Fri ,Mar 01, 2024

சென்செக்ஸ் 73,662.70
1,162.40sensex(1.60%)
நிஃப்டி22,332.50
349.70sensex(1.59%)
USD
81.57
Exclusive

Redmi Note 11T Pro Price in India: 3 வேரியன்ட் மாடல்...டால்பி விஷன்...ஹை டெக் நியூ ஸ்மார்ட்போன்...Redmi-யில் வெளியாகிவிட்டது!

Priyanka Hochumin May 25, 2022 & 11:35 [IST]
Redmi Note 11T Pro Price in India: 3 வேரியன்ட் மாடல்...டால்பி விஷன்...ஹை டெக் நியூ ஸ்மார்ட்போன்...Redmi-யில் வெளியாகிவிட்டது!Representative Image.

Redmi Note 11T Pro Price in India: Redmi நிறுவனத்தின் இரண்டு லேட்டஸ்ட் மாடல்கள் Redmi Note 11T Pro+ மற்றும் Redmi Note 11T Pro நேற்று வெளியாகிவிட்டது. இந்த இரண்டு ஸ்மார்ட்போனிலும் ட்ரிபிள் ரியர் கேமரா மற்றும்  octa-core MediaTek Dimensity 8100 SoC பிராஸசரைக் கொண்டுள்ளது. இதுவரை வந்த Redmi note மாடல்களைக் காட்டிலும், ரெட்மி நிறுவனம் ரெட்மி நோட் 11டி ஆஸ்ட்ரோ பாய் பதிப்பை அறிமுகப்படுத்தியது. இது அனிமேஷன் செய்யப்பட்ட சூப்பர் ஹீரோ படத்தின் பிராண்டிங்கை பயனர்களுக்கு வழங்க சிறப்பு பரிசு பெட்டியில் வருகிறது.

Redmi Note 11T Pro+ எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் | Redmi Note 11T Pro+ Specifications

ஷ்கிரீன் 

6.6-inch டிஸ்பிலே

OS

ஆண்ட்ராய்டு அடிப்படையிலான MIUI 13

Resolution

2460x1080 Pixels

Refresh Rate

144 Hz

பிராஸசர்

octa-core MediaTek Dimensity 8100 SoC

RAM

8GB

ஸ்டோரேஜ்

512GB

பேட்டரி

4400mAh

பாஸ்ட் சார்ஜிங்

120W

விலை

8GB + 128GB - ரூ. 24,400/-

8GB + 256GB - ரூ. 26,800/-

8GB + 512GB - ரூ. 29,100/-

ரெட்மி நோட் 11T ப்ரோ 144Hz - 7 லெவல் refresh rate மற்றும் 270Hz டச் சேம்ப்ளிங் ரேட்வுடன் வருகிறது. 20.5:9 டிஸ்ப்ளே HDR10 ஆதரவுடன் வருகிறது மற்றும் DCI-P3 வண்ண வரம்பைக் (color gamut) கொண்டுள்ளது. மேலும் டால்பி விஷன் சான்றிதழையும் உள்ளடக்கியது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக, பயனர்களுக்கு மேம்பட்ட பார்வை அனுபவத்தை வழங்குவதற்கு முழு DC டிம்மிங் ஆதரவையும் கொண்டுள்ளது. தெர்மல் மேனேஜ்மென்ட்டிற்காக ஒரு வேப்பர் கூலிங் (VC) சேம்பர் இதில் உள்ளது. போட்டோ மற்றும் வீடியோ எடுக்க, 64MP Samsung ISOCELL GW1 முதன்மை சென்சார் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது.

Redmi Note 11T Pro+ இல் உள்ள இணைப்பு விருப்பங்கள் - 5G, 4G LTE, Wi-Fi 6, Bluetooth v5.3, GPS/ A-GPS, NFC, USB Type-C மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவை அடங்கும். மேலும் ஆடியோக்களுக்காக Redmi Note 11T Pro+ இல் Dolby Atmos மூலம் ஆதரிக்கப்படும் இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் வருகிறது. இதில் இருக்கும் இன்-பில்ட் பேட்டரி ஆதரவு, ஒரு முறை சார்ஜ் செய்தால் 1.18 நாட்கள் வரை உபயோகிக்க முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Redmi Note 11T ப்ரோ விவரக்குறிப்புகள் | Redmi Note 11T Pro Specifications

Redmi Note 11T ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் இருப்பது போல், இதிலையும் மீடியாடெக் டைமன்சிட்டி 8100 SoC மற்றும் 64 மெகாபிக்சல் ISOCELL GW1 ப்ரைமரி சென்சார் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது. இருப்பினும் Redmi Note 11T ப்ரோவில் 67W வேகமாக சார்ஜிங்கை ஆதரிக்கும் 5080mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. 

6GB + 128GB மாடல் - CNY 1,799 இந்திய மதிப்பில் ரூ. 20,900/-க்கு விற்பனையாகிறது.

8GB + 128GB வேரியன்ட் - CNY 1,899 அதாவது ரூ. 23,300/- முதல் விற்பனைக்கு வருகிறது.

8GB + 256GB மாடல் - CNY 2,099 நமக்கு இந்திய ரூபாயில் 25,600/-க்கு விற்பனையாகிறது.

வருகின்ற மே 31 ஆம் தேதி (Redmi Note 11T Pro Launch Date in India) முதல் சீனாவில் இருந்து பிரீ-புக்கிங் ஆர்டர் பெறலாம் என்று கூறப்படுகிறது. மேலும் ஆரம்ப சலுகையாக ரூ.1200/- கொடுக்கப்படுகிறது, இது ஜூன் 18 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் Atomic Silver, Midnight Darkness மற்றும் Time Blue shades ஆகிய நிறங்களில் கிடைக்கும்.

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்