Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விநாயகர் சிலை கரைப்பில் விபரீதம்.. 7 பேர் நீரில் மூழ்கி பலி!!

Sekar September 10, 2022 & 14:17 [IST]
விநாயகர் சிலை கரைப்பில் விபரீதம்.. 7 பேர் நீரில் மூழ்கி பலி!!Representative Image.

ஹரியானாவில் நேற்று விநாயகர் சிலைகள் கரைக்கும் நிகழ்வின் போது நீரில் மூழ்கி 7 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஹரியனாவின் சோனிபட்டில் மூன்று பேரும், மகேந்திரகரில் நான்கு பேரும் நீரில் மூழ்கி இறந்தனர்.

ஹரியானாவில் ஆகஸ்டு 31ஆம் தேதி தொடங்கிய விநாயக சதுர்த்தியின் 10 நாள் திருவிழா விஸ்வரூப வைபவத்துடன் நேற்று நிறைவடைந்தது. விநாயகர் சிலைகள் அருகில் உள்ள நீர்நிலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்படுகின்றன. பிரமாண்ட ஊர்வலமாக சிலைகளை பக்தர்கள் எடுத்துச் செல்கின்றனர்.

சோனிபட்டின் மிமர்பூர் காட் பகுதியில், ஒருவர் தனது மகன் மற்றும் மருமகனுடன் சிலை கரைப்புக்கு நிலையில், மூன்று பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 

இதேபோல் மகேந்திரகர் என்ற இடத்தில், கனினா-ரேவாரி சாலையில் அமைந்துள்ள ஜகடோலி கிராமத்திற்கு அருகே உள்ள கால்வாயில் விநாயகர் சிலையை கரைக்கச் சென்ற சுமார் 9 பேர் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் ஹரியானா முதல்வர் மனோகர் கட்டார், “மகேந்திரகர் மற்றும் சோனிபட் மாவட்டங்களில் கணபதி நீராடலின் போது கால்வாயில் மூழ்கி பலர் அகால மரணமடைந்த செய்தி மனதை உலுக்குகிறது.

இந்த கடினமான நேரத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருடன் நாங்கள் அனைவரும் நிற்கிறோம். தேசிய பேரிடர் மீட்புக் குழு நீரில் மூழ்கிய பலரை காப்பாற்றியுள்ளது, அவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன்." என்று கூறினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்