Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பட்ஜெட் விலையில் அசத்தலான அம்சங்களுடன் சாம்சங்கின் புது ரிலீஸ்.. | Samsung M34 5G Price & Specs

Nandhinipriya Ganeshan Updated:
பட்ஜெட் விலையில் அசத்தலான அம்சங்களுடன் சாம்சங்கின் புது ரிலீஸ்.. | Samsung M34 5G Price & SpecsRepresentative Image.

சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி என்ற தனது புத்தம் புதிய ஸ்மார்ட்போனை ஜூலை 07, 2023 (இன்று) அன்று இந்தியா முழுவதும் ஆன்லைனில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பெரிய டிஸ்பிளே, தரமான சிப்செட் மற்றும் பல்வேறு அம்சங்கள் தான் இதன் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கியுள்ளது. தற்போது இந்த சாம்சங் கேலக்ஸி எம் 34 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

6.5இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதிக்கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் போன்ற அசத்தலான அம்சங்களை கொண்டுள்ளது. போனின் செயல்திறனை அதிகப்படுத்துவதற்காக இந்த போனில், எக்ஸிநோஸ் 1280 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது.

எனவே, நம்பி வாங்கலாம். ஆண்ட்ராய்டு 13 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அடிப்படையாக கொண்டுள்ள இந்த சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி -யில் சிறந்த கேமரா அனுபவத்தை கொடுப்பதற்காகவே 50 எம்பி பிரைமரி கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் என்ற ட்ரிபிள் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

அடுத்ததாக, செல்ஃபி மற்றும் வீடியோகால்களுக்கு என்றே 13 எம்பி முன்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.  6ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என இரண்டு வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில், கூடுதலாக மெமரி நீட்டிப்பிற்கு என்றே ஒரு மெமரி கார்டு ஸ்லாட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

6000 எம்ஏஹெச் பேட்டரி வசதியுடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன் 24 மணி நேரமும் சிறந்த பயனர் அனுபவத்திற்கு ஏற்றது. எனவே, சார்ஜ் பற்றிய கவலையும் இருக்காது. கைரேகை ஸ்கேனர் மற்றும் 25W பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது.

மேலும், ஜிபிஎஸ், 4ஜி வோல்ட்இ, 3.5 எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளையும் கொண்டுள்ளது. ப்ளூ, பிங்க் மற்றும் பர்பிள் என்ற மூன்று வண்ணத் தேர்வுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 20 ஆயிரம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும், இதன் அதிகாரப்பூர்வ விலை அறிவிக்கப்படவில்லை.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்