Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Ptron Bass Buds Reviews: வெறும் ரூ.999/-க்கு...40 மணி நேர பிளேடைம்...DSP ENC டெக்னாலஜி...இன்னும் பல அம்சங்களுடன்! புது இயர்பட்

Priyanka Hochumin May 25, 2022 & 19:15 [IST]
Ptron Bass Buds Reviews: வெறும் ரூ.999/-க்கு...40 மணி நேர பிளேடைம்...DSP ENC டெக்னாலஜி...இன்னும் பல அம்சங்களுடன்! புது இயர்பட்Representative Image.

Ptron Bass Buds Reviews: இன்று இந்தியாவில் 50m லோ லேடன்சி மற்றும் 40 மணி நேர பிளே டைம் வழங்கும் Ptron Bassbuds Wave earbuds அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த வயர்லெஸ் இயர்பட்கள் DSP என்விரான்மெண்ட் நாய்ஸ் கேன்ஷலேஷன் (ENC) டெக்னாலஜி, மோனோ மற்றும் டூயல் பட் ஆதரவுடன் வருகிறது. இயர்பட்களில் USB Type-C ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு மோடுகள் மற்றும் மியூசிக் கன்ட்ரோல் போன்றவற்றுக்கு இடையே ஈஸியாக மாற்றிக்கொள்ளும் ஸ்மார்ட் டச் அமைப்புடன் வருகிறது. எந்த வகையான லைஃப் ஸ்டைலுக்கு பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது என்று நிறுவனம் கூறியுள்ளது.

Ptron Bass Buds அம்சங்கள் | Ptron Bass Buds True Wireless Earbuds

இந்த லேட்டஸ்ட் மாடல் இயர்பட் 13mm டைனமிக் டிரைவர்ஸ் மற்றும் மோனோ/டூயல் பட் திறன்களை வழங்குகிறது. முழுமையாக சார்ஜாக 1.5 மணி நேரம் எடுத்துக்கொள்ளும். இயர்பட்ஸ் 50ms லோ லேட்டன்சி மூவி மோடுடன் வருவதால், இது ஜீரோ-ஆடியோ லேக் (zero-audio lag) மூவி பார்க்கும் அனுபவத்தை வழங்குகிறது.  இயர்போன்கள் புளூடூத் v5.3ஐ பயனப்படுத்தி 10m வரையிலான ட்ரான்ஸ்மிஷன் வரம்பைக் கொண்டுள்ளது.  சத்தத்தை நீக்குவதற்கான DSP ENC டெக்னாலஜியைக் கொண்டுள்ளது. Bassbuds Wave இல் இருக்கும் இந்த மேம்படுத்தப்பட்ட DSP ENC சிஸ்டம் டீப் சவுண்ட் அனுபவத்தை அளிக்கிறது. மேலும் அதிகாமாக காற்று வீசும் சமயத்திலும் தெளிவான அழைப்புகளை வழங்குகிறது என்று அமீன் குவாஜா, Ptron இன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கூறியுள்ளார்.

Ptron இன் Bassbuds Wave இயர்பட்கள் ஒவ்வொன்றும் 40mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. எனவே, இது 40 மணிநேர பிளேடைம் வழங்குகிறது. மேலும் இயர்பட்களின் கேஸ் 300mAh பேட்டரியைப் பெறுவதால், இது தனியாக 3 மணிநேர பிளேடைமை வெறும் 10 நிமிட சார்ஜில் வழங்குகிறது. இந்த ஜயர்பட்கள் USB Type-C ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது மற்றும் IPX4 வாட்டர் ரெசிஸ்டண்ட் கொண்டுள்ளது. ஒவ்வொரு இயர்பட்டும் 7.8 கிராம் எடையை உடையது. மேலும் இதனுடைய கேஸ் 32 கிராம் எடையைக் கொண்டிருக்கிறது.

விலை | Ptron Bass Buds True Wireless Earbuds Review

இந்தியாவில் இந்த Ptron Bassbuds Wave earbuds இன் விலை ரூ. 1,299/-. இதையே நீங்கள் அமேசானில் வாங்கினால் ஆரம்ப சலுகையாக வெறும் ரூ. 999/-க்கு வாங்கலாம். இது சாடின் பிளாக் நிறத்தில் விற்பனைக்கு வருகிறது. இந்த சலுகை முதல் 100 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. 

Ptron Bass Buds Reviews, Ptron Bass Buds True Wireless Earbuds, Ptron Bass Buds True Wireless Earbuds Review, Ptron Bassbuds Wave earbuds
உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்