Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

அசத்தலான அம்சங்களுடன் கலமிறங்கும் விண்டோஸ் 12 - முழுவிபரம் | Windows 12 System Requirements & Features

Nandhinipriya Ganeshan Updated:
அசத்தலான அம்சங்களுடன் கலமிறங்கும் விண்டோஸ் 12 - முழுவிபரம் | Windows 12 System Requirements & Features Representative Image.

ஒரு கம்பியூட்டர் இயங்குவதற்கு முக்கிய காரணியாக இருப்பது இயக்க அமைப்பு (Operating System). அந்தவகையில், மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் மிகவும் பிரபலமான ஒரு Graphics User Interface ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகும். விண்டோஸில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பயன்பாடுகளை இயக்க முடியும் இதற்கு மல்டிடாஸ்க்கிங் (Multitasking) என்று பெயர். இந்த விண்டோஸில் எத்தனையோ பதிப்புகள் இருக்கின்றனர். அந்தவகையில், கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான பதிப்பு Windows 11.

ஆனால், இந்த Windows 11 பதிப்பில் பலர் பல சிக்கல்களை எதிர்கொள்வதாக புகாரளித்துள்ளனர். எனவே மைக்ரோசாப்ட் இந்த சிக்கல்களை சரிசெய்ய Windows 12 ஐ உருவாக்கத் தொடங்கியுள்ளது. இதன் வெளியீட்டு தேதி, Windows 12 ஐ பதிவிறக்கம் செய்ய உங்க கம்பியூட்டரில் என்னென்ன தேவைப்படுகிறது, மற்றும் புதிய பதிப்பில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கின்றன என Windows 12 தொடர்பான ஒட்டுமொத்த தகவலையும் தெரிந்துக் கொள்வோம். 

அசத்தலான அம்சங்களுடன் கலமிறங்கும் விண்டோஸ் 12 - முழுவிபரம் | Windows 12 System Requirements & Features Representative Image

விண்டோஸ் 12 வெளியீட்டு தேதி | Windows 12 Release Date

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் புதுமையான அம்சங்கள் நிறைந்த விண்டோஸ் 12 ஐ வெளியிடவுள்ளதாக அறிவித்திருந்தது. அந்த வகையில், இதன் பீட்டா பதிப்பு மார்ச் 2023 இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, விண்டோஸ் 12ன் பீட்டா பதிப்பு முதலில் மைக்ரோசாப்ட் மூலம் நிர்வகிக்கப்படும் சர்ஃபேஸ் லேப்டாப்களில் மட்டும் வெளியிடப்பட்டது. ஆனால், அனைத்து கட்டமைப்புகளுக்கான முழுமையான Windows 12 பதிப்பு 2024 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Windows 12 புதுப்பிப்பை மைக்ரோசாப்ட் வெளியிட்டவுடன் அதை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து எளிதாகப் பதிவிறக்கம் செய்து, உங்கள் கணினியில் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை துவக்க அனைத்துத் தேவைகளும் இருந்தால், அதை உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளலாம். எனவே, இந்த பதிப்பை பெற உங்க கம்பியூட்டரில் என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும் (Windows 12 system requirements) என்பதை நீங்க முன்னரே அறிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

அசத்தலான அம்சங்களுடன் கலமிறங்கும் விண்டோஸ் 12 - முழுவிபரம் | Windows 12 System Requirements & Features Representative Image

விண்டோஸ் 12 தேவைகள் | Windows 12 Requirements

விண்டோஸ் 12 ஐ உங்க கம்பியூட்டரில் நிறுவுவதற்கு முழுமையான தேவைகள் இருந்தால் மட்டுமே இயக்க முடியும். இங்கே நாங்கள் அனைத்து Windows 12 தேவைகளையும் குறிப்பிட்டுள்ளோம்,

