Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஐ.நாவுக்கே சென்றாலும் இபிஎஸ்க்கு தான் வெற்றி...!

Bala July 20, 2022 & 17:24 [IST]
ஐ.நாவுக்கே சென்றாலும் இபிஎஸ்க்கு தான் வெற்றி...!Representative Image.

ஐநாவுக்கே சென்றாலும் எடப்பாடி பழனிசாமிக்கு தான் வெற்றி கிடைக்கும் என முன்னாள் அமைசர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

வன்முறை காரணமாக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்நிலையில் சீலை அகற்றக்கோரி இபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கும் படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் அலுவலகத்திற்குள் ஒரு மாதத்திற்கு தொண்டர்கள் யாரும் நுழையக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓ.பன்னீர்செலவம் ஐநாவுக்கு சென்றாலும் எடப்பாடி பழனிசாமிக்கு தான் வெற்றி கிடைக்கும் என்றும், உயர்நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்