Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

WhatsApp Pay Cashback: வாட்ஸ்அப்பில் மாதம் 3000 ரூபாய் வரை சம்பாதிக்கும் வாய்ப்பு இருக்கு தெரியுமா?

Priyanka Hochumin June 14, 2022 & 09:30 [IST]
WhatsApp Pay Cashback: வாட்ஸ்அப்பில் மாதம் 3000 ரூபாய் வரை சம்பாதிக்கும் வாய்ப்பு இருக்கு தெரியுமா?Representative Image.

WhatsApp Pay Cashback: முன்பெல்லாம் வாட்ஸ்அப் செய்திகளை பரிமாறிக்கொள்ள மட்டுமே பயன்படுத்தப்பட்டது, தற்போது பணம் அனுப்புவதற்கும் உபயோகப்படுத்துகிறது. அதற்கு நமக்கு இவ்ளோ கேஷ்பேக் கிடைக்கிறது.

மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப் உலகில் மக்கள் அதிகம் பயன்படுத்தி வரும் இன்ஸ்டன்ட் மெசேஜ் ஷேரிங் செயலியாகும். இதில் இதுவரை என்னென்னமோ அப்டேட்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அது மக்களுக்கு வாட்ஸ்அப் பயன்பாட்டை மிகவும் எளிதாக்குகிறது. இருப்பினும் தற்போது கிடைத்த தகவல் அல்லது அப்டேட் மூலம் பயனர்கள் பணம் சம்பாதிக்க முடியும், அதுவும் இவ்ளோ ஈஸியாக. எப்படி தெரியுமா? தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

வாட்ஸ்அப்-பில் புதிதாக பேமென்ட் சேவை இருக்கிறது. இந்த புதிய அம்சத்தைப் பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியானவர்கள் தற்போது தெரிந்துகொள்ளுங்கள், இது உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு நீங்கள் பணம் பரிவர்த்தனை செய்ய உதவுகிறது. கிட்டத்தட்ட Gpay, Phone Pe போன்றதாகும், UPI நம்பர் இருந்தால் போதும் யாருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பலாம், பெறலாம். இதைப் பற்றி பயனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மெட்டா தற்போது ஒரு யுத்தியை களமிறங்கியுள்ளது. அது என்ன வென்றால் வாட்ஸ்அப் பேமெண்ட் மூலம் பணம் அனுப்புவர்களுக்கு ரூ. 105/- வரை கேஷ்பேக் வழங்கப்படும் என்பது தான்.

வாட்ஸ்அப் கேஷ்பேக்

இவ்ளோ தொகை அனுப்பினால் தான் இந்த கேஷ்பேக் என்று எந்த நிர்பந்தமும் இல்லை. நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் எவ்ளோ தொகை வேண்டுமானாலும் அனுப்பலாம். பயனர் ஒருவர் மூன்று வெவ்வேறு நபருக்கு வாட்ஸ்அப் பேமெண்ட் மூலம் பணம் அனுப்பினால் ரூ. 35/- கேஷ்பேக் மூன்று முறை உங்களுக்கு கிடைக்கும். ஆனால் ஒரே நபருக்கு மூன்று முறை தொகை அனுப்பினால் உங்களுக்கு வெறும் ரூ. 35/- மட்டுமே கிடைக்கும். பயனர்கள் இந்த சலுகைகளைப் பெற சில விதிகள் உள்ளன.

  • நீங்கள் குறைந்தது 30 நாட்களுக்காவது வாட்ஸ்அப் பயனராக இருந்திருக்க வேண்டும்.
  • உங்களின் வங்கி தகவல்களை அளித்து வாட்ஸ்அப்-பில் பணம் செலுத்துவதற்கு ரெஜிஸ்டர் செய்திருக்க வேண்டும்.
  • பணத்தை பெறுபவர்களும் வாட்ஸ்அப் பேமெண்டில் ரெஜிஸ்டர் செய்திருக்க வேண்டும்.
  • முக்கியமாக வாட்ஸ்அப்-பின் லேட்டஸ்ட் அப்டேட் வெர்ஸனை உங்கள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும்.

எப்படி பணம் அனுப்புறது?

முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் ஆப்பை ஓப்பன் செய்யவும்.

பிறகு More options > Payments > Send payments என்று தொடரவும்.

நீங்கள் யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ அவர்களின் நம்பரை கிளிக் செய்யவும்.

நீங்கள் பணம் அனுப்ப விரும்பும் நபர் வாட்ஸ்அப் பேவில் பதிவு செய்திருந்தால், அவர்களின் காண்டாக்ட் பக்கத்தில் கிஃப்ட் ஐகான் இருக்கும்.

இல்லையென்றால் அவர்களை வாட்ஸ்அப் பேமெண்ட் சேவைகளுக்கு அவர்களை அழைக்கவும்.

இப்பொழுது நீங்கள் எவ்ளோ பணம் அனுப்ப வேண்டுமோ அந்த தொகையை உள்ளிடவும்.

பின்பு Next > Tap Send Payment என்பதை கிளிக் செய்யவும்.

இறுதியாக UPI நம்பரை உள்ளிட்டு பணத்தை அனுப்பவும். உங்களுக்கு சேர வேண்டிய கேஷ்பேக் உங்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

WhatsApp Pay Cashback, WhatsApp Pay Cashback offer, WhatsApp Payment Cashback, WhatsApp Payment Cashback offer, WhatsApp Pay app, WhatsApp Pay rewards, WhatsApp Pay india, WhatsApp Pay online, how to send money through whatsapp, 

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்