  • இன்டெல்லின் (intel) குறைந்தபட்ச i5 செயலி (processor) அல்லது 1 GHZ கடிகார வேகம் (clock speed) கொண்ட AMD செயலி (processor) தேவை.
  • விண்டோஸ் 12 க்கு குறைந்தபட்சம் 4 ஜிபி ரேம் (RAM) தேவை.
  • 256 ஜிபி மற்றும் அதற்கு மேல் ஹார்ட் டிஸ்க் ஸ்டோரேஜ்.
  • 13 இன்ச் அல்லது அதற்கு மேல் HD திரை (256 GB HDD).
  • நிலையான இணையத் தொடர்பு (Stable internet connection).
  • பாதுகாப்பான துவக்க எனாபில்டு சிஸ்டம் (Boot enabled system).
  • TPM எனாபில்டு சிஸ்டம் (TPM enabled system).
அசத்தலான அம்சங்களுடன் கலமிறங்கும் விண்டோஸ் 12 - முழுவிபரம் | Windows 12 System Requirements & Features Representative Image

விண்டோஸ் 12 சிறப்பம்சங்கள் | Windows 12 Features Tamil

மைக்ரோசாஃப்ட் விண்டோவின் ஒவ்வொரு பதிப்பிலும் பல புதிய அம்சங்கள் உள்ளிடப்படும் என்று நமக்குத் தெரியும். அந்தவகையில், விண்டோஸ் 12ல் அப்படி என்ன புதிய அம்சங்கள் இருக்கின்றன என்பதை பார்க்கலாம். 

டெவலப்பரின் கூற்றுப்படி, விண்டோஸ் 12 கோப்பு அளவு (file size) 1.2 ஜிபியுடன் வெளியிடப்படும் மற்றும் வெளியீட்டு தேதிக்குப் பிறகு அதை மைக்ரோசாப்ட் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

  • அனைத்து விண்டோஸ் 12 தேவைகளையும் கொண்ட அனைத்து வகையான கணினிகள் மற்றும் லேப்டாப்களிலும் விண்டோஸ் 12 இயங்கும். 
  • Windows 11வது பதிப்போடு ஒப்பிடும்போது, விண்டோஸ் 12 உங்கள் கணினியை பிழைகளிலிருந்து தடுக்கும் (No Bugs)
  • மேலும் உங்கள் கணினி வேகத்தை மேம்படுத்தும் சிறந்த புதுப்பிப்பு வீதத்தையும் (better refresh rate) வழங்கும்
  • பல முகப்புப் பக்கங்கள் (Multiple Homepages) 
  • பாட்காஸ்ட் பயன்பாடு (Podcast Application ஆகியவை இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும்.
  • இது தவிர விண்டோஸின் சமீபத்திய அப்டேட்டில் புதிய டாஸ்க்பார் (Taskbar) அறிமுகப்படுத்தப்படும். 
அசத்தலான அம்சங்களுடன் கலமிறங்கும் விண்டோஸ் 12 - முழுவிபரம் | Windows 12 System Requirements & Features Representative Image

விண்டோஸ் 12 ஐ டவுன்லோடு செய்வது எப்படி? | How to Download Windows 12

  • விண்டோஸ் 12 ஐப் பதிவிறக்கம் செய்ய கீழே குறிப்பிடப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றலாம்.
  • முதலில், விண்டோஸ் ஐகானைக் கிளிக் செய்து, விண்டோஸ் புதுப்பிப்பு மெனுவைத் (Windows Update Menu) தேடவும்.
  • அதன் பிறகு, புதுப்பிப்புகளைச் சரிபார்க்கவும் பட்டனை கிளிக் செய்து, தேடல் முடிவடையும் வரை காத்திருக்கவும்.
  • இப்போது உங்கள் திரையில் Windows 12 புதுப்பிப்பு விருப்பத்தைக் காண்பீர்கள், அதைக் கிளிக் செய்யவும்.
  • பதிவிறக்க (Download) பட்டனை கிளிக் செய்து, அது முடிவடையும் வரை காத்திருக்கவும்.
  • அதன் பிறகு, நிறுவு (Install) பட்டனைக் கிளிக் செய்து, உங்கள் கணினியில் சார்ஜரை இணைத்துக் கொள்ளுங்கள்.
  • இறுதியாக, திரையில் PC ரீஸ்டார்ட் மெனுவை பார்ப்பீர்கள், அதை ஏற்க வேண்டும் மற்றும் பிசி ரீஸ்டார்ட் ஆகும்வரை காத்திருக்க வேண்டும்.
  • இந்த வழிமுறைகளின் மூலம் விண்டோஸ் 12 ஐ பதிவிறக்கம் எளிமையாக உங்க கம்பியூட்டரில் பதிவிறக்கம் செய்துக் கொள்ள முடியும். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்