Sun ,Apr 21, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

Places to Visit Hampi in One Day: ஒன் டே ட்ரிப்-ஆ ஹம்பி போங்க..! திரும்ப வர மனசே வராது…! மாவீரன் ஷூட்டிங் நடந்த இடமும் இங்க தானா பாத்துக்கோங்களே…

Gowthami Subramani [IST]
Places to Visit Hampi in One Day: ஒன் டே ட்ரிப்-ஆ ஹம்பி போங்க..! திரும்ப வர மனசே வராது…! மாவீரன் ஷூட்டிங் நடந்த இடமும் இங்க தானா பாத்துக்கோங்களே…Representative Image.

Places to Visit Hampi in One Day: இந்த உலகில் ஏராளக்கணக்கான இடங்கள் அழகாகவும், அற்புதமாகவும், மாயாஜாலம் படைத்ததாகவும், உணர்வுகளை மாற்றக்கூடியதாகவும் கூட அமையும். அதில் சில இடங்களை நாம் பார்த்திருப்போம். இன்னும் சில இடங்களை போட்டோக்களிலோ, டிவியிலோ பார்த்திருப்போம். இவை எல்லாம் தவிர, இன்னும் சில இடங்கள் நமக்கு தெரியாதவைகளாகவும் இருக்கின்றன.

அந்த வகையில், நம்மால் முடிந்த அளவுக்கு குறிப்பிட்ட தூரம் இடைவெளியில் இருக்கும் பகுதிக்கு சென்று மகிழ்கிறோம். அதன் படி, நம் தமிழகத்தில் இருந்து மிகக் குறைந்த இடைவெளியில் இருக்கும் மைசூருக்கு அருகில் உள்ள ஹம்பி என்ற இடத்தைப் பற்றி தான் நாம் காணப்போகிறோம்.

பெங்களூரில் உள்ள ஹம்பி

பெங்களூரில் சுற்றிப்பார்க்க நிறைய இடங்கள் இருக்கும். அவற்றில் பெரும்பாலானவை எல்லோரும் அறியக்கூடியதாக இருக்கும். அந்த லிஸ்டில் ஹம்பி என்ற கேள்விப்பட்டிருக்கிறீர்களா..? ஆமாம்.. ஆமாம்.. எதோ படத்தில் கேள்விப்பட்டிருப்பது போலத் தோன்றுமே. ஆமாங்க ஹம்பி இடத்தை ஷூட்டிங் எடுப்பதற்கான இடமாகத் தான் இருக்கும். 2009-ல் வெளிவந்த மகதீரா மூவி முதல் இன்னும் சில மூவிகள் இந்தப் பகுதியில் தான் எடுக்கப்பட்டது. மேலும், மலையாளத்தில் ஆனந்தம் என்ற மூவியில், வொகேஷன் செல்வது போல காட்சிபடுத்தப்பட்டிருப்பதும் ஹம்பி இடம் தான்.

சுற்றியுள்ள இடங்கள்

மேலும், ஹம்பியைச் சுற்றி ஒரே நாளில் சுற்றிப்பார்க்க இன்னும் கண் கவர் இடங்கள் நிறைய உள்ளன. ஹம்பிக்கு சுற்றுலா செல்வதாக இருந்தால், இந்த இடங்களை எல்லாம் பார்க்க மறந்து விடாதீர்கள்.

விருபாக்சா ஆலயம்

ஹம்பியிலிருந்து சுமார் 1 மணி நேர இடைவெளியில் விருபாக்சா ஆலயம் அமைந்துள்ளது. ஹம்பியில், இது முக்கியம் வாய்ந்ததாகவும், சிறப்பானதாகவும் கருதப்படுகிறது.

பார்வை நேரம்: 6AM – 1PM மற்றும் 5PM – 9PM

நுழைவுக் கட்டணம்: இலவசம்

ஹம்பி பஜார்

A group of statues

Description automatically generated with medium confidence

ஹம்பி பேருந்து நிலையத்திற்கும், விருபாக்சா ஆலயத்திற்கும் இடையில் ஹம்பி பஜார் உள்ளது. இது விருபாக்ஷா பஜார் எனவும் அழைக்கப்படுகிறது. இது காண்பதற்கு அற்புதமாகவும், கண் கவர் இடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.

பார்வை நேரம்: 24 மணி நேரம்

நுழைவுக் கட்டணம்: இலவசம்

ஸ்ரீ கிருஷ்ணா / பால கிருஷ்ணா ஆலயம்

ஹம்பியில் இன்னொரு சிறப்பாக இருப்பது கிருஷ்ணா அல்லது பால கிருஷ்ணா என அழைக்கப்படும் இந்த கோவில் தான். இது விஜயநகரப் பேரரசர் காலத்தின் கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டதாகும். தற்போது UNESCO-ஆல் உலக பாரம்பரிய நினைவுச் சின்னங்களின் ஒரு பகுதியாக பட்டியலிடப்பட்ட நினைவுச் சின்னங்களின் குழுவில் ஒன்றாக உள்ளது.

பார்வை நேரம்: 6AM – 6PM

நுழைவுக் கட்டணம்: இலவசம்

படிநிலை தொட்டி

மஹாநவமி திப்பாவிலிருந்து 100மீ தொலைவிலும், ஹம்பி பஸ் ஸ்டாண்டிலிருந்து 3.5கிமீ தொலைவிலும் இந்த படிநிலை தொட்டி அமைந்துள்ளது. இது அரச அரண்மனை பகுதியில் உள்ள தர்பார் பகுதியில் நிறைய படிகள் கொண்ட தொட்டி அமைந்துள்ளது. இது கடந்த 1980-1983 ஆம் ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் தொல்லியல் துறையால் கண்டெடுக்கப்பட்டதாகும். இது ஹம்பியின் நினைவுச் சின்னங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

பார்வை நேரம்: 6AM – 6PM

நுழைவுக் கட்டணம்: இலவசம்

லோட்டஸ் மஹால்

அந்த காலத்தில் அரசுப் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட ஒரு ஒதுக்குபுறப் பகுதியான ஜெனாளா உறைக்குள் இந்த லோட்டஸ் மஹால் அமைந்துள்ளது. இதற்கு கமல் மஹால், சித்ரகனி மஹால் என்ற வேறு பெயர்களும் உண்டு.

இது ஹம்பி பேருந்து நிலையத்தில் இருந்து 3.5 கிமீ தொலைவில் உள்ளது. இது காண்பதற்கு மிக அருமையாக இருக்கும். இந்த மஹாலின் மேல் தளத்தில் வளைவு ஜன்னல்கள் கொண்ட பால்கனிகள் இருக்கிறது.

பார்வை நேரம்: 8AM – 6PM

நுழைவுக் கட்டணம்: இந்தியர்களுக்கு ரூ.10 மற்றும் வெளிநாட்டவர்களுக்கு ரூ.250

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்