Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

கேமர்களுக்கான சூப்பர் பாஸ்ட் வேகத்தில்...இவ்ளோ கம்மி விலையில்...சூப்பர் அம்சத்தில்...இப்படி ஒரு போனா?

Priyanka Hochumin Updated:
கேமர்களுக்கான சூப்பர் பாஸ்ட் வேகத்தில்...இவ்ளோ கம்மி விலையில்...சூப்பர் அம்சத்தில்...இப்படி ஒரு போனா?Representative Image.

இந்த வாரம் திங்களன்று Infinix Hot 20S ஸ்மார்ட்போன் பிலிப்பைன்ஸ் நாட்டில் நிறுவினத்தால் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இந்த புது ஸ்மார்ட்போனில் மிகவும் சக்தி வாய்ந்த Mediatek G96 SoC பிராஸசர் மற்றும் 18W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை தரும் 5000mAh பேட்டரி போன்ற பல அற்புதமான அம்சங்கள் இருக்கிறது. இந்த மாடலின் அம்சங்கள், விவரக்குறிப்புகள் மற்றும் விலை போன்ற அனைத்து தகவலும் இந்த பதிவில் உள்ளது.

கேமர்களுக்கான சூப்பர் பாஸ்ட் வேகத்தில்...இவ்ளோ கம்மி விலையில்...சூப்பர் அம்சத்தில்...இப்படி ஒரு போனா?Representative Image

ப்ரோ கேமர்களுக்கான போன்!

இன்ஃபினிக்ஸ் ஹாட் 20எஸ் ஆனது 6.78-இன்ச் full-HD+ IPS TFT டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 இல் இயங்கும் இந்த மாடல் 1,080X2,460 பிக்சல்கள் மற்றும் மாறுபட்ட புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது. இந்த போனில் இருக்கும் டிஸ்பிளேவை நிறுவனம் HyperVision Gaming-Pro என்று அழைக்கிறது. இப்படி எந்த தடங்கலும் இன்று சூப்பர் வேகத்தில் விளையட உதவும் இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி96 SoC மூலம் இயக்கப்படுகிறது.

கேமர்களுக்கான சூப்பர் பாஸ்ட் வேகத்தில்...இவ்ளோ கம்மி விலையில்...சூப்பர் அம்சத்தில்...இப்படி ஒரு போனா?Representative Image

ஹை குவாலிட்டி ட்ரிபிள் ரியர் கேமரா...

நீங்கள் மாறி மாறி போட்டோ எடுத்து மகிழ Infinix Hot 20S இல் ட்ரிபிள் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, குவாட் ரியர் ஃபிளாஷ் உடன் இரண்டு 2 மெகாபிக்சல் சென்சார்கள் ஆகியவை அடங்கும். மேலும் செல்பீ மற்றும் வீடியோ கால் பயன்பாட்டிற்கு முன்பக்கத்தில் டூயல் LED ஃபிளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது. ஸ்டோரேஜ் பற்றி பார்க்கையில், 8GB ரேம் மற்றும் கூடுதல் இன்பில்ட் ஸ்டோரேஜ் அம்சத்தை பயன்படுத்தி சுமார் 13GB வரை நீட்டிக்க முடியும். இதே போல் 128GB  ஸ்டோரேஜை மைக்ரோ SD கார்டு மூலம் 512GB வரை நீடிக்கலாம்.

கேமர்களுக்கான சூப்பர் பாஸ்ட் வேகத்தில்...இவ்ளோ கம்மி விலையில்...சூப்பர் அம்சத்தில்...இப்படி ஒரு போனா?Representative Image

இவ்ளோ இருக்கா?

அதிக நேரம் பயன்பாட்டிற்காக 18W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை வழங்கும் 5,000mAh பேட்டரி சப்போர்ட் இந்த Infinix Hot 20S இல் உள்ளது. இதில் இருக்கும் இனைப்பு விருப்பங்கள் - டூயல் சிம், 4G, Wi-Fi 802.11 a/b/g/n/ac, ப்ளூடூத், USB வகை-C போர்ட், OTG, GPS மற்றும் GPS/ A-GPS போன்ற அனைத்தும் அடங்கும். ஆன்போர்டு சென்சார்களில் இ-காம்பஸ், ஜி-சென்சார், லைட் சென்சார் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார் ஆகியவை அடங்கும். பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக ஸ்மார்ட்போனில் பக்கவாட்டில் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.  

கேமர்களுக்கான சூப்பர் பாஸ்ட் வேகத்தில்...இவ்ளோ கம்மி விலையில்...சூப்பர் அம்சத்தில்...இப்படி ஒரு போனா?Representative Image

இவ்ளோ இருக்கு ஆனா இவ்ளோ கம்மியா?

Infinix Hot 20S இன் பேஸ் மாடல் 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜின் விலை PHP 8,499 (அதாவது ரூ. 12,200/-க்கு) விற்பனையாகிறது. மேலும் பிளாக், ப்ளூ, பர்பிள் மற்றும் வைட் கலர் ஆப்ஷனில் எது வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம். இதே நிறம் மற்றும் விலையில் தான் இந்தியாவில் அறிமுகம் ஆகப்போகிறதா என்னும் தகவல் வெளியாகவில்லை. ஆனால் நாளை டிசம்பர் 1 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்