Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Top 10 Best Processor for Mobiles: எந்த Processor பெஸ்ட்னு புரியாம.. எந்த மொபைல் வாங்குறதுனு குழப்பமா இருக்கா..? இனி சந்தேகமே வேணாம்….!

Gowthami Subramani June 13, 2022 & 15:45 [IST]
Top 10 Best Processor for Mobiles: எந்த Processor பெஸ்ட்னு புரியாம.. எந்த மொபைல் வாங்குறதுனு குழப்பமா இருக்கா..? இனி சந்தேகமே வேணாம்….!Representative Image.

Top 10 Best Processor for Mobiles: மொபைல் போன்களை இயங்க வைப்பதில் முக்கிய அங்கமாக செயல்படும் “செயலி” (Processor) பற்றிய விவரங்களைப் பற்றி இங்குக் காண்போம்.

Processor பொருள் (What is Processors)

தொழில்நுட்ப ரீதியாக Processor என்ற சொல்லுக்கு “செயலி” என்று பொருள் உண்டு. இதற்கான் அர்த்தம் சாதனத்தினுடைய வழிமுறைகளைக் கையாளும் ஒரு மின்னணு சுற்று. மொபைல் போன்களில் எப்படி நிறைய உள்ளனவோ, மொபைல் போன்களைச் செயல்படச் செய்யும் செயலியும் பல வகைகளில் உள்ளது. இருந்த போதிலும், இன்றைய நவீன காலத்தில் மொபைல் போன்களில் இயங்கப்படும் Processors பல்வேறு செயலாக்கங்களைச் செய்யுமாறு அமைந்துள்ளன (Mobile Best Processors).

பூர்த்தி செய்ய வேண்டியவை

பல்வேறு விதமான செயலிகள், சாதனங்களப் பயன்படுத்தும் நபர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது. ஒரு மொபைல் போனில் உள்ள செயலி, அந்த மொபைலில் இருக்கும் Computation Tasks, Image Construction, Cellular Networking, Camera Calibration, Voice Calling, Image Construction போன்றவற்றைச் சரியாகக் கையாள்பவையாக இருக்கத் திட்டமிடப்பட்டுள்ளது (Best Processor in Gaming Mobiles).

இதில் தற்போது புதிதாக, அறிவார்ந்த மொபைல் செயலி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த செயலிகள் சிஸ்டம்-ஆன்-சிஃப் (SoC) என அழைக்கப்படுகிறது (What is SoC Chip). இவை மிகவும் சிக்கலானது. அதாவது இவற்றின் செயல்திறனைக் கண்டறிய கூடுதல் சோதனை தேவைப்படுகிறது. இவ்வாறு செயலியின் திறனை அறிய “பெஞ்ச் மார்க்” உதவுகிறது (Bench Mark Details).

சிறந்த செயலிகளின் பட்டியல் 2022 (Top 10 Best Processor in Mobile Phones 2022)

இதில், மொபைலின் செயல்திறனை அதிகரிக்க உதவும் சில செயலிகளின் பட்டியல்கள் கொடுக்கப்பட்டுள்ளன (Which Process is Best in Mobiles).

ஆப்பிள் A15 பயோனிக் (Apple A15 Bionic)

ஆப்பிள் ஐபோன் மொபைல்களில் ரீசன்ட்-ஆக பெஸ்ட் செயலியாக இருப்பது ஆப்பிள் A15 பயோனிக் செயலி. இது தற்போது ஐபோன் 13 ப்ரோ மாடல்களில், அதன் பேட்டரி திறனை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது (Top 10 Best Processor for Mobiles).

இந்த செயலியை சோதனைக்குட்படுத்திய போது, Single-core Score-ன் அளவு 1732 ஆகவும், Multi-core Score அளவு 4685 -ஐயும் பெற்று காணப்படுகிறது.

Dimensity 9000 (Is Dimensity 9000 Processor Good?)

MediaTek வெளியிட்ட அறிவிப்பில் படி, மிக சக்தி வாய்ந்த ஸ்மார்போன்களின் சிப்செட்-ஆக இருப்பது Dimensity 9000. இது, 2021 -ன் பிற்பகுதியில் அறிவிக்கப்பட்டதாகும். இதன் அளவு 4nm. ஃபேப்ரிகேஷன் முறையில் உருவாக்கப்பட்ட உலகின் முதல் மொபைல் செயலாக்க சிப்செட் Dimensity 9000 ஆகும். மற்ற முதன்மையான சிப்செட்களுடன் ஒப்பிடும் போது, இது அதிக டிரான்சிஸ்டர்களை வைத்திருக்கும் திறன் பெற்றுள்ளது.

