Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Best Sunrise and Sunset Places in India:மே மாதத்தில் சூரியன பாத்தா கடுப்பாகுதா...அப்ப இத பாருங்க...மனசு லேசாகிடும்!

Priyanka Hochumin May 22, 2022 & 22:10 [IST]
Best Sunrise and Sunset Places in India:மே மாதத்தில் சூரியன பாத்தா கடுப்பாகுதா...அப்ப இத பாருங்க...மனசு லேசாகிடும்! Representative Image.

Best Sunrise and Sunset Places in India: சம்மர் சீசன் காலத்தில் காலை மற்றும் மாலையில் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் கண்களுக்கு எந்த அளவுக்கு குளிர்ச்சி அளிக்கிறது தெரியுமா.

நாம் தினமும் நமது அன்றாட வாழ்க்கையை சூரிய உதயத்தை பார்த்து கொண்டு தான் ஆரம்பிக்கிறோம். சூரிய ஒளி நம்மீது படும் பொழுது, உடலுக்கு தேவையான வைட்டமின் டி கிடைக்கிறது. மேலும் சூரிய ஒளி நம்மீது படுவதால் நிறைய நன்மைகள் கிடைக்கிறது. அப்படி பட்ட சூரிய ஒளியை கவனிக்க இந்த அவசர உலகத்தில் நமக்கு நேரமில்லை. 

நீங்கள் யோசிக்கலாம் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் தினமும் தான் நடக்கிறது. அதில் என்ன சிறப்பு இருக்கிறது என்று நினைத்தால், இன்னமும் உங்களின் வாழ்க்கையை நீங்கள் வாழ ஆரம்பிக்கவில்லை என்று அர்த்தம். ஏனென்றால் தற்போது இளைஞர்கள் அதிகமாக ஐடி வேலையில் இருப்பதால், சூரிய ஒளியின் முக்கியத்துவம் அவர்களுக்கு தெரியவில்லை. மேலும் அவர்கள் ஒரு அரையிலையே உட்காந்து கொண்டு பகல் முதல் இரவு வரை வேலை செய்வதால் அவர்களுக்கு நிறைய எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது.   

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அதிகாலையில் சூரிய உதயம் மற்றும் மாலையில் சூரிய அஸ்தமனம் எந்த அளவுக்கு கண்ணுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது தெரியுமா. எனவே, தினமும் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் எந்த அளவுக்கு முக்கியம், எவ்ளோ அழகு என்பதை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். இந்த பதிவில் இந்தியாவில் மிக அற்புதமான வியக்கவைக்கும் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் எந்தெந்த இடங்களில் இருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம்.

1. கன்னியாகுமரி | Tamil Nadu 

இந்தியாவின் தென்பகுதியில் அமைத்திருக்கும் கன்னியாகுமரி, தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்த ஊர் இந்தியாவின் முடிவுக்கு மட்டும் சிறப்பு வாய்ந்தது அல்ல, இது மூன்று பெருங்கடலான அரபிக்கடல், வங்காள விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடல் ஒன்று சேரும் பகுதியாகும். எனவே, இது கன்னியாகுமரிக்கு கூடுதல் சிறப்பாக அமைகிறது. அந்த இடத்திலிருந்து சூரிய உதயம் அல்லது அஸ்தமனத்தை பார்ப்பது நமது வாழ்நாள் கனவாக இருக்கும். நீங்கள் அங்கு சென்று சூரிய உதயம்/அஸ்தமனம் பார்க்க விரும்பினால் அங்குள்ள கலங்கரை விளக்கத்தில் ஏறி பார்த்து ரசிக்கலாம். உங்களுக்கு சூரியனின் ஒளி சிவப்பு நிறத்தில் தெரியும், மேலும் கடலில் அந்த ஒளி எதிரொலிப்பதை பார்க்க இரண்டு கண்கள் போதாது. 

சம்மர் லீவுக்கு ஜில்லுனு ஒரு டூர் போலாமா..? சீசன் ஆரம்பிச்சாச்சு...குறைந்த செலவில் சொர்க்கம்..

