அதிமுக பொதுக்குழு வழக்கில் சாதகமான தீர்ப்பு வந்த நிலையில் சென்னை, மெரினாவில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கைகொடுத்த முக்கிய 7 வாதங்கள் வெளியாகிள்ளன. அவை,
1. அதிமுக பொதுக்குழுவை சட்டப்படி கூட்டவில்லை.
2. பொதுக்குழுவை அவைத் தலைவர் கூட்ட முடியாது. அவைத் தலைவரை ஒருங்கிணைப்பாளர் அங்கீகரிக்கவில்லை.
3. ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவில்லை.
4. ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் காலாவதியானால் பொதுக்குழு உறுப்பினர்கள் பதவிகளும் காலாவதியாகும்.
5. ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் 5 ஆண்டுகளுக்கு தொடரும்.
6. ஜூன் 23 பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளரை காலாவதி செய்வதாக தீர்மானமே இல்லை.
7. அதிமுக பொதுக்குழுவிற்கு 15 நாட்களுக்கு முன்பே அழைப்பு விடுக்க வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்படவில்லை.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…