Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்த உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தளங்களெல்லாம் ஈரோடு பக்கத்துலேயே இருக்கா?

Udhayakumar November 14, 2021
இந்த உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தளங்களெல்லாம் ஈரோடு பக்கத்துலேயே இருக்கா?Representative Image.

59 யானைகள் வாழுற ஒரு கோட்டை பத்தி தெரியுமா? 1454ல் கட்டப்பட்ட  பழமையான கோட்டைய பாத்துருக்கீங்களா? ரெண்டும் ஈரோட்டு பக்கத்துலேயே இருக்குன்னா உங்களுக்கு ஆச்சர்யமா இருக்கும்ல. வாங்க நம்ம ஊர் பக்கத்துல அப்படி என்ன இருக்குனு பாத்துட்டு வந்துடலாம். 

ஈரோடு பக்கத்துல அப்படி என்னதான் இருக்குனு கேக்குறவங்கள பலரு இருக்காங்க. நம்ம ஊரே நல்ல சுற்றுலாத் தளம் தான அப்றம் எதுக்கு தனியா டூருக்கு போயிட்டுனு வீட்ல இருக்குறவங்களும் இருக்காங்க. இன்னும் சிலர் வாங்க ஊட்டி போய்ட்டு வருவோம்னு ஜாலியா போய்ட்டு வர்றாங்க. ஆனா நிறைய பேருக்கு தெரியுறது இல்ல உலக அளவுல பெயர் பெற்ற சில சுற்றுலாத் தளங்கள் ஈரோடு பக்கத்துலயே இருக்கு. வாங்க அந்த இடங்கள் பத்தியும், அங்க எப்படிலாம் போகலாம்னும் பாக்கலாம்.

மைசூர்

என்னப்பா!  ஈரோட்டு பக்கத்துலேர்ந்து மைசூர் போகக் கூடவா தெரியாதுனு நீங்க கேக்குறது புரியுது. ஆனா நம்ம ஊர்லயே நிறைய பேருக்கு தெரியுறதில்லிங்கண்ணா.  மைசூர் போகணும்னா பெங்களூர் போயி அங்கிருந்து பஸ்ல போணும்னுதான் நினைக்குறாங்க. 

எப்படி போகலாம்?

தமிழகத்திலிருந்து தாளவாடி வழியாக கர்நாடக மாநிலத்துக்கு செல்லும் வழி ஒன்று உள்ளது. அது நம் ஈரோடு மாவட்டத்திலிருந்து மிக அருகிலேயே உள்ளது. சரியாக 200 கிமீ தொலைவு பயணித்து நாம் ஈரோட்டிலிருந்து மைசூரை அடையலாம். 

ஈரோடு - மைசூரு 

தொலைவு  - 200கிமீ

பயண நேரம் - 5 மணி 15 நிமிடங்கள்

காடுகள் - சத்தியமங்கலம், புனஜூர்

சத்தியமங்கலம் காடு வழியாக பயணிப்பது சிலருக்கு ஆபத்து என்பது கருத்து நிகழ்கிறது. எனினும் பைக் ரைடு செல்வது தங்களது ரிஸ்கிற்குட்பட்டது. 

இரவு நேரங்களில் பயணிப்பதை தவிர்ப்பதும், காரில் பயணித்தால் வழியில் இறங்காமல் செல்வதும் நல்லது. 

மைசூரில் கட்டாயம் காண வேண்டிய சுற்றுலாத் தளங்கள் பற்றி தெரிந்து கொள்வோம் 

மைசூர் மட்டுமல்ல, அதன் அருகிலேயே இன்னும் பல சூப்பரான சுற்றுலாத் தளங்கள் இருக்கின்றன. வாருங்கள் அவற்றையும் பார்க்கலாம்.

ஸ்ரீரங்கப்பட்டினம்

அரங்கநாதர் ஆலயம்

திப்பு சுல்தான் கோட்டை

சோமநாதபுரம்

மைசூர் - ஸ்ரீரங்கப்பட்டினம்

மைசூரிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டினம் வெறும் 15 கிமீ தொலைவிலேயே அமைந்துள்ளது. 15லிருந்து 30 நிமிடங்களில் அங்கு சென்றுவிடமுடியும். இங்கு நாம் காண வேண்டிய இடங்களுக்கு எப்படி செல்வது, அங்கு என்னென்ன காண்பது என்பதை இப்போது தெரிந்து கொள்வோம். 