ஸ்னாப்ட்ரகான் 8 ஜென் 1 (Snapdragon 8 Gen 1)

இது 10 சதவீதத்திற்கும் அதிகமான CPU செயல்திறனைக் கொண்டுள்ளதாகும். இந்த சிப்பில் உள்ளே கார்டெக்ஸ்-எக்ஸ்2 என்ற கோர் உள்ளது. இது ஸ்னாப்ட்ரகான் 870 உடன் ஒப்பிடும் போது, 3.2GHz வேகத்தை அடையும்.

ஆப்பிள் ஏ14 பயோனிக் (Apple A14 Bionic)

இந்த வகை செயலியை, A12Z-உடன் ஒப்பிடுகையில் சிங்கிள்-கோர் பணிகளுக்கு 30%-ஐ விட சிறப்பாக செயல்படுகிறது.

இதன் அதிவேக கடிகார வேகம் 1.8GHz மற்றும் பூஸ்ட் திறன் 3.01GHz ஆகும்.  இதனால் சாதனங்களைச் சிறப்பாக செயல்பட இந்த செயலி உதவுகிறது.

ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் (Snapdragon 888 plus)

Qualcomm-ன் உயர் நிலை செயலியாக இந்த Snapdragon 888 plus உள்ளது. இது பல புதிய முதன்மையான 5G மொபைல்களில் வரவுள்ளது. இந்த வகை செயலி கடந்த ஜூன் 2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மேலும், இந்த புதிய சிப்செட் Samsung Galaxy S21 மொபைகளில் வந்துள்ள Snapdragon 888 -ன் அடுத்த வெர்சன் ஆகும்.

Exynos 2200 (Exynos 2200 Processor)

இந்த வகை செயலிகளின் மூலம், GPU செயல்திறனில் ஒரு பெரிய முன்னேற்றத்தைக் காணலாம். GPU -ன் மொத்த செயல்திறன் 412728 ஆகும். இது Qualcomm Snapdragon 8 Gen 1-ஐ விட மெதுவாக உள்ள செயல்திறன் ஆகும்.

ஸ்னாப்டிராகன் 888 (Snapdragon 888)

இது ஒரு சிறந்த செயலியாகும். இது மொபைல் சாதனங்களில் வேகமாக இயங்கக் கூடிய சிப்செட்டாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கேமிங்கிற்கு இந்த வகை செயலிகள் சிறந்த செயல்திறனைத் தரும். இதுவரை Qualcomm வெளியிட்ட செயலிகளில் இது முதன்மை செயலியாக உள்ளது.

Dimensity 8100 (Dimensity 8100 Processor)

MediaTek-ன் இந்த வகை செயலிகள் அதிக உயர் செயல் திறன்களைக் கொண்ட கோர்கள் ஆகும். இது கார்டெக்ஸ்-A78 -ன் நான்கு பெரிய கோர்களுடன் உள்ளதாகும் இது மற்ற 4 கோர்கள் கார்டெக்ஸ்-A55ஐ அடிப்படையாகக் கொண்டதாகும்.

Exynos 2100

சாம்சங் மொபைல்களில் 5nm செயல்முறைக்கு இடம் பெறும் திறன் கொண்ட இந்த செயலி கேமிங்கிற்கு ஒரு சிறந்த செயல்திறனை வழங்குபவையாக உள்ளன.

கூகுள் டென்சர் (Google Tensor Processor)

கூகுள் டென்சர் என்பது கூகுள் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட சிலிக்கான் ஆகும். இடைப்பட்ட காலத்தில் உபயோகிக்கப்பட்ட சிப்களுடன் ஒப்பிடும் போது, இந்த டென்சர் குறிப்பிடத்தக்க படி, ஒரு சிறந்த செயலியாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவை அனைத்தும் 2022 ஆம் ஆண்டில் பயன்படுத்தப்படும் டாப் 10 சிறந்த செயலிகள் ஆகும் (Top 10 Best Processor in Mobile Phones 202 in Tamil).

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்