Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Vivo T1x Price in India: 4 லேயர் கூலிங் சிஸ்டம் கொண்டு வரும் முதல் ஸ்மார்ட்போன்...முற்றிலும் கேமர்களுக்கு! வேற என்ன வேணும்!

Priyanka Hochumin July 20, 2022 & 12:15 [IST]
Vivo T1x Price in India: 4 லேயர் கூலிங் சிஸ்டம் கொண்டு வரும் முதல் ஸ்மார்ட்போன்...முற்றிலும் கேமர்களுக்கு! வேற என்ன வேணும்!Representative Image.

Vivo T1x Price in India: சமீபகாலமாக பிரம்மாண்ட அம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட்போன்கள் குறைவான விலையில் வருகிறது. அதன் பட்டியலில் அடுத்த படியாக வரப்போகிறது விவோ நிறுவனத்தின் லேட்டஸ்ட் பட்ஜெட் ஸ்மார்ட்போன். அது என்ன மாறியான ஸ்மார்ட்போன், அதன் அம்சங்கள் போன்ற மொத்த விவரங்களை பார்ப்போம்.

அட்டகாசமான டிஸ்ப்ளே

அறிக்கையின் படி, விவோ டி 1 எக்ஸ் ஸ்மார்ட்போன் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே கொண்டு வரும். நீண்ட நேர பயன்பாட்டிற்காக ஆக்டா கோர் 6nm குவால்கம் ஸ்னாப்டிராகன் 680 எஸ்ஓசி கொண்டு இயக்கப்படுகிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போன் அதிக எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. மேலும் செல்ஃபி ஷூட்டரை வைப்பதற்காக முன்பக்கத்தில் உள்ள டிஸ்ப்ளேவில் வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் இடம்பெற்றுள்ளது.

இது என்ன புதுசா இருக்கு...

இதுவரை கேட்டிராத வகையில் இந்த ஸ்மார்ட்போனில் 4 லேயர் கூலிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது கேமர்களுக்கான அம்சம், ஏனெனில் இந்த கூலிங் சிஸ்டம் கேம் ஸ்மூத்தாக விளையாட அனுமதிக்கிறது. இது போதுமே, கேமர்களை கவர. இதன் மூலம் என்ன தெரிகிறது என்றால், இது முழுக்க முழுக்க கேம் பிரியர்களுக்கான மாடல் என்று தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

அடுத்தது கேமரா

மிகவும் துல்லியமான போட்டோ அனுபவத்தை வழங்க 50-மெகாபிக்சல் பிரைமரி கேமராவுடன் டூயல் ரியர் கேமரா இடம்பெறும் என்று கூறப்படுகிறது. மேலும் சூப்பர் HDR, மல்டிலேயர் போர்ட்ரெய்ட் மற்றும் சூப்பர் நைட் மோட் போன்ற ஆதரவை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் செல்பி மற்றும் வீடியோ கால் ஆகிய பயன்பாட்டிற்கு முன்புறத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா இடம் பெரும்.

ஸ்டோரேஜ் தான் பாஸ் டாப்...

அதிகமான ஸ்டோரேஜ் தேவைப்படாமல் இருக்கும் நபர்களுக்கு இது ஒரு செம்ம சாய்ஸ். ஏனெனில், 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்டு வரும். இந்த ஸ்மார்ட்போன் மற்ற பயன்பாட்டில் கவனம் செலுத்துபவர்களுக்கு நன்கு பயனுள்ளதாக இருக்கும். 18W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை அளிக்கும் 5000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நீண்ட நேரம் பேட்டரி பயன்பாட்டை நிறுவனம் உறுதிப்படுத்துகிறது.

இவ்ளோ தானா?

இது போன்ற முக்கிய அம்சங்களை பெற்ற இந்த ஸ்மார்போன் இன்று இந்தியாவில் மதியம் 12 மணிக்கு அறிமுகமாகிறது. இதனின் விலை ரூ. 11,500/- ஆக இருக்கலாம், இருப்பினும் அதிகாரப்போர்வை தகவல் இன்னும் வெளியாகவில்லை. 0.6 சதவிகிதம் பாடி-டு-ஸ்கிரீன் விகிதம் மற்றும் 96 சதவிகிதம் NTSC வண்ண வரம்பு கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் ப்ளூ விருப்பங்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Vivo T1x Price in India, Vivo T1x Price, Vivo T1x specs, Vivo T1x specifications, Vivo T1x pro, Vivo T1x flipkart, Vivo T1x price in india flipkart, Vivo T1x 4g, Vivo T1x 5g price in india,

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்