Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

Eeramana Rojave 2 Serial Today Episode: ஜீவாவிடம் ஐ லவ் யூ சொன்ன பிரியா...அதற்கு ஜீவா ரியாக்ஷன்! மறுபக்கம் பார்த்திபன் காவ்யா ட்ரிப்!

Priyanka Hochumin June 20, 2022 & 19:55 [IST]
Eeramana Rojave 2 Serial Today Episode: ஜீவாவிடம் ஐ லவ் யூ சொன்ன பிரியா...அதற்கு ஜீவா ரியாக்ஷன்! மறுபக்கம் பார்த்திபன் காவ்யா ட்ரிப்!Representative Image.

Eeramana Rojave 2 Serial Today Episode: இந்த வாரம் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் காவ்யாவை எப்படியாவது இம்ப்ரெஸ் பண்ண துடிக்கும் பார்த்திபன். ஆனால் இங்கிருந்து எஸ்கேப் ஆக ட்ரை பண்ணும் காவ்யா. நடக்கும் அழகான காட்சிகளின் ஒரு சிறிய தொகுப்பு.

கடந்த வாரம்

கடந்த வாரம் ஈரமான ரோஜாவே 2 சீரியலில், தங்கள்பிள்ளைகளின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று வீட்டில் சுமங்கலி பூஜை ஏற்பாடு செய்யும் பெற்றோர்கள். இந்த சமயத்தில் எதாவது ஒன்று நடக்க வேண்டும் என்பதால், காவ்யா பூஜைக்கு வர முடியவில்லை. இதை சாக்காக கொண்டு தனது ஆட்டத்தை ஆட தொடங்கும் தேவி. பார்த்திபனோ அதை முறியடிக்க காவ்யாவை தேடி செல்கிறான். ஒரு வழியாக காவ்யாவை மேஈண்டும் வீட்டிற்கு திரும்ப அழைத்து வருகிறான். காவ்யா ஒரு குழந்தைப் போல் செய்யும் குட்டி குட்டி விஷயங்கள் பார்த்திபனை ரசிக்க வைக்கிறது.

காவ்யா கிளாஸ்-க்கு செல்லும் பொழுது அவள் செல்லும் காரில் போன் தவறி விழுகிறது. அடுத்த நாள் அந்த டிரைவர் அந்த போனை ரம்யாவிடம் கொடுத்துவிட்டு செல்கிறான். அவர்கள் அதில் இருக்கும் போட்டோக்களை திருட்டு தனமாக பார்க்க முயல்கின்றனர். பார்த்திபன் சரியான நேரத்திற்கு வந்து அதை வாங்கி, ரம்யாவை கண்டமேனிக்கு திட்டுகிறான். அவ்ளோ தான் கடந்த வாரத்தில் ஜீவா மற்றும் பிரியாவின் ரோல் எதுவும் பெருசாக இல்லை.

இன்றைய எபிசோடு

இன்று அருணாச்சலம் மற்றும் பார்வதி இருவரும் திருப்பதி சென்று வந்ததாக கூறி, வீட்டில் இருக்கும் அனைவரையும் அழைக்கின்றனர். பிரியா ஜீவா இருவரும் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு பிரசாதம் வாங்குகின்றனர். பார்த்திபனுக்கு எப்படியும் தெரியும் காவ்யா தன்னுடன் சேர்ந்து அஆசிர்வாதம் வாங்கமாட்டாள் என்று. அதனால் அவன் காவ்யாவிடம், உங்க அக்கா ஒண்ணா சேர்ந்து ஆசீர்வாதம் வாங்கிட்டாங்க, நாம அப்படி பண்ணலைனா தேவையில்லாம பேச்சு வாங்கணும், அதனால் ஒண்ணா கால்ல விழுந்தாடலாம் என்று கூறுகிறான். பிறகு இருவரும் ஆசிர்வாதம் வாங்கி பிரசாதம் வாங்குகின்றனர். இதில் ஒரு குட்டி சந்தோஷம் பார்த்திபனுக்கு. பின்பு காவ்யா, நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்னு சொல்றாள். என்ன மா? என்ற அருணாச்சலம் கேட்டது, எனக்கு இன்னும் ரெண்டு நாள்ல ப்ரிலிமினரி எக்ஸாம் வருது, எனக்கு எக்ஸாம் சென்டர் பெங்களூருல என்று சொல்கிறாள். இதை கேட்டதும் அருணாச்சலம், ஏன்மா இந்த சென்னைய்லையே நிறைய சென்டர் இருக்கே, ஏன் அவ்ளோ தூரம் போட்ட என்று கேட்கிறார்கள். பார்த்திபன் மைண்டு வாய்ஸ், அப்ப தான இங்க இருந்து எஸ்கேப் ஆக முடியும். காவ்யா எப்படியும் சமாளிக்க, அவர்கள் நீ பார்த்திபனை கூட்டிட்டு போமா என்று கூறுகின்றனர்.

