phone 1 launch date in india, Nothing Phone 1 specs, Nothing Phone 1 specifications, Nothing Phone 1 camera, Nothing Phone 1 price, Nothing Phone 1 launch date, Nothing Phone 1 flipkart,

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்