Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

OPPO Air Glass 2 மட்டும் கையில் இருந்த போதும்.. மொத்த டெக்னாலஜியும் உங்ககிட்ட தான்… | OPPO Air Glass 2

Manoj Krishnamoorthi Updated:
OPPO Air Glass 2 மட்டும் கையில் இருந்த போதும்.. மொத்த டெக்னாலஜியும் உங்ககிட்ட தான்… | OPPO Air Glass 2 Representative Image.

ஓப்போ நிறுவனம் டிசம்பர் 14, 2022 அன்று  OPPO Air Glass 2 லான்ச் செய்தது.  OPPO நிறுவனம் நேற்று   OPPO Inno Day 2022 இல் உடல்நிலை அறிந்து கொள்ள உதவும் படைப்பை அறிமுகம் செய்தது. இது சுவாரஸ்ய தொழில்நுட்பத்தின் அடுத்த பரிமாணம் ஆகும்இது பற்றிய தகவல் வேண்டுமா... இந்த பதிவை பின்தொடரவும்.

OPPO Air Glass 2

OPPO நிறுவனம் உருவாக்கியுள்ள சுமார் 38 கிராம் எடை கொண்ட OPPO Air Glass 2 தான் இன்றைய டாக். ஒரு கண்ணாடி அப்படி என்ன இருக்கும் என்ற கேள்விக்கு.... இதில் என்னென்ன இருக்கிறது பாருங்கள் என OPPO தன் படைப்பை வெளிக்காட்டியுள்ளது. பொதுவாக நாம் கண்ணாடியை நாம் பைக்கில் செல்லும்போது அல்லது சிஸ்டம் யூஸ் பண்ணும்போது உபயோகப்படுத்தும். இன்னும் சிலரோ பவர் கிளாசாக பயன்படுத்துவர்.

இந்த OPPO Air Glass 2 இதற்கெல்லாம் மாறுபட்ட அசிஸ்டட் ரியாலிட்டி கிளாஸ். ஒரு கண்ணாடி இதய துடிப்பை கணக்கெடுக்கும் என்பது ஆச்சரியமாக உள்ளது. OPPO Air Glass 2  மூலம் நம்மால் உடல் வெப்பநிலை, இருதய செயல்பாடு, தூக்கத்தின் அளவு போன்ற உடல் செயல்பாட்டுக்களை அறிந்து கொள்ள முடியும்இதுபோன்ற பல சிறப்பம்சங்களை கொண்ட OPPO Air Glass 2  எப்போது விற்பனைக்கு வரும் என்பது அறிவிக்கப்படவில்லை.

 சிறப்பம்சங்கள் (Oppo Air Glasses 2 Specification In Tamil)

தொலைத்தொடர்பு தயாரிப்பு நிறுவனமான OPPO உருவாக்கிய OPPO Air Glass 2 கால் செய்யும் வசதி கொண்ட டிவைஸ். இதில் இருக்கும் voice-to-text வசதி மாற்றுத்திறனாளி ஒரு நல்ல காரணியாக இருக்கும்இது நம் உடல்நிலையின் தகவலை தெரிவிக்கும் டிவைஸ் என்பதால் நம் இரத்தத்தில் இருக்கும் ஆக்ஸிஸன் அளவு, ECG, இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாடு போன்றவையின் தகவல் தெரியும்

கீழே விழுந்தாலும் எளிதில் உடையாத உறுதியான monocular waveguide lens மற்றும் எளிமையான பயன்பாட்டிற்கு rounded rectangular lens ஆல் ஆனது. மிகவும் லைட் மற்றும் கவர்சியான தோற்றத்தில்  Qualcomm Snapdragon Wear 4100 Platform இல் உருவானது. இதன் ப்ளூடூத், audio chip அனைத்தும் நல்ல wireless சேவையைக் கொடுக்கும். இந்த டிவைஸ் மார்க்கெட்டிற்கு வந்தால்  earbuds, headset, wireless headset போன்றவற்றிற்கு நல்ல மாற்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்