Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வாய்கொழுப்பா..? பணக்கொழுப்பா..? சேட்டை தான் வேண்டாம் டி.ஜெவை எச்சரித்த சீமான்...!

Bala August 03, 2022 & 17:12 [IST]
வாய்கொழுப்பா..? பணக்கொழுப்பா..?  சேட்டை தான் வேண்டாம் டி.ஜெவை எச்சரித்த சீமான்...!Representative Image.


சீமான் வாய்கொழுப்பை திமுகவிடம் காட்ட  வேண்டும் என ஜெயக்குமார் கூறிய நிலையில், ஜெயக்குமாருக்கு பணக்கொழுப்பு என சீமான் பதிலளித்துள்ளார்.

முன்னாள் முதல் கருணாநிதிக்கு பேனா சிலைக்க வைக்கப்போவதாக செய்திகள் வெளியாகிய நிலையில் அதற்கு சிலர் எதிர்ப்பு , ஆதரவும் தெரிவித்தனர். இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த நம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா சிலை வைத்தால், எம்.ஜி.ஆர்., நினைவாக தொப்பி சிலையும், ஜெயலலிதா நினைவாக 'மேக்அப்' பெட்டி சிலையும் வையுங்கள்' என பேசியிருந்தார். இது அதிமுகவினரிடையே கோபத்தை ஏற்ப்படுத்தியது.

இதனையடுத்து ஆவின் பால் மோசடி தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழகம் முழுவதும் ஒரு நாளைக்கு 37 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனையாகிறது. அதில் தினந்தோறும் ஐந்தரை லட்சம் லிட்டர் பாலை நாசர் என்ற பூனைக்குட்டி குடித்து விட்டது என்றும், அந்த பூனை குடித்த பாலின் விலை ஒரு நாளைக்கு 2 கோடியே 40 லட்சம் ரூபாய் என்றும், வருடத்திற்கு 800 கோடி என்றும் தெரிவித்துள்ளார். மேலும் சீமான் அதிமுகவுடன் விளையாட வேண்டாம் என்றும், அதிமுக தலைவர்களை சீண்டினா; பின்விளைவுகள் கடுமையாக இருக்கும். சீமான் வாய் கொழுப்பை திமுகவிடம் காட்ட வேண்டுமானால் காட்டி கொள்ளட்டும் என்றார்.

இது தொடர்பாக பேசிய சீமான்; என்னுடம் மோத வேண்டாம், நீங்கள் கோடி கோடியாக கொள்ளையடித்து வைத்துள்ளீர்கள், என்னை எதிர்த்து பேசும் நீங்கள் பாஜவை எதிர்த்து பேச முடியுமா. பேசினால் நாளை காலையிலையே ரெய்டு வந்து விடும். தேவையில்லாத சேட்டை என்னிடம் வேண்டாம் என்றும் என்னிடம் இழப்பதற்கு ஒன்றும் இல்லை என கூறியுள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்