Tue ,Apr 23, 2024

சென்செக்ஸ் 73,648.62
560.29sensex(0.77%)
நிஃப்டி22,336.40
189.40sensex(0.86%)
USD
81.57
Exclusive

One Plus TV 50 Y1S Pro Price in India: 50 இன்ச், இவ்ளோ பெனிபிட்...விலை பாத்தா இவ்ளோ தானா? இதெல்லாம் நம்புற மாறியா இருக்கு!

Priyanka Hochumin July 04, 2022 & 20:15 [IST]
One Plus TV 50 Y1S Pro Price in India: 50 இன்ச், இவ்ளோ பெனிபிட்...விலை பாத்தா இவ்ளோ தானா? இதெல்லாம் நம்புற மாறியா இருக்கு!Representative Image.

One Plus TV 50 Y1S Pro Price in India: ஒன்பிளஸ் என்றாலே நம்ப பட்ஜெட்கு சரி வருமா? என்ற கேள்வி தான் வரும். ஆனா இதை பார்த்த உடனே, அட நம்ம வாங்கலாம் என்ற எண்ணம் தோன்றும். அப்படி ஒரு ஷாக்கிங் நியூஸ் இருக்கு, வாங்க என்னென்னு பாப்போம்.

எப்பொழுது பிரபலமாக இருக்கும் ஒன்பிளஸ் பிராண்ட் போன் அல்லது டிவி என்று ஏதுவாக இருந்தாலும் டாப் கிளாஸ். அதே போல் இன்று ஒன்பிளஸ் 50 ஒய்1எஸ் ப்ரோ (OnePlus TV 50 Y1S Pro) மாடல் டிவி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனுடைய விலைய பாத்தா சாத்தியமா நம்ப மாட்டீங்க. ஏன்னா அது அவ்ளோ பட்ஜெட் ப்ரெண்ட்லி காட்ஜெட்டாக திகழ்கிறது.

50 இன்ச், 10 பிட் கலர் டிஸ்ப்ளேன்னு அள்ளுது

இந்தியாவில் ஜூலை 4 அன்று வெளியான புது One Plus TV 50 Y1S Pro ஸ்மார்ட் டிவி பெசல்லெஸ் வடிவமைப்புக் கொண்டுள்ளது. ஷ்கிரீன் 4K ரெசல்யூஷனை கொண்ட 50 இன்ச் டிஸ்பிளேவுடன் வருகிறது. மேலும் அட்வான்ஸ்டு காமா எஞ்சின் அம்சத்திற்கான ஆதரவை கொண்ட 10-பிட் கலர் டிஸ்பிளேவாகவும் திகழ்கிறது. ஸ்பீக்கர் பொறுத்தவரை எப்பவும் மாஸ்ஸான Dolby Audio ஆதரவுடன் 2 ஃபுல்-ரேன்ஜ் ஸ்பீக்கர்களையும் கொண்டுள்ளது. அதனால் இதனின் மொத்த அவுட்புட் 24W என்று கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட் டிவி 230 க்கும் மேற்பட்ட லைவ் சேனல்களுக்கான ஆக்சஸ்களை உங்களுக்கு வழங்குகிறது. மேலும் திரைப்படங்கள் மற்றும் சீரீஸ்களை எளிதாக கண்டறிய உதவும் OxygenPlay 2.0 உடன் வருகிறது. MEMC (மோஷன் எஸ்டிமேஷன் மோஷன் காம்பென்சேஷன்) தொழில்நுட்பத்தை ஓரங்கட்டும் இந்த லேட்டஸ்ட் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி ஆனது HDR10+, HDR10 மற்றும் HLG ஃபார்மெட்டிற்கான ஆதரவை நமக்குத் தருகிறது.

Also Read | Apple Watch Series 8 Price in India: உங்களுக்கு காய்ச்சல் இருக்கான்னு...இதுவே காண்பிக்கும்! இன்னும் என்னெல்லாம் இருக்கோ?

