Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Asia Longest Beach: நம்ம மெரினா கடற்கரைக்கு இப்படி ஒரு புகழ் இருக்கா?

Gowthami Subramani March 09, 2022 & 12:00 [IST]
Asia Longest Beach: நம்ம மெரினா கடற்கரைக்கு இப்படி ஒரு புகழ் இருக்கா?Representative Image.

ஆசிய நகரத்திலேயே ரொம்ப பெரிய பீச்னு எத சொல்லுவாங்க தெரியுமா உங்களுக்கு. அது தாங்க. தமிழ்நாடுனு சொல்லும் போதே நம்ம மனசுக்கு முதலில் தோன்றுவது சென்னை மாநகராட்சி தான். அந்த மாவட்டத்தில் உள்ள மெரினா கடற்கரையைத் தான் ஆசிய நகரத்திலேயே பெரிய கடற்கரைனு சொல்லுவாங்க.

இயற்கை அழகு

இந்த உலகத்தில் தானாக உருவான அனைத்து வகையான இயற்கையுமே முற்றிலும் அழகான தோற்றத்துடன் காணப்படும். அவைகளில் மிகச் சிறந்தவையாக உள்ள கடல். கடவுளின் படைப்பால் உலகிற்கு கிடைத்த அனைத்தும் கண்ணுக்கு வியப்பூட்டுபவையாக உள்ளன.

எத்தனை வகையான இயற்கைத் தோற்றங்கள், மரங்கள், இலைகள், செடி, கொடி, கடல், ஆறு, ஆஹா இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். இவைகளைப் பராமரிக்க மட்டும் தான் மனிதனுக்கு நேரம் இல்லை.

சென்னையின் பெருமை

அந்த வகையில், நம்ம சென்னையில் உள்ள மெரினா கடற்கரை எத்தனை வகையான புகழ் பெற்றது தெரியுமா? அவ்வளவு ஏன்? நம்ம மெரினா கடற்கரையில் உள்ள அனைத்தும் அதிசயம் தான். அங்குசெல்லும் போதே மனதிற்கு ஓர் நிம்மதி எழும். அந்த கடற்கரையைக் காணும் போதே, அங்கே இருந்து செல்லத் தோன்றாது எவருக்கும். அந்த அளவிற்குப் புகழ் பெற்றதே நமது சென்னையில் உள்ள மெரினா கடற்கரை.

உலகளவில் புகழ்

நம்ம தமிழ்நாடு மக்கள் தான், இந்த கடற்கரையில் புகழைக் கண்டிருக்கிறார்கள் என்றால், ஆசிய கண்டத்திலேயே இதன் புகழ் மேலோங்கி நிற்கிறது. எப்படினு கேட்கிறீர்களா? ஆசிய கண்டத்திலேயே மிக அதிக நீளமுடைய கடற்கரை நம்ம சென்னையில் உள்ள மெரினா கடற்கரை தான் (Best Beach In Asia). அந்த அளவிற்கு உலகிலுள்ள அனைவராலும் புகழக்கூடிய விதமாக, மெரினா கடற்கரை உள்ளது. இந்த மெரினா கடற்கரையைப் பற்றி இன்னும் ஆழமாகக் காண்போமா?

மெரினாவின் சிறப்பு

ஆசிய அளவிலேயே புகழ் பெற்ற இந்த கடற்கரைதான் ரொம்ப சிறந்த பீச்னு சொல்லுவாங்க (Longest Sea Beach In India). நம்ம தலைநகராக விளங்கும் சென்னையில் வங்காள விரிகுடாவை ஒட்டி, மெரினா அமைந்துள்ளது. மற்ற ஆழம் குறைவாக இருக்கும் ஒருசில கடற்கரைகளில் நீச்சல் அடிக்கவோ அல்லது குளிக்கவோ அனுமதி வழங்கப்படும். ஆனால், மெரினா கடற்கரை வங்காள விரிகுடாவை ஒட்டி இருப்பதால், இங்கு குளிக்கவும், நீச்சல் அடிக்கவும் அனுமதி இல்லை.

ஏன் தெரியுமா? இந்தப் பகுதியில் அடிநீர் மிகக் கொந்தளிப்பாக இருக்கும். இதனால், தண்ணீரில் இறங்குவது மிக ஆபத்தானது. இருந்த போதிலும், சுற்றுலாப்பயணிகள் மெரினா கடற்கரைக்குச் செல்வது இன்னும் பிரபலமாகக் காணப்படுகிறது. மேலும், இந்தக் கடற்கரைப் பகுதிக்குச் செல்லும் நடைபாதையில் பல சிலைகள் மற்றும் நினைவுச் சின்னங்கள் உள்ளன. இதன் மூலம், மெரினா கடற்கரைக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் இயற்கை அதிசயம் மட்டுமல்லாமல், உள்ளூர் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை அனுபவிப்பார்கள்.

கடற்கரையின் நீளம்

இந்த மெரினா கடற்கரை, இந்திய அளவில் அதிக நீளமான மற்றும் உலகளவில் இரண்டாவது நீளமான கடற்கரையாகும். இது 13 கிலோமீட்டர் அளவிலான நீளத்தைக் கொண்டது. இந்தக் கடற்கரையின் அகலம் 437 மீட்டர்கள் ஆகும். காலை, மாலை என இரு வேளைகளிலும் மெரினா கடற்கரையில் மக்கள் அலை மோதுவர். அதிலும், வார இறுதி நாள்களில் மிக அதிக கூட்டத்துடன் கடற்கரை காணப்படும். இந்த கடற்கரையின் மிகச் சிறப்பு என்னவென்றால், கடற்கரையில் சூரிய அஸ்மனத்தைப் பார்ப்பது உடல் மற்றும் மனதுக்கு மிகுந்த குளிர்ச்சி அளிக்கும்.

இது போன்ற மேலும் பல அற்புதத் தகவல்களைப் பற்றித் தெரிந்து கொள்ள நமது Search Around Web என்ற Tamil வலைதளப் பக்கத்தைப் பின் தொடருங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்