Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இத்தனை பேர் கல்லூரி போகலையா.. பள்ளிக்கல்வித்துறை ஷாக் தகவல்!!

Sekar September 23, 2022 & 16:41 [IST]
இத்தனை பேர் கல்லூரி போகலையா.. பள்ளிக்கல்வித்துறை ஷாக் தகவல்!!Representative Image.

தமிழகத்தில் இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களில் ஆயிரக்கணக்கான பேர் உயர்கல்விக்கு செல்லவில்லை என்ற அதிர்ச்சித் தகவலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. மேலும் அவர்கள் உயர்கல்வி செல்வதற்கு சிறப்பு வழிகாட்டுதல்களை வழங்கவும் திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "பார்வையில்‌ காணும்‌ கடிதத்தில்‌, 2021-22ம்‌ கல்வி ஆண்டில்‌ 12ம்‌ வகுப்பு முடித்த மாணவர்கள்‌ இவ்வாண்டு 2022-23ல்‌ உயர்கல்வி தெடர்ந்துள்ளனரா என்பதனை அறிந்திடவும்‌. அவ்வாறு உயர்கல்வி தொடரா மாணவர்கள்‌ இருப்பின்‌ அதற்கான காரணத்தை கண்டறிந்து, அதனை களைந்து, அவர்கள்‌ உயர்கல்வி தொடர்ந்திட தேவையான வழிகாட்டுல்கள்‌ வழங்கவும்‌ தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தின்‌ போது பெறப்பட்ட 79,762 மாணவர்களின்‌ விவரங்களில்‌ 8.588 மாணவர்கள்‌ எவ்வித உயர்கல்விக்கும்‌ விண்ணைப்பிக்கவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே இத்தகு மாணவர்களை ஒவ்வொருவராக தனித்தனியே தொடர்பு கொண்டு உரிய உயர்கல்வி வழிகாட்டுதல்கள்‌ மற்றும்‌
ஆலோசனைகள்‌ மாநிலத்‌ திட்ட இயக்ககத்தில்‌ இருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கென 26.08.2022 அன்று நடைபெற்ற கூட்டத்தில்‌ பெறப்பட்ட விவரங்களில்‌ கூடுதலாக மாணவர்களின்‌ EMIS எண்‌, கல்வி மாவட்டம்‌, மதிப்பெண்‌, தொலைப்பேசி எண்‌ உள்ளிட்ட விடுபட்ட தகவல்களை பள்ளிகளிலிருத்து பெற்று வழங்க வேண்டப்படுகிறது.

எனவே. சார்ந்த மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌ இப்பணியினை முன்னுரிமை அழுப்படையில்‌ மேற்கொண்டு விவரங்களை பெற்று உரிய படிவத்தில்‌ மாநிலத்‌ திட்ட இயக்ககத்திற்கு அனுப்ப கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌." எனத் தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்