இதெல்லாம் இருக்கா? சொல்லவே இல்ல

அட்டகாசமான இந்த ஸ்மார்ட் டிவி, ஆண்ட்ராய்டு 10.0 மூலம் இயக்கப்படுகிறது. எனவே, கூகுள் அசிஸ்டன்ட் வழியாக இந்த ஸ்மார்ட் டிவியை நாம் கட்டுப்படுத்த முடியும். நீங்கள் கேம் பிரியாராக இருந்தால், இந்த தகவல் உபயோகமாக இருக்கும். இந்த டிவியில் ஒரு ஸ்பெஷல் ஆட்டோ லோ லேட்டன்சி மோட் (ALLM) ஒன்று உள்ளது. இது உங்களுக்கு சுவாரஸ்யமான மற்றும் வேகமான கேமிங் அனுபவத்தை வழங்குவதற்காகவே பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் டிவியை மொத்தமாக 5 டிவைஸ்களில் நாம் கனெக்ட் செய்ய முடியும். ஒன்பிளஸ் வாட்சை இந்த ஸ்மார்ட் டிவியுடன் காங்நேச்ட் செய்தால், ஒரே கிளிக்கில் நீங்கள் ஆன் மற்றும் ஆஃப் செய்ய முடியும். மேலும் டிவி பார்த்துக் கொண்டிருக்கையில் நாம் தூங்கிவிட்டால், ஸ்மார்ட் வாட்ச் அதனை உணர்ந்து கொண்டு தானாகவே ஸ்மார்ட் டிவியை ஆஃப் செய்து விடும். இது போன்ற பண்ற சாதனங்களை OnePlus Connect 2.0 வழியாக ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவியுடன் கனெக்ட் செய்து கொள்ளலாம்.

Also Read | Nothing 1 Phone: இப்படி ஒரு போன் அதுவும்...இவ்ளோ கம்மி விலையில் வரப்போகுதா? அப்ப முன்னாடியே ஒரு ஆர்டர் போட்றலாம்!

இவ்ளோ இருக்கு ஆனா இவ்ளோ விலை தானா?

இதனை அம்சங்களைக் கொண்ட இந்த ஸ்மார்ட் டிவியின் விலை ரூ. 32,999/- மட்டுமே. இது வரும் ஜூலை 7 ஆம் தேதி முதல் அமேசான், ஒன்பிளஸ்.இன், ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்ஸ் மற்றும் நாட்டிலுள்ள முக்கிய ஆஃப்லைன் பார்ட்னர் ஸ்டோர்களின் வழியாக விற்பனைக்கு வருகிறது.

ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி வாங்கும் வாடிக்கையாளருக்கு ரூ. 3000/- இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கும். அதே போல் Amazon மற்றும் OnePlus.in வழியாக நிகழ்த்தப்படும் வங்கி பரிவர்த்தனைகள் முழுவதற்கும் 9 மாதங்கள் வரையிலான நோ காஸ்ட் இஎம்ஐ ஆப்ஷன் வழங்கப்படுகிறது. அமேசான் மூலம் இந்த டிவியை வாங்கும் வாடிக்கையாளர்கள் 12 மாதங்களுக்கான இலவச அமேசான் ப்ரைம் சாந்தா பெரும் வாய்ப்பு உள்ளது.

ம்ம்! உங்களுக்கு இதனை சலுகைகள் மற்றும் குறைந்த விலையில் இப்படி ஒரு டிவி வந்தா வாங்காம என்ன செய்றது!

Also Read | Moto G42 Price in India: இப்படி ஒரு பட்ஜெட் ப்ரெண்ட்லியான ஸ்மார்ட்போனா...எங்க கிடைக்கும்னு தெரிஞ்சிக்கோங்க!

One Plus TV 50 Y1S Pro Price in India, one plus tv 50 y1s pro launch date in india, one plus tv 50 y1s pro review, one plus tv 50 y1s pro, one plus tv 50 y1s pro specifications, one plus tv 50 y1s pro smart tv, one plus tv 50 y1s pro series, one plus tv 50 y1s pro series 43, one plus tv 50 y1s pro feature, one plus tv 50 y1s pro amazon, 

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்