Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கூகுள் குரோமிற்கு போட்டியாக தமிழனால் உருவாக்கப்பட்ட ப்ரவுசர்.. பாதுகாப்பு பற்றிய கவலையே வேண்டாம்.. | Ulaa Browser

Nandhinipriya Ganeshan Updated:
கூகுள் குரோமிற்கு போட்டியாக தமிழனால் உருவாக்கப்பட்ட ப்ரவுசர்.. பாதுகாப்பு பற்றிய கவலையே வேண்டாம்.. | Ulaa BrowserRepresentative Image.

அன்றாட வாழ்க்கையில் நம்மில் பலரும் ஏதாவது ஒரு விஷயத்தை தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றால் முதலில் நம்முடைய மொபைலில் இருக்கும் கூகுள் உலாவியை (Brower) தான் தேடுவோம். கூகுளில் இல்லாத விஷயமே கிடையாது. நாம் ஒரு விஷயத்தை தெரிந்துக் கொள்ள உள்ளே நுழைந்தால், அதைவிட ஏராளமான விஷயங்களை கற்றுக்கொள்ளலாம். கூகுளை தவிர Microsoft Bing, Apple Safari, DuckDuckGo, Brave என பல ப்ரவுசர்கள் இருந்தாலும், Google Chrome ப்ரவுசர் மட்டுமே முதல் இடத்தில் இருந்து வருகிறது. 

கூகுள் குரோமிற்கு போட்டியாக தமிழனால் உருவாக்கப்பட்ட ப்ரவுசர்.. பாதுகாப்பு பற்றிய கவலையே வேண்டாம்.. | Ulaa BrowserRepresentative Image

இருப்பினும், இந்த ப்ரவுசர்களை பயன்படுத்துபவர்களின் தனியுரிமை பாதுகாப்பு என்பது கேள்விக்குரியாகவே உள்ளது. இந்த உலாவிகள் அந்தந்த நிறுவனத்தின் விளம்பர வாய்ப்புகளுக்காகவும் அவற்றை பூர்த்தி செய்யும் கண்காணிப்பு நிறுவனங்களுக்கான பாதுகாப்பிற்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, மக்கள் இணையத்தில் தேடும் பொருட்கள் அல்லது சேவைகள் குறித்த தகவல்களை தொடர்புடைய நிறுவனங்களுக்கு அளித்து அதன் மூலம் விளம்பரம் செய்து வருவாய் ஈட்டுவதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளன. 

இதன் மூலம் இணைய பயனாளர் பற்றிய தகவல்கள் கண்காணிக்கப்பட்டு கொண்டே இருக்கும். இந்த அம்சங்கள் பயனர்களின் விருப்பங்கள் மற்றும் பாதுகாப்புக்கு எதிரானவை. இந்த நிலையில், ப்ரவுசரை பயன்படுத்துவர்களின் தனியுரிமை பாதுகாப்பை பாதுகாக்கும் பொருட்டு பல பெரிய ப்ரவுசர்களுக்கு போட்டியாக இந்தியாவை சேர்ந்த சோஹோ நிறுவனம் களம் இறங்கியுள்ளது. 

கூகுள் குரோமிற்கு போட்டியாக தமிழனால் உருவாக்கப்பட்ட ப்ரவுசர்.. பாதுகாப்பு பற்றிய கவலையே வேண்டாம்.. | Ulaa BrowserRepresentative Image

Ulaa Brower:

சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் உலகலாவிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான சோஹோ கார்பரேஷன் 'உலா' (Ulaa) என்ற தனியுரிமையை கொண்ட புதிய ப்ரவுசரை அறிமுகம் செய்துள்ளது. 'உலா' என்ற தூய தமிழ் பெயரை கொண்டுள்ள இந்த ப்ரவுசரை பயன்படுத்துவர்கள் குறித்த தகவல்களை பாதுகாப்பதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

கூகுள் குரோமிற்கு போட்டியாக தமிழனால் உருவாக்கப்பட்ட ப்ரவுசர்.. பாதுகாப்பு பற்றிய கவலையே வேண்டாம்.. | Ulaa BrowserRepresentative Image

பாதுகாப்பு அம்சங்கள்:

குரோம் மற்றும் சஃபாரி போன்ற ப்ரவுசர்கள் கூகுள் சர்ச் இஞ்சின் (Google Search Engine) பயன்படுத்துகின்றன. ஆனால், உலா ப்ரவுசரை பொறுத்தவரை DuckDuckGo Search Engine பயன்படுத்தப்படுகிறது. இதனால், நம் தேடல் பற்றிய விவரங்கள் அதிக பாதுகாப்புடனும், நம்பிக்கையுடனும் இருக்கும். மேலும் உங்களுக்கு நீங்கள் தேடிய ஒரு விஷயத்தை சார்ந்த விளம்பரங்கள் மற்றும் அழைப்புகள் எதுவும் வராது. உங்கள் விவரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும். அதுமட்டுமல்லாமல், Ulaa -வில் நாம் Google, Bing, Yahoo போன்ற தேடல் கருவிகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கூகுள் குரோமிற்கு போட்டியாக தமிழனால் உருவாக்கப்பட்ட ப்ரவுசர்.. பாதுகாப்பு பற்றிய கவலையே வேண்டாம்.. | Ulaa BrowserRepresentative Image

Ulaa சிறப்பம்சங்கள்:

இந்த உலா ப்ரவுசரை ஆன்ட்ராய்டு (Android), ஐஓஎஸ் (ios), விண்டோஸ் (Windows), மேக் (Mac OS) என அனைத்து விதமான OSகளிலும் பயன்படுத்தலாம். இந்த ப்ரவுசரை Ulaa இணையதளம் அல்லது Play Store, App Store என எங்கிருந்து வேண்டுமானாலும் டவுன்லோடு செய்துக்கொள்ள முடியும். மேலும், இந்த ப்ரவுசர் Personal, Work, Kids, Developer, Open Season என ஐந்து விதமான மோட் வசதிகளை வழங்குகிறது. இதில் Default ஆப்ஷனாக Personal Mode இருக்கும். Work Mode தேவையில்லாத கவனக்குறைவு ஏற்படுத்தும் இணையதளங்களை தடுக்கும்.

Kids Mode ஒரு புதிய வண்ணத்தில் UI ஒன்றை காட்டும். இதில் சில இணையதளங்களை திறக்கமுடியாது. Developer Mode தடைகளை எல்லாம் தாண்டி உங்களை இணையம் பயன்படுத்த அனுமதிக்கும். குறிப்பாக, இந்த ப்ரவுசரில் விளம்பரங்கள் கிடையாது. அதாவது, நேரடியாக Ad Blocker இருப்பதால் உங்கள் தேடலை இடைமறிக்கும் விளம்பரங்கள் எதுவும் வராது. மேலும் நீங்கள் என்ன தேடுகிறீர்கள் என்பதை ட்ராக் செய்ய முடியாத வகையில் இதில் Tracking Blocker இடம்பெற்றுள்ளது. 

கூகுள் குரோம் போலவே இந்த உலா ப்ரவுசரும் குரோமை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, இது உங்களுக்கு குரோம் போன்ற தேடல் அனுபத்தை கொடுக்கும். ஆனால், இதில் தனிப்பட்ட வசதிகள் பல சேர்க்கப்பட்டுள்ளதால் கூகுள் குரோம் ப்ரவுசர்களில் இல்லாத பல வசதிகளை நீங்கள் இதில் பயன்படுத்திக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், தொடர்ந்து அப்டேட் வசதியும் உள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்