Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஒரே காலில் இத்தன பேருடன் பேசலாமா? வாட்ஸ்அப் வாய்ஸ் மாஸ் அப்டேட்..

Nandhinipriya Ganeshan Updated:
ஒரே காலில் இத்தன பேருடன் பேசலாமா? வாட்ஸ்அப் வாய்ஸ் மாஸ் அப்டேட்..Representative Image.

சிறியவர்கள் முதல் பெரியவர்களை தற்போது அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஒரு செயலியாக வாட்ஸ்அப் விளங்குகிறது. இந்த செயலியின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக அவ்வப்போது பல தாருமாரான அப்டேட்களை அள்ளி வீசி வருகிறார் மார்க் ஜூக்கர்பெர்க். தற்போது அப்படியான சில அப்டேட்களை வெளியிட்டுள்ளார். அவை என்ன என்பதை பார்க்கலாம்.

ஒரே காலில் இத்தன பேருடன் பேசலாமா? வாட்ஸ்அப் வாய்ஸ் மாஸ் அப்டேட்..Representative Image

வாட்ஸ்அப் குரூப் அப்டேட்:

வாட்ஸ்அப் என்றாலே வாட்ஸ்அப் குரூப் இல்லாமல் இருக்காது. இந்த வாட்ஸ்அப் குரூப்பில், வாட்ஸ்அப் குரூப்களின் உறுப்பினர்களை பெரிதாக்குவது மற்றும் அட்மின்கள் தாங்கள் நிர்வகிக்கும் குழுக்களில் அனுப்பப்பட்ட செய்திகளை நீக்கும் திறனை வழங்குவது என ஏற்கனவே பல அப்டேட்களை வழங்கப்பட்டு தற்போது பயன்படுத்தியும் வருகிறோம். இந்த நிலையில், சில புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது, ஒவ்வொரு குரூப்பிற்கும் அட்மின் என்று ஒருவர் இருப்பார். அதாவது, அந்த குழுவை கிரியேட் செய்தவர். அவருக்கான அப்டேட் தான் இது. அதிகமான மக்கள் வாட்ஸ்அப் கம்யூனிட்டியில் சேருவதால், குழு அட்மின்களுக்கு வாட்ஸ்அப் அவர்களின் குழு தனியுரிமை (Privacy) மீது அதிக கட்டுப்பாட்டை வழங்குகிறது. ஒரு குழுவில் யார் சேர முடியும் என்பதை நிர்வாகிகள் தீர்மானிக்கும் பொருட்டு எளிய வழியை (Tool) நிறுவனம் உருவாக்கியுள்ளது.

அதுமட்டுமல்லாமல், உங்க தொடர்பில் (Contact) இருக்கும் ஒருவரும், நீங்களும் வாட்ஸ்அப் குரூப்களில் ஒன்றாக இருக்கிறீர்கள். ஒருவேளை அது உங்களுக்கு தெரியாமல் இருந்தால், நீங்கள் இருவரும் இருக்கும் பொதுவான குழுக்களைப் பார்க்க விரும்பினால் நீங்கள் இப்போது அந்த காண்டாக்டின் பெயரை உள்ளிட்டு எளிதாக தெரிந்துக்கொள்ள முடியும். 

ஒரே காலில் இத்தன பேருடன் பேசலாமா? வாட்ஸ்அப் வாய்ஸ் மாஸ் அப்டேட்..Representative Image

வாட்ஸ்அப் டெஸ்க்டாப் ஆப்:

இன்னொரு சூப்பர் அப்டேட்டையும் மார்க் ஜூக்கர்பெர்க் வெளியிட்டு இருக்கிறார். அது என்னவென்றால் இன்று முதல் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் சேவையும் தொடங்கவுள்ளது. அதாவது, விண்டோஸ்-கான புதிய வாட்ஸ்அப் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆப்பும் மொபைல் பதிப்பைப் போன்றே கட்டமைக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த டெஸ்க்டாப் ஆப் மூலம் எட்டு நபர்களுடன் குழு வீடியோ கால்களையும், 32 பேர் வரை ஆடியோ கால்களையும் மேற்கொள்ளலாம். மேலும், முழுமையான End-to-End என்க்ரிப்ட் வசதியும் செய்யப்பட்டுள்ளது. எனவே, கவலை இல்லாமல் பயன்படுத்தலாம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்