Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Vivo X80 Lite 5G Price in India: அல்ட்ரா பவர் கொண்டு தயாரிக்கப்படும் Vivo X80 Lite மற்றும் Vivo X80 Pro+ ஸ்மார்ட்போன்! அதுவும் எப்படி?

Priyanka Hochumin June 17, 2022 & 11:20 [IST]
Vivo X80 Lite 5G Price in India: அல்ட்ரா பவர் கொண்டு தயாரிக்கப்படும் Vivo X80 Lite மற்றும் Vivo X80 Pro+ ஸ்மார்ட்போன்! அதுவும் எப்படி?Representative Image.

Vivo X80 Lite 5G Price in India: விவோ நிறுவனம் அடுத்தடுத்து X80 சீரிஸில் புது ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் விவோ X80 ஃபிளாக்ஷிப் போன்களில் வெண்ணிலா விவோ X80 மற்றும் விவோ X80 ப்ரோ இரண்டும் உள்ளது. தற்போது Vivo X80 Lite 5G ஸ்மார்ட்போன் டெவெலப்மென்டில் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சீனாவின் டெக் ஜெயண்ட், Vivo X80 Lite 5G மற்றும் Vivo X80 Pro+ 5G ஸ்மார்ட்போன் இரண்டும் ஒன்றாக இந்த ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்த போன்களின் விவரக்குறிப்புகள் பற்றிய எந்த தகவலையும் விவோ நிறுவனம் இன்னும் அதிகாரபூர்வமாக குறிப்பிடவில்லை.

Vivo X80 Lite 5G ஸ்மார்ட்போன்

ஆனால் Root My Galaxy இன் சமீபத்திய அறிக்கையின்படி, Paras Guglani (@passionategeekz) உடன் இணைந்து Vivo X80 Lite 5G உலகளாவிய சந்தைக்காக உருவாக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. ஃபார்ம்வேர் கோடில் V2208 மாடல் நம்பர் கொண்ட Vivo ஸ்மார்ட்போனில் இது வந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது வதந்திகளுக்கு உட்பட்ட Vivo X80 Lite 5G-ஐ இந்த மாடல் நம்பர் குறிப்பிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் கூடுதல் தகவலாக, இந்த ஸ்மார்ட்போன் Snapdragon 7 Gen 1 SoC அல்லது Dimensity சீரிஸ் சிப்செட் மூலம் இயக்கப்படலாம் என்று அதில் குறிப்பிட்டுள்ளது. மேலும் 8GB ரேம் மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Vivo X80 Pro+ 5G ஸ்மார்ட்போன்

அதே அறிக்கையில், மிகவும் பவர்ஃபுளான Vivo X80 Pro+ 5G ஸ்மார்ட்போன் வரும் அக்டோபர் மாதத்தில் அறிமுகப்படுத்தால் என்று கூறப்பட்டுள்ளது. இது அதிநவீன சிப்செட்டான Snapdragon 8 Gen 1+ SoC கொண்டு இயங்கலாம். கைபேசியில் 50 மெகாபிக்சல் GN1 பிரைமரி சென்சார் மூலம் குவாட் ரியர் கேமரா இடம்பெறலாம். அதில் 48-மெகாபிக்சல் சோனி IMX598 அல்ட்ரா-வைட் சென்சார், 12-மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் சென்சார் மற்றும் 8-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்புறத்தில், Vivo X80 Pro+ 5G ஆனது 32 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டரைக் கொண்டிருக்கும். இந்த ஹை பவர் ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் 2K AMOLED டிஸ்ப்ளே 120Hz  refresh rate கொண்டு இருக்கலாம். இது 120W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் முழு விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

Vivo X80 Lite 5G Price in India, Vivo X80 Lite 5G launch date in india, Vivo X80 Lite 5G specifications, Vivo X80 Lite 5G flipkart, Vivo X80 Lite 5G amazon, vivo x80 Pro+ lite 5g price in india, vivo x80 Pro+ lite 5g specifications, vivo x80 Pro+ lite 5g flipkart, vivo x80 Pro+ lite 5g, vivo x80 Pro+ lite 5g specifications, 

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்