Tue ,Nov 05, 2024

சென்செக்ஸ் 78,782.24
-941.88sensex(-1.18%)
நிஃப்டி23,995.35
-309.00sensex(-1.27%)
USD
81.57
Exclusive

இவர்களுடன் செல்ல பிடிக்கவில்லை :- பிளஸ்1 மாணவன் தற்கொலை..!

Bala August 17, 2022 & 15:28 [IST]
இவர்களுடன் செல்ல பிடிக்கவில்லை :- பிளஸ்1 மாணவன் தற்கொலை..!Representative Image.

தன்னை விட வயது குறைவானவர்களுடன் பள்ளிக்கு செல்ல பிடிக்கவில்லை எனக்கூறி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

சென்னை ஆர்.கே.னகரை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் சதிஷ் சென்னையி, கடந்த ஆண்டு 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். 10 ம் வகுப்பில் தோல்வியடைந்த நிலையில் மீண்டும் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.

பின்னர் அவரை, காட்பாடி காங்கேயநல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 வகுப்பில் சேர்த்தனர். வேலூர் காகிதப்பட்டறை தலையாரி மானியம் தெருவை சேர்ந்த அவரது மாமா மனோகரன் என்பவரது வீட்டில் தங்கி தினமும் பள்ளிக்கு சென்று வந்தார்.

இந்நிலையில் தன்னைவிட வயது குறைந்தவர்களுடன் பள்ளிக்கு செல்வது பிடிக்கவில்லை என அவ்வப்போது சதிஷ் தனது உறவினர்களிடம் கூறி வந்துள்ளார். இதனால் மனமுடைந்த காணப்பட்ட மாணவன், அவரது மாமா வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்