இளமை தரும் அரங்கநாதர் ஆலயம்

ஸ்ரீரங்கப்பட்டினம் பஞ்சரங்கத் தலங்களில் ஆதி ரங்கம் ஆகும். 

தென்னிந்தியாவின் மிக முக்கிய ரங்கநாதர்  தலங்களில் தலையாயது. இந்த கோவிலுக்கு வருகை தருபவர்கள் நீண்ட ஆயுளோடு பல ஆண்டு காலம் இளமையாக வாழ்வார்களாம். ஸ்ரீரங்கநாதரின் அருள் வேண்டி இங்கு ஒரு முறை சென்று வாருங்கள்.

திப்பு சுல்தான் கோட்டை

அரங்கநாதர் கோவிலிருந்து 5 நிமிட தொலைவில் அமைந்துள்ளது இந்த திப்பு சுல்தான் கோட்டை. 

திப்பு சுல்தான் கோட்டை அனுமதி கட்டணம் - இல்லை

அனுமதிக்கப்படும் நேரம் - காலை 9 முதல் மாலை 6 மணி வரை

பழமை வாய்ந்த இந்த கோட்டை 1454ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். 

எப்படி செல்வது?

மைசூரிலிருந்து 23 கிமீ தொலைவில் பெங்களூரு - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது இந்த கோட்டை.

திரிச்சூர்

ஈரோட்டிலிருந்து 208 கிமீ தொலைவில் அமைந்துள்ள இன்னொரு நகரம் திரிச்சூர். உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தளமாகும்.  

எப்படி செல்வது

ஈரோட்டிலிருந்து கோயம்புத்தூர் வழியாக பயணித்து 4 மணி நேரம் 30 நிமிடங்களில் அடையலாம்.

திரிச்சூரில் காண வேண்டிய இடங்கள்

புன்னத்தூர் கோட்டை 

திருச்சூர் பேருந்து நிலையத்திலிருந்து 28.5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த புன்னத்தூர் கோட்டை.  உள்ளூர் ஜமீன்தாருக்கு சொந்தமான இந்த கோட்டை பின்னாளில் அரசுடைமையாக்கப்பட்டது. இப்போது சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. 

இந்த கோட்டையில் 59 யானைகளும் வாழ்ந்து வருகின்றன. இங்கு செல்ல நுழைவுக் கட்டணமாக சிறியவர்களுக்கு பெரியவர்களுக்கு என தனித்தனி கட்டணமின்றி ஒரே கட்டணமாக 10ரூபாய் மட்டும் வசூலிக்கப்படுகிறது.  மேலும் கேமராவைக் கொண்டு செல்ல 25ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

ஷக்தன் தம்புரன் மாளிகை

டச்சு ஸ்டைலில் கட்டப்பட்டிருக்கும் மிகப் பழமையான கோட்டைகளில் ஒன்று இந்த ஷக்தன் தம்புரான் கோட்டை.

2005ம் ஆண்டு இந்த கோட்டை அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. 

பேருந்து நிலையத்திலிருந்து 2.5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த கோட்டை. 

திங்கள் கிழமை பராமரிப்பு பணிகளுக்காக அனுமதியில்லை. மற்ற நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை திறந்திருக்கும். 

நுழைவுக் கட்டணம் - பெரியவர்களுக்கு 10ரூபாய், சிறியவர்களுக்கு 5 ரூபாய், கேமரா 30ரூபாய்.

விளங்கன் குன்னு

பேருந்து நிலையத்திலிருந்து 

9.2கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். திருச்சூர் நகரத்தின் ஆக்ஸிஜன் ஜார் என்று செல்லமாக அழைக்கப்படுகிறது. 

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. 

பெரியவர்களுக்கு 10ரூபாயும் சிறியவர்களுக்கு 5 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி

திரிச்சூர் நகரத்திலிருந்து 60 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி.

நுழைவுக்கட்டணமாக 15 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

அருகிலுள்ள மற்ற சுற்றுலாத் தளங்கள்

சாவக்காடு கடற்கரை, டோலர்ஸ் பெசிலிக்கா, விலங்கியல் பூங்கா, சேத்துவா உப்புநீர் ஏரி, சார்பா நீர்வீழ்ச்சி, பரமேக்காவு பகவதி கோவில்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்