Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

OnePlus 10T 5G Price in India: ஒன்பிளஸ் இல் TurboRAW அல்காரிதம் பயன்படுத்தப்பட்ட போன்...இன்னும் வேற என்னெல்லாம் இருக்கு!

Priyanka Hochumin August 03, 2022 & 13:05 [IST]
OnePlus 10T 5G Price in India: ஒன்பிளஸ் இல் TurboRAW அல்காரிதம் பயன்படுத்தப்பட்ட போன்...இன்னும் வேற என்னெல்லாம் இருக்கு!Representative Image.

OnePlus 10T 5G Price in India: இன்று உலகம் முழுவதும் OnePlus 10T 5G ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளது. இது ஒன்பிளஸ் ரசிகர்கர்களுக்கு செம்ம ட்ரீட்டாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனெனில் இதில் இருக்க போகும் அம்சங்கள் அப்படி, வாங்க பாக்கலாம்.

நேரலையில் கண்டு மகிழுங்கள்

இந்த புது போனின் அறிமுகமானது ஒன்பிளஸின் நியூயார்க் நகர வெளியீட்டு விழாவில் நடைபெற உள்ளது. சீன ஸ்மார்ட்போன் பிராண்டால் வெளியிடப்படும் இந்த விழாவானது இந்திய நேரப்படி சரியாக மாலை 7.30 IST மணிக்கு நடைபெறுகிறது. இதனை நேரில் காண விரும்பும் ஆர்வலர்கள் நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை, நிறுவனத்தின் இணையதளத்தில் வாங்கிக் கொள்ளலாம். இல்லை வெறும் பார்வையாளராக இருக்கலாம் என்று விரும்பினால் ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வ யூடியூப் சேனல் அல்லது ஒன்பிளஸ் வெப்சைட்டிற்கு சென்று பார்வையிடலாம்.

விலைய கேட்டாலே தலை சுத்துது

இன்றைய அறிமுகத்திற்கு பின்னர் உறுதியான விலை என்ன என்று தெரியவரும். ஆனால் கூறப்பட்டுள்ள அறிக்கையின் படி, அமேசானின் UK இணையதளத்தில் GBP 799 (தோராயமாக ரூ. 76,500/-) இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரலாம் என்று பட்டியலிடப்பட்டது. இருப்பினும் சிறிது நாட்களுக்கு பின்னர் அந்த இ-காமர்ஸ் நிறுவனத்தால் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. OnePlus 10T 5G இன் உண்மையான விலை என்ன என்று கூடிய விரைவில் தெரிய வரும்.

தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்

ஒன்பிளஸ் நிறுவனம் குவால்கம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 எஸ்ஓசி மூலம் OnePlus 10T 5G ஸ்மார்ட்போன் இயக்கப்படும் என்று உறுதிப்படுத்தி உள்ளது. அதே போல் AI சிஸ்டம் பூஸ்டர் 2.1 மற்றும் ஹைப்பர்பூஸ்ட் அம்சத்துடன் இந்த ஹாண்ட் செட் வந்துள்ளதாக நிறுவனம் டீஸ் செய்துள்ளது. நமக்கு மிகவும் தேவையான அளவிற்கு ஸ்டோரேஜ் இருப்பதால் இதை வாங்க யோசிக்க தேவையில்லை. ஏனெனில் OnePlus 10T 5G ஆனது 256GB UFS 3.1 ஸ்டோரேஜ் உடன் 16GB LPDDR5 ரேம் கொண்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இப்ப கேமராவுக்கு வருவோம், ஸ்மார்ட்போன் 50 மெகாபிக்சல் சோனி IMX766 பிரைமரி சென்சார் கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்று நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது. OnePlus 10T 5G இன் கேமரா அமைப்பு, ஆப்டிகல் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிளைசேஷன் கொண்டிருக்கிறதாம். நிறுவனம் என்ன கூறுகிறது என்றால், தொலைபேசியுடன் புதிய இமேஜ் கிளாரிட்டி என்ஜின் வழங்கப்படும். OnePlus இன் கூற்றுப்படி, இது HDR 5.0 மற்றும் TurboRAW அல்காரிதம்களைப் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

OnePlus 10T 5G ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே 120Hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டிருக்கும் என்றும் நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது. மேலும் இது 360 டிகிரி ஆண்டெனா சிஸ்டம் மற்றும் ஸ்மார்ட் இணைப்பைப் பெறுகிறது. இந்த அல்டிமேட் ஸ்மார்ட்போன் மூன்ஸ்டோன் பிளாக் மற்றும் ஜேட் கிரீன் வண்ண விருப்பங்களில் வெளியிடப்படுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவையெல்லாம் நிறுவனத்தால் உறுதிசெய்யப்பட்ட தகவல்கள். முழு விவரங்கள் வெளியீட்டிற்கு பிறகு தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

OnePlus 10T 5G Price in India, oneplus 10t 5g launch date in india, oneplus 10t 5g release date in india, oneplus 10t 5g expected price, oneplus 10t 5g launch event place, oneplus 10t 5g specifications and price in india, oneplus 10t 5g specifications, oneplus 10t 5g cooling system, oneplus 10t 5g cooling system name, oneplus 10t 5g is equipped cooling system, oneplus 10t 5g gaming latency,


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்