அதிமுக பொதுக்குழு தொடர்பாக பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று இறுதி விசாரணை செய்யப்படுகிறது.
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி, ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்றும் இடைகால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்றும் தனி நீதிபதி தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், தனி நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தார். இதனைதொடர்ந்து பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று இறுதி விசாரணை செய்யப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…