அதற்கு காவ்யா, இல்ல மாமா நான் என்னுடைய ப்ரெண்ட் கூட தான போறேன் நாங்க பஸ்ல போய்கிறோம என்று சொல்ல. வீட்டில் எல்லாரும் எப்படியோ கன்வின்ஸ் செய்துவிட்டனர். இந்த சந்தோஷத்தில் பார்த்திபன் அவனுடையாய் ரூம்மில் 'குலேபா' பாடலுக்கு ஆடிக்கொண்டே துணியை எடுத்து வைக்கிறான். காவ்யா உள்ளே வந்து பார்த்ததும் செம்ம டென்ஷன் ஆகிறாள். பிறகு நான் என்னுடைய ப்ரெண்ட் கூட போறேன், பஸ்ல டிக்கெட் புக் பண்ணியாச்சு. நீங்க ஒழுங்கா ஏதாவது காரணம் சொல்லிட்டு இங்கையே இருங்க என்று சொன்னதும் பார்த்திபன் முகம் சற்று வாடுகிறது. இங்கிட்டு இப்படின்னா, அங்குட்டு பிரியா ஜீவாவின் ஷர்ட்டை ஐயன் செய்து கொண்டிருக்கிறாள். பிறகு காதலில் பயித்தியம் பிடித்தது போல், 'நான் பிழை நீ மழலை' என்ற பாடலுக்கு ஜீவாவுடன் ஆடுவது போல் கனவு கண்டு சட்டையுடன் ஆடுகிறாள். பிறகு அந்த சட்டையை போட்டுக்கொண்டு, கண்ணாடி முன்னாடி நின்று 'ஐ லவ் யூ' அந்த யூ சொல்லும் பொழுது ஜீவா ரூம்க்கு வந்துவிட்டான். பிரியா தன்னுடைய சட்டையை போட்டுக்கொண்டு நிற்பதை மேலிருந்து கீழ் வரை பார்க்கிறான். பிரியா என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் நிற்கிறாள்.

நாளை எபிசோடு

காவ்யா மகிழ்ச்சியாக கிளம்புகிறாள். பார்த்திபன் அப்பொழுது தான் தூங்கி எழுந்து வருகிறான். அருணாச்சலம் என்னடா பொறுப்பே இல்லாம இருக்க. காவ்யா ரெடி ஆகிட்டா நீ போய் ரெடி ஆகிட்டு வா என்று சொல்கிறார். காவ்யா உடனே அவருக்கு இங்க வேலை இருக்காம், அதுனால என்ன போயிடு வர சொன்னாரு சொன்னதும், பார்த்திபன் காவ்யாவை மேலிருந்து கீழ் வரை ஒரு மாறியாக லுக் விடுகிறான். 

Eeramana rojave 2 serial, eeramana rojave 2 today episode, eeramana rojave 2 episodes, vijay tv latest promo, 

உடனுக்குடன் செய்திகளை (Serial Update) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்