Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்தியாவால் அச்சுறுத்தல்..! அலறும் சீனா..?

Bala August 25, 2022 & 12:50 [IST]
இந்தியாவால் அச்சுறுத்தல்..!  அலறும் சீனா..?Representative Image.


இந்தியாவால் தமக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக சீனா தெரிவித்துள்ள கருத்து பேசு பொருளாக மாறியுள்ளது.

சீன வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது, சர்சைக்குரிய பகுதிகளில் 14 வது தலாய் லாமாவை இந்தியா ராணுவம்  ஹெலிகாப்டரில் பாதுகாப்பாக அழைத்து செல்கிறது. இதன் மூலம் இந்தியா சீன பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்து சீனாவுக்கு அச்சுறுத்தலை ஏற்ப்படுத்துக்கிறது. இந்தியா ஒரு விஷயத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் திபெத் தன்னாட்ட்சி பிராந்த்தியம் தற்போது, பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெற்றுள்ளது. இந்தியா திபெத் தொடர்பாக சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதால் அங்கு அமைதியை குலைக்க பார்ப்பதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. 

திபெத்திய ஆன்மிக தலைவரான 14வது தலாய் லாமா கடந்த ஜூலை மாதம்  சீனாவின் எல்லையொட்டியுள்ள லடாக் பகுதிகளில் சுற்றுபயணம் மேற்கொண்டார். இதனையடுத்து அவரது பயணம் நிறைவடையவிருந்த நிலையில்,  இலங்கையில் சீனாவின் உளவுகப்பல் வருகையின் போது தலாய் லாமாவின் பயணம் லடாக் பகுதிகளில் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

சீனாவின் உளவுக்கப்பல் இலங்கை வந்தடைந்த போது, தென்னிந்தியாவில் தேவையற்ற பதற்றத்தை விரும்பாத இந்தியா, சிக்னலகளை இடைமறிக்கும் மின்னியல் போர் கப்பலை விசாகப்பட்டினத்தில் இருந்து அனுப்பி விட்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் முழுவதும் ராஜதந்திர ரீதியாகவே இருந்ததாக சிலர் கூறிவருகின்றனர்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்