Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

24GB ரேம்.. 1TB மெமரி.. மார்க்கெட்டையே அதிர வைத்த ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ மாடலின் ஒட்டுமொத்த சிறப்பம்சங்கள்.. | OnePlus Ace 2 Pro Specifications

Nandhinipriya Ganeshan Updated:
24GB ரேம்.. 1TB மெமரி.. மார்க்கெட்டையே அதிர வைத்த ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ மாடலின் ஒட்டுமொத்த சிறப்பம்சங்கள்.. | OnePlus Ace 2 Pro SpecificationsRepresentative Image.

ஸ்மார்ட்போன் பிரியர்களிடையே ஒன்பிளஸ் ஃபோன்களின் மீதான எதிர்பார்ப்பு ஆப்பிள் ஃபோன்களுக்கு நிகராக மாறிவிட்டது. காரணம், ஒட்டுமொத்த ப்ரீமியம் அம்சங்களோடு மட்டுமல்லாமல், இதுவரை எந்த போன்களிலும் கொடுக்கப்படாத அம்சங்களை கொண்டிருப்பது தான். அப்படி சமீபத்தில் வெளியாகி ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்க்கெட்டையும் அதிர வைத்த மாடல் தான் ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ. ஏனென்றால், இந்த போனின் அம்சம் அப்படி. பொதுவாக, ஸ்மார்ட்போன் என்றால் 6 ஜிபி அல்லது 8 ஜிபி ரேம் தான் அதிகம் கேள்விப்பட்டிருப்போம். 

ஆனால், இந்த ஃபோனில் 24 ஜிபி ரேம் பொருத்தப்பட்டுள்ளது. இதுவரை ரெட்மேஜிக் 8 எஸ் ப்ரோ என்னும் ஒரேவொரு ஃபோன் மட்டுமே 24 ஜிபி ரேம் உடன் வெளியாகியிருக்கிறது. இந்த போனின் வருகைக்குப்பின் 24 ஜிபி ரேம் கொண்ட ஃபோன்களுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது. இதனால், ஒன்பிளஸ் பக்காவாக திட்டமிட்டு 24 ஜிபி ரேம் கொண்ட உலகின் 2வது ஃபோனாக ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோவை அறிமுகம் செய்யதுள்ளது. தற்போது இந்த ஃபோனின் சிறப்பம்சங்களை விரிவாக பார்க்கலாம்.

24GB ரேம்.. 1TB மெமரி.. மார்க்கெட்டையே அதிர வைத்த ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ மாடலின் ஒட்டுமொத்த சிறப்பம்சங்கள்.. | OnePlus Ace 2 Pro SpecificationsRepresentative Image

Oneplus Ace 2 Pro ஃபோன் ஆனது, 120Hz ரெஃப்ரெஷ் ரேட்  கொண்ட 6.74-இன்ச் ஃபிளக்சிபிள் ஓஎல்இடி (OLED) போய் க்யூ9 பிளஸ் (BOE Q9+) டிஸ்பிளேவுடன் வருகிறது. மேலும் டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 450 பிபிஐ (PPI) பிக்சல் டென்சிட்டி, 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 1.07 பில்லியன் டிஸ்பிளே கலர்கள், எச்டிஆர்10 பிளஸ் (HDR10+), 2.17 மிமீ அல்ட்ரா நேரோவ் பாட்டம் பெசல் (Ultra Narrow Bottom Bezel) சப்போர்ட் வருகிறது. அதோடு 1440Hz பிடபுள்யூஎம் (PWM) டிம்மிங் ஃபிரிகொன்சி கொடுக்கப்பட்டுள்ளது. Qualcomm Snapdragon 8 Gen 2 SoC சிப்செட் மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் 24GB ரேம் [16GB ரேம் + 8GB விர்ச்சுவல் ரேம்] மற்றும் 1TB இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. 

24GB ரேம்.. 1TB மெமரி.. மார்க்கெட்டையே அதிர வைத்த ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ மாடலின் ஒட்டுமொத்த சிறப்பம்சங்கள்.. | OnePlus Ace 2 Pro SpecificationsRepresentative Image

கேமராவை பொறுத்தவரையில், பின்புறத்தில் ட்ரிபிள்-ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ள இந்த ஃபோன், சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சொன்சாருடன் கூடிய 50MP  பிரதான கேமராவை கொண்டுள்ளது. அத்துடன் 8MPஅல்ட்ரா வைடு லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் 16MP செல்ஃபி கேமரா உள்ளது. மேலும், இந்த ஒன்பிளஸ் போனில் 150W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. அதிகப்படியான பாஸ்ட் சார்ஜிங் வசதி வருவதால், ஏரோஸ்பேஸ் கிரேடு 3டி டியான்காங் கூலிங் சிஸ்டம் (Aerospace Grade 3D Tiangong Cooling System) என்னும் பிரத்யேக தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

இதன் மூலம் பேட்டரி ஹீட் கன்ட்ரோல், அன்லிமிடெட் சார்ஜிங் கன்ட்ரோல், நைட் சார்ஜ் கன்ட்ரோல் போன்றவற்றை செய்ய முடியும். மேலும், ஃபோனின் பேட்டரியை வெறும் 17 நிமிடங்களில் 100 சதவீதம் சார்ஜ் செய்துவிட முடியும். மொத்தமாகவே 4 வருடங்களில் 1600 முறை சார்ஜிங் செய்து கொள்ளும் வகையில் பேட்டரியின் தரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஃபோன் இந்தியாவில் நவம்பர் 2023ல் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தனை அம்சங்களை கொண்டிருந்தால் விலையும் அப்படிதானே இருக்கும். அந்தவகையில், இதன் விலை ரூ. 40,000 பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்