Wed ,Jun 19, 2024

சென்செக்ஸ் 77,299.25
-1.89sensex(-0.00%)
நிஃப்டி23,540.90
-17.00sensex(-0.07%)
USD
81.57
Exclusive

Telegram Premium Features: வேற லெவலில் வரும் டெலிகிராம் பிரீமியத்தின் அம்சங்கள்… 

Nandhinipriya Ganeshan June 12, 2022 & 20:00 [IST]
Telegram Premium Features: வேற லெவலில் வரும் டெலிகிராம் பிரீமியத்தின் அம்சங்கள்… Representative Image.

Telegram Premium Features: வரவிருக்கும் டெலிகிராம் பிரீயம் வெர்சனில் இடம்பெறவிருக்கும் பிரத்யேக அம்சங்களை பாருங்க. அசந்து போய்டுவிங்க.

நான்கு ஜிபி பதிவேற்ற அளவு | Four GB Upload Size

முதலில் டெலிகிராம் பிரீமியம் அம்சத்தில் ஃபைல் பதிவேற்ற அளவை (File uploading size) அதிகரித்துள்ளது. அதாவது டெலிகிராம் பிரீமியம் பயனர்கள் 4 ஜிபி வரை கோப்புகளை பதிவேற்றலாம். பிரீமியம் அல்லாத பயனர்கள் பதிவேற்ற அளவாக 2ஜிபியை தொடர்ந்து வைத்திருப்பார்கள், இந்த அம்சம் சமீபத்தில் வாட்ஸ்அப்பிலும் கிடைத்தது. நீங்கள் நண்பர்களுடன் அடிக்கடி பெரிய கோப்புகளைப் பகிர்ந்துகொள்பவராக இருந்தால், இந்த அம்சம் உங்களுக்குப் பிடிக்கும்.

பிரீமியம் ஆப் ஐகான் | Premium App Icon

வேற லெவல் அம்சம், இனி நீங்க உங்க விருப்பத்திற்கு ஏற்றவாறு கொடுக்கப்பட்டுள்ள மூன்று ஐகான்களில் இருந்து மாற்றி அமைத்துக் கொள்ளலாம். 

அனிமேஷன் சுயவிவர புகைப்படங்கள் | Animated Profile Photos

தற்போது அனைவருக்கும் இலவச அம்சமாக கிடைக்கிறது. ஆனால், இனி இந்த அம்சத்தை பயன்படுத்த வேண்டும் என்றால் பணம் செலுத்த வேண்டியிருக்கும். 

வாய்ஸ்-டு-டெக்ஸ்ட் கன்வெர்ஷன் | Voice-to-Text Conversion

பெயர் குறிப்பிடுவது போல, நீங்கள் அனுப்பும் மற்றும் பெறும் குரல் செய்திகளுக்கான டிரான்ஸ்கிரிப்ட்களை இந்த அம்சம் உருவாக்குகிறது. உங்கள் நண்பர்கள் உங்களுக்கு அனுப்பும் குரல் செய்திகளைக் கேட்க உங்கள் இயர்போன்கள் உங்களிடம் இல்லாத சூழ்நிலைகளில் இது பெரிதும் உதவியாக இருக்கும்.

பிரீமியம் ஸ்டிக்கர்ஸ் | Premium Stickers

டெலிகிராம் பிரீமியத்தில் புதிய பிரத்தியேக ஸ்டிக்கர்கள் இடம்பெறும். இப்போது இருக்கும் ஸ்டிக்கர்களுடன் ஒப்பிடும்போது, இந்த ஸ்டிக்கர்ஸ் வேற லெவலில் இருக்கும். 

விரைவான பதிவிறக்க வேகம் | Faster Download Speeds

அடுத்ததாக, பிரீமியம் பயனர்களுக்கு ஒட்டுமொத்த பதிவிறக்க வேகத்தை (download speeds) அதிகரித்து வருவதாக டெலிகிராம் கூறியுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், பிரீமியம் பயனர்களுக்கு மீடியா மற்றும் ஆவணங்களைப் பதிவிறக்கும் போது வேக வரம்புகள் பிரச்சனைகள் எதுவும் இருக்காது. ஆனால், வழக்கமான பயனர்களுக்கு இது இருக்காது. அவர்கள் எப்பவும் போலவே தான் இருக்கும். 

சுயவிவர முத்திரை | Profile Badge

பிரீமியம் சந்தாதாரர்கள் உரையாடல் சாளரத்தில் தங்கள் பெயருக்கு அடுத்ததாக ஒரு நட்சத்திர ஐகான் பேட்ஜைப் பெறுவார்கள், மேலும் அது அனைத்து பயனர்களுக்கும் காட்டப்படும்.

விளம்பரங்கள் இருக்காது | No Ads

கடந்த ஆண்டு நவம்பரில், டெலிகிராம் ஸ்பான்சர் செய்திகளை அறிமுகப்படுத்தும் திட்டத்தை அறிவித்திருந்தது. அந்த வகையில், பிரீமியம் சந்தாதாரர்கள் பொது சேனல்களை பயன்படுத்தும் போது எந்த விளம்பரங்களும் இனி காட்டாது. 

ரியாக்ஷன் பட்டன்ஸ் | Unique Reactions

கடந்த டிசம்பர் மாதம் தான் இந்த அப்டேட் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் இதுவரை 16 ரியாக்ஷன்கள் மட்டும் தான் இடம்பெற்றுள்ளது. ஆனால், பிரீமியத்தில் இதன் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அட்வான்ஸ்டு சேட் மேனேஜ்மென்ட் | Advanced Chat Management

பல சேனல்களில் உள்ள பயனர்கள் புதிய மேம்பட்ட அரட்டை மேலாண்மை அம்சங்களிலிருந்து பயனடைவார்கள். டெலிகிராம் பிரீமியம் பயனர்கள் default folder for chats, auto-archive chats, மற்றும் அவர்களின் தொடர்பு பட்டியலில் இல்லாத பயனர்களிடமிருந்து புதிய செய்திகளை மறைப்பதற்கு இயல்புநிலை கோப்புறையை அமைக்கும் விருப்பத்தைப் பெறுவார்கள்.

லிமிட்ஸ் | Limits

பிரீமியம் சந்தாதாரர்கள் 1000 சேனல்கள் வரை சேரலாம், 10 சேட்களை பின் செய்து கொள்ளலாம், 10 பொது பயனர்பெயர் இணைப்புகளை முன்பதிவு செய்யலாம், 400 GIFகள் மற்றும் 200 ஸ்டிக்கர்கள் வரை சேமித்துக் கொள்ளலாம், பயாஸ் இணைப்பில் 140 எழுத்துகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், சந்தாதாரர்கள் 4096 எழுத்துகள் வரை நீண்ட தலைப்புகளைப் (captions) பயன்படுத்தலாம், வெவ்வேறு தொலைபேசி எண்களுடன் இணைக்கப்பட்ட 4 அக்கவுண்ட்களை (telegram premium account) சேர்த்துக் கொள்ளலாம், 20 கோப்புகறைகளை ஆக்ஸஷ் செய்யலாம். 

டெலிகிராம் பிரீமியம் விலை | telegram premium price

டெலிகிராம் பிரீமியத்தின் விலை மாதத்திற்கு 4.99 டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.388 இருக்கலாம் என்று சொல்கிறார்கள். சரியான மதிப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை. 

 

உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்