விவோ நிறுவனத்தின் Vivo X Fold 2 என்னும் மடக்கூடிய ஸ்மார்ட்போன் வரும் ஏப்ரல் 2023 வெளியாக உள்ளது. இந்த பிராண்ட் நியூ ஸ்மார்ட்போனின் அனைத்து அம்சங்கள் குறித்த விவரங்களை இந்த பதிவில் பாப்போம்.
மிகவும் அட்டகாசமான வடிவமைப்பை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 8.03-inch LTPO AMOLED டிஸ்பிளேவுடன் வருகிறது. மேலும் ஆண்ட்ராய்டு 13 மூலம் இயங்கும் மற்றும் Qualcomm Snapdragon 8 Gen 2-ஐ கொண்டு இயக்கப்படுகிறது. இந்த மாடல் ஸ்மார்ட்போன் 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் மற்றும் 12GB RAM + 512GB ஸ்டோரேஜ் ஆகிய இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்ட் உடன் வருகிறது. அதிவேக பயன்பாட்டிற்காக 120W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை வழங்கும் 4,800mAh பேட்டரியைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
கேமராவைப் பொறுத்த வரையில் Sony’s IMX866 சென்சார் கொண்ட 50MP மெயின் கேமரா மற்றும் Sony IMX 663 சென்சார் கொண்ட இரண்டு 12MP அல்ட்ரா-வைடு, டெலிபோட்டோ லென்ஸ் உள்ளிட்டவை அடங்கும். இந்த மாடல் இந்தியாவில் ரூ.1,19,990/-க்கு விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலே குறிப்பிட்ட விவரங்கள் நம்பகமானவர்களின் தரவுகளில் இருந்து எடுக்கப்பட்டது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…