Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Queen of Hills in Tamil Nadu: நம்ப ஊர்ல இப்படியெல்லாம் ஒரு இடம் இருக்கா? இத்தன வருசமா இது தெரியாம போச்சே!

Priyanka Hochumin March 10, 2022 & 16:35 [IST]
Queen of Hills in Tamil Nadu: நம்ப ஊர்ல இப்படியெல்லாம் ஒரு இடம் இருக்கா? இத்தன வருசமா இது தெரியாம போச்சே!  Representative Image.

Queen of Hills in Tamil Nadu: மே கோடை காலம் வருவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் தாங்க முடியவில்லை. ஆண்டு முழுவதும் ஸ்கூல், ஆபீஸ் என்று அனைவரும் இயந்திரம் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த சலிப்பான வாழ்க்கைக்கு லீவ் விட்டு கொஞ்சம் குடும்பத்துடன் ஆனந்தமாய் நேரத்தை கழிக்கவே நமக்கு கிடைக்கிறது கோடை கால விடுமுறை. அந்த விடுமுறையை சரியாக பயன்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும். 

குடும்பத்துடன் நேரத்தை செலவிட சினிமா செல்வோம், சொந்த ஊர்க்கு செல்வோம் அல்லது டூர்க்கு செல்வோம். டூர் என்றாலே ஊட்டி, கொடைக்கானல் அல்லது குற்றாலம் போன்ற இடங்கள் தான். ஆனால் தென் இந்தியாவில் நிறைய அழகான இடங்கள் இருக்கின்றது. நம்மை வியப்பில் ஆழ்த்தி, மெய்மறந்து பார்க்க தூண்டு சில இடங்கள் இதோ.

1. Chikmagalur (சிக்மகளூர்):

கர்நாடகாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சிக்மகளூர் மாவட்டம். இதன் சிறப்புகள் கிரி மலைத்தொடர்கள், காபி தோட்டங்கள் மற்றும் அதன் வானிலை ஆகும். இது பரந்த மற்றும் புத்துணர்ச்சியூட்டும் பசுமையான நிலப்பரப்புகளை உள்ளடக்கியுள்ளது. 

                

அங்கு என்னெல்லாம் செய்யலாம் தெரியுமா? முல்லையன் கிரியில் பேக் பேக்கிங், வைல்டு லைப் சஃபாரி மற்றும் பத்ரா வனவிலங்கு சரணாலயத்தில் ராஃப்டிங், குத்ரேமுக்கிற்கு ட்ரெக்கிங் மற்றும் இன்னும் பல என்று நிறைய இருக்கிறது . நீங்கள் இதுவரை முயற்சிக்காத பல விஷயங்களை இங்கு செய்து மகிழலாம். 

2. Alleppey (ஆலப்புழா): 

கேரளா மாநிலத்தில் லக்கேடிவ் கடலில் இருக்கும் ஒரு நகரமாகும். கேரளா என்றாலே சோந்து போன நம்முடைய கண்ணுக்கு குளிர்ச்சியான ஐஸ் கட்டி போல ஒரு சிலுசிலுப்பை தரும். இது மட்டும் என்ன கொறச்சலா? இந்த இடம் படகு பயணத்திற்கு ரொம்ப பேமஸ். 

               

இது 19 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஆலப்புழா கலங்கரை விளக்கமாகும். இதில் இருக்கும் மற்ற சிறப்பம்சம் நகரின் முல்லக்கல் கோயில் பாரம்பரிய வடிவமைப்பைக் கொண்டுள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் புன்னமடா ஏரியின் பாம்புப் படகுப் போட்டிகள் அனைவரும் அறிந்த ஒன்று.

3. Poovar (பூவார்):

திருவனந்தபுரம் மாவட்டத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள பூவார், கேரளாவின் கடலோர மாநிலத்தின் முடிவைக் குறிக்கும் இரண்டாவது கடைசி இடமாக இருக்கிறது. இது உள்ளூர் நகரமாக இருப்பதால் இயற்கை பிரியர்கள் நன்கு ரசித்து வாழ்வதற்கான பெஸ்ட் சாய்ஸ். 

               

இந்த இடத்தின் மற்றொரு பக்கத்தில், நெய்யாறு ஆற்றில் பயணம் செய்வது, விழிஞ்சம் கடல் துறைமுகத்தைப் பற்றி தெரிந்துகொள்வது, படகு பயணத்தில் மேற்கொள்வது மற்றும் ஆயுர்வேதத்தின் நன்மைகளில் ஈடுபட்டு தெரிந்துகொள்வது போன்ற பல மேற்கொண்டு மகிழலாம். 

4. Sirsi (சிர்சி):

இப்படி ஒரு பெயரை நிறைய பேர் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் இது கர்நாடகாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள சிர்சி பல அருவிகளால் சூழப்பட்ட அமைதியான சூழல் மற்றும் அடர்ந்த காடுகளுக்குப் புகழ் பெற்றது. 

                

இங்கு பொய் நாம் என்ன செய்ய முடியும் என்று யோசிக்கிறீர்களா. அங்கு இது மட்டுமில்ல பனவாசி கோயில், குட்னாபூர் ஏரி, குடாவி பறவைகள் சரணாலயம் மற்றும் முரேகர் நீர்வீழ்ச்சிக்கு மலையேற்றம் என்று இன்னும் நிறைய இருக்கிறது. 

5. Devikulam (தேவிகுளம்):

மூணாறிலிருந்து மிக அருகில் இருக்கும் தேவிகுளமானது, மக்களுக்கு தெரியாத மறைக்கப்பட்ட ஒரு பொக்கிஷமாகும். இடுக்கி மாவட்டத்தின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தேவிகுளம், அதன் பசுமையான நிலப்பரப்புகள், குளிர்ந்த காற்று மற்றும் செழுமையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைக் கொண்ட ஒரு மலையாகும். 

               

இது இந்த உலகத்திற்கு இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரு அற்புதம். இங்கு வேற என்னெல்லாம் செய்யலாம் என்றால், தேயிலைத் தோட்டங்களுக்கு செல்லலாம், கார்மேலகிரி யானைப் பூங்காவில் யானைகளைப் பார்க்க செல்லலாம், பொத்தமேடு காட்சி முனைக்கு மலையேற்றம் செய்யலாம் மற்றும் பல.

6. Gavi (கவி):

கேரளாவில் உள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தின் உட்புறத்தில் அமைத்துள்ள ஒரு பிரம்மிப்பு இது. ரன்னி காப்புக்காடு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கவி, பெரியார் தேசிய பூங்காவின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.

               

டான்டீயா தேநீர் அருங்காட்சியகத்தை பார்க்கலாம், வெலிங்டன் கோல்ஃப் மைதானத்தில் கோல்ஃப் விளையாடலாம், Hidden Valley-க்கு ட்ரெக்கிங் மற்றும் இன்னும் பல இங்கு செய்து மகிழலாம். 

நீங்கள் இது வரை இந்த இடங்களுக்கு சென்றதில்லை என்றால் இந்த இரண்டு ஆண்டுகளில் நமக்கு ஏற்பட்ட அழுத்தத்தை குறைக்க சென்று மகிழ்ந்து உற்சாகத்துடன் வாருங்கள். 

இதுபோன்ற மேலும் பலவற்றைப் பற்றி உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது search around web பேஸ்புக்  பக்கத்தை பின்தொடருங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்