Mon ,Jun 17, 2024

சென்செக்ஸ் 76,992.77
181.87sensex(0.24%)
நிஃப்டி23,465.60
66.70sensex(0.29%)
USD
81.57
Exclusive

Yoga app for pregnancy 2023: தாயும் சேயும் ஆரோக்கியமாக கர்ப காலத்தை கடக்க...இந்த செயலிகளை ட்ரை பண்ணுங்க!

Priyanka Hochumin June 20, 2023 & 18:00 [IST]
Yoga app for pregnancy 2023: தாயும் சேயும் ஆரோக்கியமாக கர்ப காலத்தை கடக்க...இந்த செயலிகளை ட்ரை பண்ணுங்க!Representative Image.

Yoga app for pregnancy 2023: கர்ப காலத்தில் தாயும் சேயும் ஆரோகியமான இருக்க யோகா செய்யலாம். ஆனால் மிகவும் கவனமாக மேற்கொள்ள வேண்டும், ஏனெனில் இரண்டு உயிர்கள் சம்பந்தப்பட்டுள்ளன. கர்பிணி பெண்களுக்காகவே உருவாக்கப்பட்ட யோகா ஆப்கள் உள்ளன. அதனுடைய பட்டியல் இதோ!

அந்த காலத்தில் கர்பிணி பெண்கள் குனிந்து நிமிந்து வேலை செய்ய வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறுவார்கள். காலம் மாற மாற அது எல்லாம் குறைந்துவிட்டது, இப்பொழுது அதற்காகவே உடற்பயிற்சி, யோகா என்று நிறைய கிளாஸ்கள் அதிகரித்து வருகிறது. அதுமட்டும் இன்றி வீட்டில் இருந்த படியே உடற்பயிற்சி, யோகா போனைப் பார்த்து செய்துகொள்ள நிறைய செயலிகள் இருக்கின்றன. அவற்றை டவுன்லோட் செய்து பயன்பெற்றுக்கொள்ளுங்கள். பின் குறிப்பு, இதனை செய்வதற்கு முன்பு நீங்கள் செக் அப் செய்துகொள்ளும் மருத்துவரிடம் ஆலோசித்து மேற்கொள்ளுங்கள்.


Yoga App for Weight Gain: ஒரு வாரத்தில் உடல் எடையை அதிகரிக்காணுமா? இந்த செயலிகள் உங்களுக்கு ஹெல்ப்பா இருக்கும்!


ஹிப்னோபிர்திங் ஃபிட் கர்ப்பம் ஆப் | Hypnobirthing Fit Pregnancy App

கர்பிணி பெண்கள் மேற்கொள்ளும் ஹார்மோன் மாற்றங்கள், உடல் வலி என்று எதுவும் நம்மால் புரிந்துகொள்ள முடியாது. அது அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும். எனவே கர்ப்பம், பிரசவம் மற்றும் பிரசவத்தின் போது நீங்கள் அதிக வலியை உணராமல் மனதையும் உடலையும் சீராக வைத்திருக்க தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்து விஷயங்களையும் இந்த ஆப் உங்களுக்கு தெரிவிக்கும். ஹிப்னோபிர்திங் என்பது ஒரு தியான டெக்நிக், கர்ப்ப காலத்தில் பதட்டம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்க மற்றும் பிரசவ நேரத்தை அல்லது காலத்தை குறைக்க இது உதவுகிறது. Hypnobirthing Pregnancy App மூலம், ஆரோக்கியமான மற்றும் நேர்மறையான பிறப்பு அனுபவத்தை பெறுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் நீங்கள் மேற்கொள்ளலாம்.

இவர்களின் குறிப்பு

ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் தினசரி தியானங்கள்.

காட்சிப்படுத்தல் (Visualization) மற்றும் சுவாச பயிற்சிகள்.

வலியைக் குறைத்து, அமைதியான கர்ப்பம், பிரசவம் மற்றும் பிறப்பு ஆகியவற்றை அடையுங்கள்.


WhatsApp : இது நல்லா இருக்கே..? உடனே வாட்ஸப் அப்டேட் பன்னுங்க..!

 


மகப்பேறு மற்றும் பிரசவத்திற்கு முந்தைய பயிற்சி | Prenatal & Postnatal Workout

உங்களுக்கு கருவு உருவானத்தில் இருந்து குழந்தை பிறக்கும் வரை என்னென்ன உடற்பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று தெளிவாக கற்றுக்கொள்ளலாம். இந்த ஆப்பில் யோகா ஆசனாக்கள் மூன்று லெவல்களில் இருக்கிறது. உங்களுக்கு எந்த லெவல் சரியாக இருக்குமோ அதை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் உங்கள் எடை, தொப்பை அளவு, அறிகுறிகள் ஆகியவற்றைக் கண்காணித்துக்கொள்ளலாம். இந்த ஆப்பில் உங்களுக்கு யோகா கற்றுத்தருபவர்கள் மிகவும் அனுபவம் மற்றும் கற்றுத்தேர்ந்தவர்கள்.

இவர்களின் குறிப்பு

மூன்று மாத உடற்பயிற்சி திட்டங்களை வழங்குவது.

கர்ப்ப காலத்தில் வீட்டில் தினசரி உடற்பயிற்சியை கற்றுத்தருவது.

30 நாள் ஆரோக்கியமான கர்ப்ப சவாலை கொடுத்து உங்களை ஊக்குவிப்பது. 


Top 10 Best Processor for Mobiles: எந்த Processor பெஸ்ட்னு புரியாம.. எந்த மொபைல் வாங்குறதுனு குழப்பமா இருக்கா..? இனி சந்தேகமே வேணாம்….!


கர்ப்ப உடற்பயிற்சி | Pregnancy Exercise

பெண்களுக்கு ஒவ்வொரு மூன்று மாதத்திலும் அவர்களுக்கு ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்றவாறு யோகா கற்றுத்தருவது இந்த ஆப்பின் சிறப்பாகும். இதில் யோகா மட்டுமல்லாது உடற்பயிற்சி போன்ற மற்ற ஒர்க்அவுட் வசதிகளும் உள்ளது. மேலும் ஒவ்வொரு நாளும் வெயிட் ட்ரேக்கர் பயன்படுத்தி கர்ப்ப காலத்தை கண்காணித்து கொள்ளலாம்.

இவர்களின் குறிப்பு

உங்கள் கர்ப்ப முன்னேற்றம் மற்றும் டியூ டேட்டை கண்காணிக்கலாம்.

ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு மூன்று மாதங்களிலும் உடற்பயிற்சிகளைப் பின்பற்றவும்.

சிறந்த பிரசவத்திற்கு முந்தைய யோகா பயிற்சியை வீட்டிலேயே இலவசமாக வழங்குகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்