2. மரைன் டிரைவ் | Cochin

இறைவனின் படைப்புகளில் மிகவும் ரசிக்கவைக்கும் அழகைக்கொண்டு இருக்கும் இந்த சூரிய அஸ்தமனம் அல்லது உதயம், கொச்சின் பகுதியில் மரைன் டிரைவ் என்ற இடத்தில் பார்க்கலாம். நம்முடைய ஊரில் பார்ப்பதற்கும் அங்கு பார்ப்பதற்கு என்ன வித்தியாசம் என்று நீங்கள் கேட்கலாம். நம் ஊரில் சூரிய உதயத்தை ஏதாவது ஒரு கட்டடத்தின் மெலோ அல்லது வானத்திலோ பார்ப்போம். அங்கு ஓவியரின் கலையில் உருவான ஓவியத்தைப் போல், சூரியனின் ஒளி தண்ணீரில் எதிரொலித்து சிவப்பு மஞ்சள் நிறத்தில் அழகிய காட்சியை அளிக்கிறது. 

 

சம்மர்ல கூலா ஒரு டூர்… அதுவும் இந்த இடத்துக்கு போங்க…! லைஃப் லாங் மறக்க மாட்டீங்க…!

3. வாகடோர் | Goa 

மக்களின் சொர்கம் என்று அழைக்கப்படும் கோவா நிறைய அற்புதமான இடங்களைப் பெற்றுள்ளது. கோவா என்று சொன்னாலே நினைவுக்கு வருவது பீச் தான். அங்கு மாலை முதல் விடிய விடிய மக்கள் கூடி ஆடிப்பாடி கொண்டாடுவார்கள். அங்கு அது மட்டும் சிறப்பல்ல, வகாடோர் பகுதில் மாலை சூரியன் அஸ்தமனமாகும் பொழுது அமையும் அந்த காட்சி வாழ் நாள் முழுவதும் நினைவில் வைத்திருக்கும் அற்புதமாகும்.

சம்மர் சீசன் வந்தாச்சு… அடுத்தது என்ன குளுகுளுனு டூர் தான்… உங்க பட்ஜெட்டுக்கு ஏற்ற பெஸ்ட் ஹில் ஸ்டேஷன்…!

4. அலப்பி கடற்கரை | Kerala 

கேரளாவில் zoo, நீர்வீழ்ச்சிகள், இயற்கை மற்றும் மரங்கள் என்று நிறைய கண்ணனுக்கு குளிர்ச்சியளிக்கும் இடங்கள் உள்ளன. ஆனால் இந்த இடம் பற்றிய பெரிதாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மாலையில் சூரியனின் ஒளியால் தங்க நிறத்தில் ஜொலிக்கும் கடற்கரை நம்மை மெய்மறந்து பார்க்கத் தூண்டுகிறது. கடற்கரை மணலில் அமர்ந்துக் கொண்டு மாலையில் அந்த இயற்கை அழகை ரசித்து வாழ்க்கையின் அர்த்தத்தை தெரிந்துகொள்ளுங்கள். 

அடிக்கிற வெயிலுக்கு...சும்மா ஜில்லுனு...ஒரு டிரிப் போவோமா? அப்ப இதான் பெஸ்ட் பிளேஸ்!

5. அகும்பே | Karnataka 

தென்னிந்தியாவின் 'சிரபுஞ்சி' என்று அழைக்கப்படும் அகும்பே கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமாகும். நீங்கள் அங்கு சுற்றுலா சென்றிருந்தால் அதிகாலையில் இந்த இடத்திற்கு சென்று வானிற்கு அழகு சேர்க்க உதயமாகும் சூரியனின் அழகைக் காணலாம். அதுமட்டுமல்லாது மழை காலத்தில் வானவில் பார்க்கவும் ஏற்ற இடமாக அமைகிறது.

கடவுளின் தேசம் கர்நாடகா தான்...? யாரு சொன்னது, போயிட்டு வந்தா நீங்களே சொல்லுவீங்க..

உடனுக்குடன் செய்திகளை (Latest News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்