Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tecno Spark 9 Price in India: இந்த போன் ரூ. 10,000/-ன்னா நம்ப முடிலையே...வாங்க பாப்போம்!

Priyanka Hochumin July 18, 2022 & 12:50 [IST]
Tecno Spark 9 Price in India: இந்த போன் ரூ. 10,000/-ன்னா நம்ப முடிலையே...வாங்க பாப்போம்!Representative Image.

Tecno Spark 9 Price in India: மக்களே! இன்னைக்கு போன் வாங்க அட்டகாசமான நாள். எப்படி தெரியுமா? உங்களுடைய பட்ஜெட் ரூ. 10,000/-க்கு ஒரு புது ஸ்மார்ட்போன் அறிமுகப்படுகிறது.

நீங்கள் நினைக்கலாம் ரூ. 10,000/-க்கு உள்ள அட்டகாசமான அம்சங்களுடன் ஸ்மார்ட்போன் வர போகுதான்னு. அதான் வந்துடுச்சே, உங்களுடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் டெக்னோ நிறுவனத்தின் லேட்டஸ்ட் ரிலீஸ் ஸ்மார்ட்போன் டெக்னோ ஸ்பார்க் 9. இதில் இருக்கும் சிறப்பம்சங்கள், விற்பனை போன்ற விவரங்களைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

இவங்கள பத்தி சொல்லனும்னா!

எந்த ஒரு புது முயற்சிக்கும் ஆரம்பத்தில் பெரிதாக வரவேற்பு இருக்காது. இவங்களோட கதையும் அது தான், ஆரம்பத்தில் டெக்னோ நிறுவனத்தின் பெயர் கூட பலருக்குத் தெரியாது. இருப்பினும் இவர்களின் கேமன் (Camon) மற்றும் ஸ்பார்க் (Spark) சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதற்கு பின்னர் இவர்களின் அசுரர் வளர்ச்சியை பற்றி சொல்லவே வேண்டாம். அதற்கான உதாரணமாய், டெக்னோ ஸ்பார்க் சீரிஸை இந்தியாவில் விரிவுபடுத்தும் விதமாக இன்று டெக்னோ ஸ்பார்க் 9 மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துவதாக ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளனர்.

ஓ இங்க தான் கிடைக்குமா?

டெக்னோ நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்ததை தொடர்ந்து அமேசான் டெக்னோ ஸ்பார்க் 9 ஸ்மார்ட்போனின் மைக்ரோசைட் அமேசானில் லைவ் ஆகிவிட்டது. இதன் மூலம் மறைமுகமாக அமேசானில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிந்துவிட்டது. இந்த தகவல் தான் கிடைத்தது, இந்த ஸ்மார்ட்போன் எப்போது விற்பனைக்கு வரும் என்னும் தேதி வெளியாகவில்லை. இருப்பினும் அறிமுகம் செய்யப்பட்ட சிறிது நாட்களில் விற்பனையை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன 11ஜிபி ரேம் இருக்கா...

அது என்னவென்றால், ஸ்மார்ட்போனில் இருக்கும் Virtual RAM உடன் சேர்ந்து மொத்தமாக 11ஜிபி ரேம் கொண்டிருக்கிறது டெக்னோ ஸ்பார்க் 9 போன். அதாவது வழக்கமான 6ஜிபி ரேம் மற்றும் 5ஜிபி விர்ச்சுவல் ரேம் இந்த ஸ்மார்ட்போனில் அணுக முடியும். அதனால் மொத்தமாக சேர்த்து 11ஜிபி ரேம் கொண்டுள்ளது. விர்ச்சுவல் ரேம் என்றால், ஸ்மார்ட்போனில் இருக்கும் இன்டெர்னல் ஸ்டோரேஜில் இருந்து குறிப்பிட்ட ரேம்கள் கடனாக வாங்கும் அம்சம் தான் அது.

டிஸ்பிளே, கேமரா, ப்ராசஸர்-லாம் எப்படி?

இந்த ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் அளவுடன் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் HD+ பேனலைக் கொண்டு வரும் என்று கூறப்படுகிறது. அடுத்து 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு மற்றும் 20:9 என்கிற ஆஸ்பெக்ட் ரேஷியோவையும் வழங்கும். கேமராவைப் பொறுத்தவரை டூயல் ரியர் கேமரா அமைப்பை கொண்டு வரும். இருப்பினும் துல்லியமான கேமரா ஸ்பெக்ஸ் இன்னும் வெளியாகவில்லை. மேலும் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் கேமரா மாடியூலுக்கு அருகில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டெக்னோ ஸ்பார்க் 9 ஸ்மார்ட்போன் MediaTek Helio G37 Octa-core SoC மூலம் இயக்கப்படும் மற்றும் 5,000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும். அதே போல் இந்த மாடல் ஆண்ட்ராய்டு 12 OS உடன் வரும் என்று தெரிகிறது. இது ஸ்கை மிரர் மற்றும் இன்ஃபினிட்டி பிளாக் என்கிற இரண்டு கலர் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கும்.

இதுவரை கிடைத்த விவரங்களை உங்களுடன் பகிர்ந்துள்ளோம். இந்த ஸ்மார்ட்போன் இன்று அறிமுகப்படுவதால் விரிவான விவரங்கள் வந்த பிறகு கூறப்படும். 

Tecno Spark 9 Price in India, Tecno Spark 9 pro, Tecno Spark 9 pro price, Tecno Spark 9 5g, Tecno Spark 9 pro price in india, Tecno Spark 9 specifications, Tecno Spark 9 mobile, Tecno Spark 9 pro flipkart, Tecno Spark 9 pro amazon, Tecno Spark 9 launch date in india,

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்