Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஒன்பிளஸ் லேட்டஸ்ட் லான்ச்...தரமான ஸ்பெக்...ரேட் எவ்ளோ தெரியுமா? | Oneplus Nord 3 Specifications in Tamil

Priyanka Hochumin Updated:
ஒன்பிளஸ் லேட்டஸ்ட் லான்ச்...தரமான ஸ்பெக்...ரேட் எவ்ளோ தெரியுமா? | Oneplus Nord 3 Specifications in TamilRepresentative Image.

நாம் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த Oneplus Nord 3 ஸ்மார்ட்போன் பகிரங்கமாக களமிறங்கியுள்ளது. சந்தையில் எந்த ஒரு கேட்ஜெட்ஸ் அறிமுகப்படுத்தினாலும் அதனைப் பற்றிய ரிவ்யூ செய்தியினை தேடாதவர்கள் இருக்கவே முடியாது. அப்படி இருக்கையில், பலருக்கும் பிடித்த ஒன்பிளஸ் பிராண்டின் புது மாடல் ரிலீஸ் ஆன பிறகு அதைப் பற்றி தேடாமல் இருப்பார்களா. அவர்களுக்காகவே, இந்த பதிவில் நேற்று அறிமுகம் செய்யப்பட்ட Oneplus Nord 3 ஸ்மார்ட்போன் பற்றிய முழு விவரத்தை பார்க்கலாம்.

ஒன்பிளஸ் லேட்டஸ்ட் லான்ச்...தரமான ஸ்பெக்...ரேட் எவ்ளோ தெரியுமா? | Oneplus Nord 3 Specifications in TamilRepresentative Image

ஒன்பிளஸ் நார்டு 3 அம்சங்கள்:

டிஸ்பிளே: ஒன்பிளஸ் நார்டு 3 - 1240x2772px தெளிவுத்திறன் கொண்ட 6.74" இன்ச் திரவ AMOLED டிஸ்பிளே மற்றும் டைனமிக் 120Hz புதுப்பிப்பு வீதம் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் 10-பிட் கலர் டெப்த், 1000Hz வரையிலான டச் ரெஸ்பான்ஸ், HDR10+ஆதரவுடன் Netflix மற்றும் ப்ரைம் போன்றவை இதில் அடங்கும்.

சிப்செட்: மீடியாடெக் MT6983 டைமென்ஷன் 9000 (4 nm) இல் கட்டமைக்கப்பட்ட ஆக்டா-கோர் மாலி-ஜி710 எம்சி10 பிராசஸர் இந்த போனில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கேமரா: பிபுரத்தில் ட்ரிபிள் ரியர் கேமரா அமைக்கப்பட்டுள்ளது. மெயின் கேமரா - 50 MP, அல்ட்ரா வைட் ஆங்கிள் - 8 MP, மேக்ரோ - 2 MP ஆகியவற்றை கொண்டு வருகிறது. முன்பக்கத்தில் 16 MP கேமரா நிறுவப்பட்டுள்ளது.

மெமரி: 128ஜிபி 8ஜிபி ரேம், 256ஜிபி 8ஜிபி ரேம், 256ஜிபி 16ஜிபி ரேம் ஆகிய மூன்று வேரியண்டில் அறிமுகமாகியது.

பேட்டரி: 80W (வயர்டு) பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5000mAh பேட்டரி கொண்டு வருகிறது.  

இணைப்பு: 5G, இரட்டை சிம் கார்டுகள், Wi-Fi 6, BT 5.3, aptX HD, NFC உள்ளிட்ட இணைப்பு ஆதரவைப் பெற்றுள்ளது.

OS/சாஃப்ட்வேர்: சமீபத்திய அறிமுகமான OxygenOS 13.1 உடன் Android 13 இல் இயங்குகிறது.

இவற்றைத் தாண்டி இந்த மாடல் போனுக்கு, அதிகாரப்பூர்வமாக தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்காக IP54- மதிப்பிடப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் நார்டு 3 ஆனது இந்தியாவில் ரூ.33,999/-க்கு விற்பனையாகும். மேலும் வரும் ஜூலை 15 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்