Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஒன்பிளஸ் வெளியிட்ட சூப்பரான OnePlus Pad.. இதுல ஹைலைட்டே இது தான்..!

Gowthami Subramani Updated:
ஒன்பிளஸ் வெளியிட்ட சூப்பரான OnePlus Pad.. இதுல ஹைலைட்டே இது தான்..!Representative Image.

ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் Tablet-ஐ இந்தியாவில் இன்று அதாவது ஏப்ரல் 28 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை குறித்த விவரங்கள் அனைத்தையும் இந்தப் பதிவில் காணலாம்.

OnePlus Pad அம்சங்கள்

இந்த OnePlus Pad ஆனது, Super IPS LCD டிஸ்பிளேயைக் கொண்டுள்ளது. 8GB RAM உடன் MediaTek Dimensity 9000 MT6983 chipset-ஐ இந்த ஒன்பிளஸ் Pad கொண்டுள்ளடு. இது சற்று வித்தியாசமான அம்சங்களையும் கொண்டுள்ளது. சிறந்த அபேட்டரி சக்தியுடனும், நாள் முழுவதும் எந்த ஒரு தடங்களுமின்றி பல்வேறு பணிகளைச் செய்ய ஏதுவாகவும் அமைகிறது.

OnePlus Pad 128GB மெமரியைக் கொண்டுள்ளது. கேமராவைப் பொறுத்த வர, முன்பக்க கேமரா 8MP-ஐயும், பிரைமரி கேமரா 13MP-ஐயும் கொண்டுள்ளது. இந்த டேப்லெட்டின் பேட்டரி அளவானது 9510mAh ஆகும். மேலும் இது டைப்-சி போர்டல் சார்ஜிங் செய்யும் வசதியைக் கொண்டுள்ளது.

மேலும், புளூடூத் வசதி, ஹாட்ஸ்பாட் மற்றும் A-GPS போன்ற அம்சங்களுடன் காணப்படுகிறது. இத்தகைய பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த டேப்லட்-ஐ ஒன்பிளஸ் நிறுவனம் ரூ.37,999-க்கு விற்பனை செய்கிறது. இதன் அதிக அளவிலான பேட்டரி திறன் பெரும்பாலும் ஒன்பிளஸ் பிரியர்களைக் கவரும் வண்ணம் உள்ளது. மேலும், இதன் மற்ற சிறப்பம்சங்களின் காரணமாக மக்கள் அனைவராலும் விரும்பி வாங்கப்படும் எனவும் கருதப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்