Wed ,Oct 23, 2024

சென்செக்ஸ் 80,081.98
-138.74sensex(-0.17%)
நிஃப்டி24,435.50
-36.60sensex(-0.15%)
USD
81.57
Exclusive

Best Trekking Places Near Me: த்ரில்லிங்கான மலையேற்றம் பண்ணனும்னு ஆசைப்படுறீங்களா? இதோ உங்களுக்கான இடம்.. உயிர் பயம் காட்டும் மலையேற்றம்..!!

Nandhinipriya Ganeshan June 28, 2022 & 18:00 [IST]
Best Trekking Places Near Me: த்ரில்லிங்கான மலையேற்றம் பண்ணனும்னு ஆசைப்படுறீங்களா? இதோ உங்களுக்கான இடம்.. உயிர் பயம் காட்டும் மலையேற்றம்..!!Representative Image.

Best Trekking Places Near Me: நம்மில் பலருக்கும் மலையேற்றம் என்பது மிகவும் பிடிக்கும். ஆனால், பெரும்பாலும் மரங்கள் நிறைந்த அடர்ந்த காடுகளில் தான் ட்ரெக்கிங் செய்வார்கள். ஆனால், நாம் இப்போது பார்க்க போகும் இடமானது வெறும் பாறையால் ஆன ஒரு மலைப்பகுதி. இங்கு அவ்வளவு எளிதில் யாராலும் சென்றுவிட முடியாது. குறிப்பாக உயரத்தை பார்த்து பயம் இருப்பவர்கள் இந்த இடத்திற்கு சென்றால் அடுத்தது மயக்கம் தான். ஏனென்றால் அவ்வளவு உயரத்தில் இரண்டு பெரிய பாறைகளுக்கு நடுவில் நடந்து செல்ல வேண்டும். அப்படி என்ன இடம், எங்கு இருக்கிறது என்று தானே கேட்குறீங்க. வாங்க பார்க்கலாம். 

புலிகுண்டு மலை:

சித்தூரிலிருந்து (ஆந்திரப்பிரதேசம்) 18 கி.மீ தூரத்தில் பெனுமூர் என்ற இடத்திற்கு அருகில் அமைந்துள்ளது இந்த புலிகுண்டு மலை. தரை மட்டத்திலிருந்து 1000 அடி உயரத்தில் (puligundu height) உள்ள இரட்டைப் பாறை மலையாகும். இந்த மலையின் சிறப்பே அது தான். தொலைவில் இருந்து பார்க்கும் போது இது பெரிய சிவலிங்கம் (Puligundu History in Tamil) போல காட்சி தருமாம். இந்த மலையின் உச்சியில் ஒரு சிவன் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. சிவனை தரிசனம் செய்ய வேண்டும் என்றால், இந்த பாறையில் ஏறி தான் தரிசனம் செய்ய முடியும். இந்த பாறைகளில் ஏறுவது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. 

மலையேற்றம்:

இந்த மலையில் பத்து வருடங்களுக்கு முன்பு எந்த ஒரு பிடிப்பும் இல்லையாம், ஆனாலும் அவ்வூர் மக்கள் அங்கு அசால்ட்டாகசென்று வந்துக்கொண்டிருந்துள்ளனர். ஆனால், இப்போது மக்கள் மேலே ஏறுவதற்கு வசதியாக உலோக ஏணிகளை அமைத்திருக்கிறார்கள். என்னதான் இருந்தாலும் மக்களை நடுங்க வைக்கும் பெரிய குகைகளும் அங்கு இருக்கின்றன. அதை கடந்து தான் சிவன் கோவிலுக்கு செல்ல முடியும். அந்த குகைக்கு உள்ளே டார்ச் இல்லாமல் போகவே முடியாது. சுற்றிலும் இருட்டாக இருக்குமாம்.  

மெல்லிய வேலி:

அப்படி இப்படி அந்த குகையை கடந்துவிட்டீர்கள் என்றால், அடுத்த அந்த பக்கம் இருக்கும் சிவன் மலைக்கு செல்ல ஒரு வேலியை கடக்க வேண்டியிருக்கும். 1000 அடி உயரத்தில் இந்த இரண்டு பாறைகளுக்கும் இடையில் செல்ல சிறிய மற்றும் மெல்லிய வேலி காலை எடுத்து வைத்தாலே உயிரே போகும் அளவிற்கு பயம் தான். நாம் சோசியல் மீடியாவில் பார்த்திருப்போம் சீனாவில் கண்ணாடி பாலத்தை கடக்க மக்கள் எவ்வளவு பயப்படுவாங்க. அதே தான் இங்கும், உயிர் பயத்தை காட்டும் அந்த பாலத்தை கடந்து தான் போக வேண்டும். ஒருவழியாக பாலத்தை கடந்து அந்த பக்க மலைக்கு சென்று சிவனை தரிசனம் செய்துவிட்டு அப்படியே சற்று திரும்பி பாருங்கள்.

நீங்க எவ்வளவு உயரத்தில் இருக்கிறீர்கள் என்று, பிரமிக்க வைக்கும் காட்சியை கண்டு மகிழலாம். ஆனால், இந்த இடத்திற்கு மலைக்காலத்தில் சென்றால் இன்னும் சிறப்பு. நீங்க போகும் நேரம் காற்று அதிகமா அடிக்காமல் இருந்தால் அது உங்க அதிர்ஷ்டம் தான். முடிஞ்சா இந்த மலைக்கு போய்ட்டு வாங்க.. உங்களுக்கு நல்ல சுற்றுலா அனுபவத்தை தருவதோடு, உயிர் பயத்தையும் காட்டிவிடும்.  

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்