Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

30 பேரின் உயிரை காவு வாங்கிய கொடிய வைரஸ்.. இது கொரோனாவ விட பயங்கரமா இருக்கும் போலயே...?

Gowthami Subramani October 27, 2022 & 14:00 [IST]
30 பேரின் உயிரை காவு வாங்கிய கொடிய வைரஸ்.. இது கொரோனாவ விட பயங்கரமா இருக்கும் போலயே...?Representative Image.

உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று இன்னும் தணியாத நிலையில், தற்போது புதிய வகை வைரஸானது பரவி, 30 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடாக விளங்கும் உகாண்டா நாட்டில், எபோலா எனும் கொடிய வகை தொற்று நோய் பரவியுள்ளது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த கொடிய வைரஸால், இதுவரை 30 பேர் பலியாகியுள்ளனர். இது குறித்து, உகாண்டா நாட்டின் சுகாதாரத் துறிய அமைச்சர் கூறியதாவது,"எபோலா எனும் கொடிய தொற்று பரவி 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, கூடுதல் சிகிச்சை மையங்களை உகாண்டா அரசு ஏற்படுத்தி வருகிறது" என்று கூறினார். மேலும், இதில் தொற்று பாதிக்கப்பட்டு உறுதிபடுத்தப்பட்டவர்களில் 15 பேர் சுகாதார ஊழியர்கள் ஆவார். இவர்களுள் 6 பேர் இந்த கொடிய வகை தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் மற்றும் கொரோனா உருமாற்றங்களால் பரவும் வைரஸ் என தொடர்ந்து வைரஸின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், தற்போது எபோலா எனும் கொடிய வைரஸ் பரவி வருவது பொதுமக்களிடையே பெரும்  அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்