Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

WhatsApp Update 2022: அப்படி இனிமே இம்ச இல்லப்பா...இருந்தாலும் அதை மட்டும் வைக்காம இருந்திருக்கலாம்!

Priyanka Hochumin August 09, 2022 & 17:15 [IST]
WhatsApp Update 2022: அப்படி இனிமே இம்ச இல்லப்பா...இருந்தாலும் அதை மட்டும் வைக்காம இருந்திருக்கலாம்!Representative Image.

WhatsApp Update 2022: நண்பர்களே இதோ நீங்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நியூ பிரைவசி அம்சங்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இன்ஸ்டன்ட் மெசேஜிங் சர்வீஸ் மூலம் பயனர்கள் சைலன்டாக குரூப்-பை விட்டு வெளியேற முடியும். மேலும் அவர்கள் ஆன்லைனில் இருக்கும் பொழுது யார் பார்க்கலாம் என்று தேர்வு செய்துகொள்ள முடியும். அதே போல் "வியூ ஒன்ஸ்" மெசேஜ்களுக்கு ஸ்கிரீன்ஷாட் எடுப்பதை வாட்ஸ்அப் தடுக்கும்.

முதலில் நாம் ஒரு குரூப் இல் இருந்து வெளியேறும் பொழுது அந்த குரூப் இல் இருக்கும் அனைவர்க்கும் தெரியும் வகையில் இருக்கும். அது அவர்களுக்குள் ஒரு விதமான கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளது. இதனை தடுக்க, யாருக்கும் தெரியாமல் நைசாக குரூப்-பை விட்டு வெளியேறும் வகையில் ஒரு புதிய அப்டேட்டை வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இருப்பினும் நாம் வெளியேறுவது குரூப் அட்மினுக்கு நோட்டிஃபை செய்யும். இந்த அப்டேட் அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கும் இந்த மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரும் என்று கூறப்படுகிறது.

அதே போல் நாம் ஆன்லைனில் இருக்கிறோம் என்று நம்முடைய நண்பர்கள் அல்லது குடும்பத்தினருக்கு தெரிவதன் மூலம் நாம் ஒரு இணைப்புடன் இருக்க முடியும். ஆனால் ஒரு சில கால கட்டங்களில் நாம் நம்முடைய பிரைவசியை சிந்திக்க வேண்டியதாக இருக்கிறது. அந்த மாதிரியான சமயங்களில் நீங்க பயன்படுத்திக்கொள்ள இந்த அம்சத்தை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதனைப் பயன்படுத்தி யாருக்கு நீங்கள் ஆன்லைனில் இருப்பதாக காட்ட வேண்டும் என்று முடிவெடுத்துக்கொள்ளலாம்.

பெர்மனெண்ட் டிஜிட்டல் ரெகார்ட் தேவையில்லாத புகைப்படங்கள் அல்லது மீடியாவைப் பகிர்வதற்கான 'ஒருமுறை பார்க்கவும்' ஏற்கனவே நம்பமுடியாத பிரபலமான வழியாகும் என்று அது குறிப்பிட்டது. இதனை இன்னும் பாதுகாப்பாக மாற்ற, வியூ ஒன்ஸ் மெசேஜ்களை ஸ்கிரீன்ஷாட் எடுப்பதை தடுக்கும் அம்சம் இயக்கப்பட்டுள்ளது. 

அறிக்கையின் படி, சுமார் 51 சதவீதம் பயனர்கள் தாங்கள் ஆன்லைனில் இருப்பதாய் ஹைட் செய்ய விரும்புகிறார்கள். மேலும் 91 சதவீத பயனர்கள் பிளாக்கிங் அம்சம் மிகவும் அவசியமான ஒன்று என்று கருதுவதாக கூறப்படுகிறது.

whatsapp update 2022, whatsapp update 2022 features, whatsapp update 2022 date, whatsapp update 2022 download, whatsapp update 2022 latest version, whatsapp update 2022 tamil.   

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்