Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nord CE 2-ஆ Nord CE 3-ஆ எது பெஸ்ட்னு பாருங்க… | OnePlus Nord CE 2 Lite Vs OnePlus Nord CE 3 Lite

Gowthami Subramani Updated:
Nord CE 2-ஆ Nord CE 3-ஆ எது பெஸ்ட்னு பாருங்க… | OnePlus Nord CE 2 Lite Vs OnePlus Nord CE 3 LiteRepresentative Image.

ஒன்பிளஸ் ஸ்மார்ட் போன் பிராண்டானது தற்போது அனைவரும் விரும்பி வாங்கக் கூடிய ஒன்றாகும். ஒன் பிளஸ் ஆனது ஆப்பிள் மொபைல் லெவலுக்கு விலை அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால், இந்த மொபைலை வாங்குவதை பலரும் கனவாக வைத்திருந்தனர். தற்போது ஒன் பிளஸ் நிறுவனம் அனைவரின் கனவையும் நிறைவேற்றும் வகையில் குறைந்த விலையில் மொபைலை அறிமுகம் செய்து வருகிறது.

அந்த வகையில், OnePlus Nord CE 2 Lite ஆனது, கடந்த 2022 ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. இதில் உள்ள பல்வேறு அம்சங்கள் மொபைல் பிரியர்களால் கவரப்பட்டு வருகிறது. இந்த OnePlus Nord CE 2 Lite மொபைலை விட அட்டகாசமான அம்சத்தில் OnePlus Nord CE 3 Lite மொபைல் களமிறங்க உள்ளது. இந்த இரண்டு மொபைலுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைக் குறித்து இந்தப் பதிவில் காணலாம்.

டிஸ்பிளே, கேமரா மற்றும் செயலி

ஒன்பிளஸ்-ன் Nord CE 2 lite மற்றும் Nord CE 3 lite என இரண்டுமே ஸ்னாப்ட்ரகன் 695-ஐக் கொண்டுள்ளது. ஆனால், டிஸ்பிளேயைப் பொறுத்த வரை, Nord CE 2 Like 6.59 இன்ச்-ஐயும், Nord CE 3 Lite 6.7 இன்ச்-ஐயும் கொண்டுள்ளது. அதே போல, கேமராவிலும் சிறப்பான அம்சத்தைக் கொண்டுள்ளது Nord CE 3 Lite மொபைல். அதாவது, பின்பக்க கேமரா ஆனது, Nord CE 2 Lite வைப் பொறுத்த வரை 64MP + 2 MP + 2 MP-ஐக் கொண்டுள்ளது. ஆனால், Nord CE 3 Lite ஆனது 108 MP + 2 MP + 2 MP அளவைக் கொண்டுள்ளது.

அதே சமயம், இந்த இரண்டு மொபைல்களும் முன் பக்க கேமரா அளவாக 16 MP –ஐக் கொண்டுள்ளது. மேலும், பேட்டரி அளவும், சேமிப்பும் இரண்டு மொபைல்களிலும் ஒன்றாகும். அதன் படி, பேட்டரி 5000 mAh-ஐயும், சேமிப்பு 128 GB மற்றும் 1 TB வரை விரிவுபடுத்திக் கொள்ளும் வகையில் உள்ளது.

Nord CE 2 Lite மற்றும் Nord CE 3 Lite ஒரே விலை

ஒரு சில வித்தியாசங்களைக் கொண்ட இந்த மொபைல்கள், ஒரே விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. Nord CE 3 Lite ஏப்ரல் 4 ஆம் நாள் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மொபைல் பிரியர்கள் இந்த பிராண்டை வாங்குவதற்கு ஆரவாரமாகக் காத்திருக்கின்றனர்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்