Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்9 சீரிஸ் அறிமுகம்.. முன்னாடியே ஆர்டர் போடுறவங்களுக்கு செம்ம ஆஃபர்.. | Samsung Galaxy Tab S9 Series

Nandhinipriya Ganeshan Updated:
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்9 சீரிஸ் அறிமுகம்.. முன்னாடியே ஆர்டர் போடுறவங்களுக்கு செம்ம ஆஃபர்.. | Samsung Galaxy Tab S9 SeriesRepresentative Image.

சாம்சங் நிறுவனம் தனது புதிய டேப்லெட் எஸ்9 சீரிஸை (Samsung Galaxy Tab S9, Galaxy Tab S9 Plus மற்றும் Galaxy Tab S9 Ultra) 'கேலக்ஸி அன்பேக்ட் 2023 நிகழ்வில்' அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய மூன்று டேப்லெட்டுகளும் இதுவரை இல்லாத சக்திவாய்ந்த செயலியான  குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 (Qualcomm Snapdragon 8 Gen 2) மூலம் இயக்கப்படுகின்றன. இந்த மூன்று டேப்களுடனும் எஸ் பென்னும் (S Pen) இணைக்கப்பட்டுள்ளது. மேலும், டேப் மற்றும் Pen இரண்டிற்கும் இப்போது நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்காக IP68 தரப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது இந்த மூன்று மாடல்களின் விலை மற்றும் விவரக்குறிப்புகள் பற்றி பார்க்கலாம்.

Galaxy Tab S9 சீரிஸின் விவரக்குறிப்புகள் மற்றும் புதிய அம்சங்கள் என்ன?

இந்த புதிய சீரிஸின் அடிப்படை மாடல் Tab S9 ஆகும், இது 11 -இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மீதமுள்ள இரண்டு மாடல்களும் முறையே 12.4 -இன்ச் மற்றும் 14.6 -இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளன. மூன்று மாடல்களும் Snapdragon 8 Gen 2 சிப்செட் மூலம் இயக்கப்படுகின்றன. மேலும், 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் மூன்று மாடல்களும் டைனமிக் AMOLED 2X பேனலுடன் வருகின்றன. Galaxy Tab S9 சீரிஸ்க்கு, சாம்சங் புக் கவர் கீபோர்டு, புக் கவர் கீபோர்டு ஸ்லிம், ஸ்மார்ட் புக் கவர், அவுட்டோர் கவர், நோட்பேப்பர் ஸ்கிரீன் மற்றும் ப்ரைவசி ஸ்கிரீன் போன்ற பல பாகங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. மூன்று மாடல்களும் பீஜ் (Beige) மற்றும் கிராஃபைட் (Graphite) நிறங்களில் கிடைக்கின்றன.

ஸ்டோரேஜ்:

டேப் S9 ஆனது 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் மற்றும் 12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் என்று இரண்டு வேரியண்ட்களில் கொண்டு வரப்பட்டுள்ளது. Tab S9 Plus ஆனது 12GB ரேம் +256GB ஸ்டோரேஜ் மற்றும் 12GB ரேம் + 512GB ஸ்டோரேஜ் என்ற இரண்டு வேரியண்ட்களிலும்; Galaxy Tab S9 Ultra ஆனது 12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ், 12GB ரேம் + 512GB ஸ்டோரேஜ் மற்றும் 16GB ரேம் + 1TB ஸ்டோரேஜ் என்ற மூன்று வேரியண்களில் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும், மூன்று டேப்களிலும் 1TB வரை ஸ்டோரேஜ் அதிகப்படுத்திக் கொள்வதற்காக மைக்ரோஎஸ்டி ஸ்லாட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.

பேட்டரி & கேமரா:

பேட்டரிகளை பொறுத்தவரை, Tab S9, S9+ மற்றும் S9 Ultra முறையே 8,400 mAh, 10,900 mAh மற்றும் 11,200 mAh ஆகும். அவை அனைத்தும் ஆண்ட்ராய்டு 13 இல் இயங்குகின்றன. கேமராவைப் பொறுத்தவரை, Tab S9 13MP பின்புற கேமராவுடன் வருகிறது, மற்ற இரண்டும் இரட்டை 13MP+ 8MP கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்கு, Tab S9 மற்றும் Tab S9+ ஆகியவை 12MP முன் கேமராவுடன் வருகின்றன, அல்ட்ரா மாடலில் இரட்டை லென்ஸ் முன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. மூன்று டேப்லெட்டுகளும் Wi-Fi மட்டும் அல்லது 5G மாடல்களில் வருகின்றன.

மூன்று டேப்லெட்களுமே 5G, 4G LTE, Wi-Fi 6, Wi-Fi Direct, Bluetooth 5.3, GPS / A-GPS மற்றும் USB Type-C போர்ட் போன்ற இணைப்பு விருப்பங்களுடன் வருவதோடு, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.

Galaxy Tab S9 வெளியீட்டு தேதி எப்போது? 

Galaxy Tab S9 சீரியஸின் அதிகாரப்பூர்வ விற்பனை வெளியீட்டு தேதி ஆகஸ்ட் 11 ஆகும். இருப்பினும், இன்று முதல் நீங்கள் முன்கூட்டிய ஆர்டர் செய்யலாம். சாம்சங்கின் அதிகாரப்பூர்வ ஸ்டோர் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை பங்குதாரர்களிடம் விற்பனை கிடைக்கும். சாம்சங்கிலிருந்து முன்கூட்டிய ஆர்டர் செய்தால், 256ஜிபி விலையில் 512ஜிபி அல்லது 512ஜிபி விலையில் 1டிபி சேமிப்பகத்துடன் இரட்டிப்புச் சேமிப்பகத்தைப் பரிசாகப் பெறுவீர்கள்.

Galaxy Tab S9 சீரிஸ் விலை எவ்வளவு?

Samsung Galaxy Tab S9 விலை:

  • 128ஜிபி - வைஃபை: Rs.84853.96
  • 128ஜிபி - 5ஜி: Rs.100783.99 
  • 256ஜிபி - வைஃபை: Rs.116714.02
  • 256ஜிபி - 5ஜி:  Rs.111404.01

Samsung Galaxy Tab S9+ விலை:

  • 256ஜிபி - வைஃபை: Rs.106094.00
  • 256ஜிபி - 5ஜி: Rs.122024.03
  • 512ஜிபி - வைஃபை: Rs.116714.02
  • 512ஜிபி - 5G: Rs.132644.05

Samsung Galaxy Tab S9 Ultra விலை:

  • 256ஜிபி - வைஃபை: Rs.127334.04
  • 256ஜிபி - 5ஜி: Rs.143264.07
  • 512ஜிபி - வைஃபை: Rs.137954.06
  • 512ஜிபி - 5ஜி: Rs.153884.09
  • 1TB - வைஃபை: Rs.164504.11
  • 1TB - 5ஜி: Rs.180434.14

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்