Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மனிதர்களை தொடர்ந்து விலங்குகளுக்கும் ஆபத்து...?

Bala July 02, 2022 & 10:42 [IST]
மனிதர்களை தொடர்ந்து விலங்குகளுக்கும் ஆபத்து...?Representative Image.

கேரளாவில் ஆந்த்ராக்ஸ் நோய் காரணமாக, அதிரப்பில்லி வனப்பகுதியில் காட்டுப்பன்றிகள் பலியாகியுள்ள சம்பவம் அதிர்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் அதிரப்பில்லி வனப்பகுதியில் காட்டுப்பன்றிகள் கொத்து, கொத்தாக பலியாகின. இதையடுத்து, சுகாதாரத் துறையினர், கால்நடை பராமரிப்புத் துறையினர், வனத் துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் ஆந்த்ராக்ஸ் தொற்று இருப்பதை உறுதி செய்வதற்காக இவற்றின் மாதிரிகள் பரிசோனைக்காக எடுத்து செல்லப்பட்டுள்ளதாக  கேரள சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்தார்.

ஆந்த்ராக்ஸ் என்றால் என்ன?

ஆந்த்ராக்ஸ் என்பது விலங்குகளிடம் பரவக்கூடிய ஒருவகை தொற்று நோயாகும். இந்த வகை தொற்று உலகெங்கிலும் உள்ள வீட்டு மற்றும் காட்டு விலங்குகளை பாதிக்கலாம் என மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட விலங்குகள் அல்லது அசுத்தமான விலங்கு பொருட்களுடன் தொடர்பு கொண்டால் மக்களும் ஆந்த்ராக்ஸ் நோயால் பாதிக்கப்படலாம். அமெரிக்காவின் பொது சுகாதார நிறுவனமான நோய் கட்டுப்பாட்டு மையம் (CDC) படி, இது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் கடுமையான நோயை ஏற்படுத்தும். இருப்பினும், இது தொற்று நோய் அல்ல என தெரிவித்துள்ளது.

ஐயோ.. ஆந்த்ராக்ஸ் மனிதர்களுக்கு வந்த அறிகுறிகள் இப்படி தான் இருக்குமா? 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்